1. {#2தாவீதின் சங்கீதம். இசைக்குழுவின் தலைவனுக்கு நரம்புக் கருவிகளால் இசைக்கப்பட்டது } [QS]என் நல்ல தேவனே, நான் உம்மிடம் ஜெபிக்கையில் ஜெபத்தைக் கேட்டருளும். [QE][QS]என் விண்ணப்பத்தைக் கேளும், என்னிடம் இரக்கமாயிரும்! [QE][QS2]என் தொல்லைகளிலிருந்து எனக்கு சற்று விடுதலை தாரும்! [QE][PBR]
2. [QS]ஜனங்களே, எத்தனை நாள் என்னைக் குறித்து அவதூறு பேசுவீர்கள்? [QE][QS2]என்னைப்பற்றிச் சொல்ல புதுப்புதுப் பொய்களைத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள். [QE][QS2]நீங்கள் அப்பொய்களைச் சொல்ல விரும்புகிறீர்கள். [QE][PBR]
3. [QS]கர்த்தர் தம் நல்ல ஜனங்களின் ஜெபத்தைக் கேட்கிறார். [QE][QS2]கர்த்தரை நோக்கி ஜெபிக்கும்போது, எனக்குச் செவிகொடுக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். [QE][PBR]
4. [QS]உங்களை ஏதோ ஒன்று துன்புறுத்துவதினால், நீங்கள் கோபங்கொண்டாலும், பாவம் செய்யாதீர்கள். [QE][QS2]படுக்கைக்குச் செல்கையில் அவற்றைப் பற்றிச் சிந்தியுங்கள், அப்போது அமைதி அடைவீர்கள். [QE]
5. [QS]தேவனுக்கு நல்ல பலிகளைக் கொடுத்துக் [QE][QS2]கர்த்தர் மேல் நம்பிக்கை வையுங்கள்! [QE][PBR]
6. [QS]“நமக்கு தேவனுடைய நன்மையைக் காட்டுவது யார்? [QE][QS2]கர்த்தாவே! பிரகாசமான உமது முகத்தை நாங்கள் காணட்டும்!” [QE][QS2]என்று பலர் கூறுகிறார்கள். [QE]
7. [QS]கர்த்தாவே! நீர் எனக்கு மகிழ்ச்சியுண்டாக்கினீர்! [QE][QS2]தானியமும் திராட்சைரசமும் பெருகிய பண்டிகை நாட்களாகிய அறுவடைக் காலத்தைக் காட்டிலும் இப்போது நான் மகிழ்கிறேன். [QE]
8. [QS]நான் படுக்கைக்குச் சென்று சமாதானமாய் உறங்குகிறேன். [QE][QS2]ஏனெனில், கர்த்தாவே, நீர் என்னைப் பாதுகாப்பாய் தூங்கச் செய்கிறீர். [QE]