1. {#2தாவீதின் பாடல் } [QS]தீயோரைக் கண்டு கலங்காதே, [QE][QS2]தீய காரியங்களைச் செய்வோரைக்கண்டு பொறாமைகொள்ளாதே. [QE]
2. [QS]விரைவில் வாடி மடிந்துபோகும் புல்லைப்போன்று [QE][QS2]தீயோர் காணப்படுகிறார்கள். [QE]
3. [QS]கர்த்தரை நம்பி நல்லவற்றைச் செய்தால், [QE][QS2]பூமி கொடுக்கும் பல நற்பலன்களை நீங்கள் அனுபவித்து வாழுவீர்கள். [QE]
4. [QS]கர்த்தருக்குச் சேவைசெய்வதில் மகிழுங்கள். [QE][QS2]அவர் உங்களுக்குத் தேவையானவற்றைக் கொடுப்பார். [QE]
5. [QS]கர்த்தரைச் சார்ந்திருங்கள், அவரை நம்புங்கள், [QE][QS2]செய்யவேண்டியதை அவர் செய்வார். [QE]
6. [QS]நண்பகல் சூரியனைப்போன்று [QE][QS2]உன்னுடைய நற்குணத்தையும் நீதியையும் பிரகாசிக்க செய்வாராக. [QE]
7. [QS]கர்த்தரை நம்பு, அவர் உதவிக்காகக் காத்திரு. [QE][QS2]தீயோர் வெற்றியடையும்போது கலங்காதே. [QE][QS2]தீய ஜனங்கள் கொடிய திட்டங்களை வகுக்கும்போதும், அதில் அவர்கள் வெற்றியடையும்போதும் கலங்காதே. [QE]
8. [QS]கோபமடையாதே! [QE][QS2]மனக்குழப்பமடையாதே. தீய காரியங்களைச் செய்ய முடிவெடுக்குமளவிற்கு நீ கலக்கமடையாதே! [QE]
9. [QS]ஏனெனில் தீயோர் அழிக்கப்படுவார்கள். [QE][QS2]ஆனால் கர்த்தருடைய உதவியை நாடும் ஜனங்கள் தேவன் வாக்களித்த தேசத்தைப் பெறுவார்கள். [QE]
10. [QS]இன்னும் சில காலத்திற்குப்பின் தீயோர் இரார். [QE][QS2]அந்த ஜனங்களைத் தேடிப் பார்க்கையில் அவர்கள் அழிந்துபோயிருப்பார்கள். [QE]
11. [QS]தேவன் வாக்களித்த தேசத்தை தாழ்மையான ஜனங்கள் பெறுவார்கள். [QE][QS2]அவர்கள் சமாதானத்தை அனுபவிப்பார்கள். [QE][PBR]
12. [QS]தீயோர் நல்லோருக்கெதிராக தீய காரியங்களைத் திட்டமிடுவார்கள். [QE][QS2]நல்லோரை நோக்கிப் பற்கடித்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவார்கள். [QE]
13. [QS]ஆனால் நம் ஆண்டவர் அத்தீயோரைக் கண்டு நகைப்பார். [QE][QS2]அவர்களுக்கு நேரிடவிருப்பதை அவர் காண்கிறார். [QE]
14. [QS]தீயோர் வாளை எடுக்கிறார்கள், வில்லைக் குறிபார்க்கிறார்கள், [QE][QS2]இயலாத ஏழைகளையும், நேர்மையானவர்களையும் கொல்ல விரும்புகிறார்கள். [QE]
15. [QS]அவர்கள் வில் முறியும். [QE][QS2]அவர்கள் வாள்கள் அவர்கள் இதயங்களையே துளைக்கும். [QE]
16. [QS]ஒரு கூட்டம் தீயோரைக்காட்டிலும் [QE][QS2]நல்லோர் சிலரே சிறந்தோராவர். [QE]
17. [QS]ஏனெனில் தீயோர் அழிக்கப்படுவார்கள். [QE][QS2]கர்த்தர் நல்லோரைத் தாங்குகிறார். [QE]
18. [QS]தூய்மையுள்ளோரின் வாழ்நாள் முழுவதையும் கர்த்தர் பாதுகாக்கிறார். [QE][QS2]கர்த்தர் அவர்களுக்குத் தரும் பரிசு என்றென்றும் தொடரும். [QE]
19. [QS]தொல்லை நெருங்குகையில் நல்லோர் அழிக்கப்படுவதில்லை. [QE][QS2]பஞ்ச காலத்தில் நல்லோருக்கு மிகுதியான உணவு கிடைக்கும். [QE]
20. [QS]ஆனால் தீயோர் கர்த்தருடைய பகைவர்கள். [QE][QS2]அவர்களின் பள்ளத்தாக்குகள் வறண்டு எரிந்து போகும். [QE][QS2]அவர்கள் முற்றிலும் அழிக்கப்படுவார்கள். [QE]
21. [QS]தீய மனிதன் பணத்தைக்க கடனாகப் பெற்றுத் திரும்பச் செலுத்துவதில்லை. [QE][QS2]ஆனால் ஒரு நல்ல மனிதன் பிறருக்குத் தாராளமாகக் கொடுக்கிறான். [QE]
22. [QS]நல்லவன் ஒருவன் பிறரை ஆசீர்வதித்தால் தேவன் வாக்களித்த நிலத்தை அவர்கள் பெறுவார்கள். [QE][QS2]ஆனால் அவன் தீமை நிகழும்படி கேட்டால் அந்த ஜனங்கள் அழிக்கப்படுவார்கள். [QE]
23. [QS]ஒரு வீரன் கவனமாக நடப்பதற்குக் கர்த்தர் உதவுகிறார். [QE][QS2]அவன் விழாதபடிக் கர்த்தர் வழி நடத்துகிறார். [QE]
24. [QS]வீரன் ஓடி பகைவனை எதிர்த்தால் [QE][QS2]கர்த்தர் வீரனின் கைகளைப் பிடித்து அவன் விழாதபடி தாங்கிக் கொள்கிறார். [QE]
25. [QS]நான் இளைஞனாக இருந்தேன். [QE][QS2]இப்போது வயது முதிர்ந்தவன். [QE][QS]நல்லோரைத் தேவன் கைவிடுவிடுவதை நான் பார்த்ததில்லை. [QE][QS2]நல்லோரின் பிள்ளைகள் உணவிற்காக பிச்சையெடுப்பதை நான் பார்த்ததில்லை. [QE]
26. [QS]ஒரு நல்ல மனிதன் பிறருக்குத் தாராளமாகக் கொடுக்கிறான். [QE][QS2]நல்ல மனிதனின் பிள்ளைகள் ஆசீர்வாதமாக இருப்பார்கள். [QE]
27. [QS]தீமை செய்ய மறுத்து நல்லவற்றையே நீ செய்தால் [QE][QS2]என்றென்றும் நீ வாழ்வாய். [QE]
28. [QS]கர்த்தர் நீதியை விரும்புகிறார். [QE][QS2]அவரைப் பின்பற்றுவோரை உதவியின்றிக் கைவிட்டதில்லை. [QE][QS]கர்த்தர் அவரைப் பின்பற்றுவோரை எப்போதும் பாதுகாக்கிறார். [QE][QS2]ஆனால் கெட்ட ஜனங்களை அவர் அழித்துவிடுவார். [QE]
29. [QS]தேவன் வாக்களித்த தேசத்தை நல்லோர் பெறுவார்கள். [QE][QS2]அங்கு அவர்கள் எந்நாளும் வாழ்வார்கள். [QE]
30. [QS]ஒரு நல்ல மனிதன் நல்ல போதனையை கொடுக்கிறான். [QE][QS2]அவன் முடிவுகள் ஒவ்வொருவருக்கும் நியாயமுள்ளவைகள். [QE]
31. [QS]கர்த்தருடைய போதனைகள் அவன் இருதயத்தில் இருக்கும். [QE][QS2]அவன் நல்வழியில் வாழ்வதை விட்டு விலகான். [QE][PBR]
32. [QS]தீயோர் நல்லோரைத் துன்புறுத்தும் வழிகளை நாடுவார்கள். [QE][QS2]தீயோர் நல்லோரைக் கொல்ல முனைவார்கள். [QE]
33. [QS]அவர்கள் அவ்வாறு செயல்பட தேவன் விடார். [QE][QS2]நல்லோர் தீயோரென நியாயந்தீர்க்கப்பட கர்த்தர் விடார். [QE]
34. [QS]கர்த்தருடைய உதவிக்காகக் காத்திருங்கள், கர்த்தரைப் பின்பற்றுங்கள். [QE][QS2]தீயோர் அழிக்கப்படுவார்கள். [QE][QS2]ஆனால் கர்த்தர் உனக்கு முக்கியத்துவமளிப்பார், தேவன் வாக்களித்த தேசத்தை நீ பெறுவாய். [QE][PBR]
35. [QS]வல்லமைமிக்க தீயோரை நான் கண்டேன். [QE][QS2]அவன் பசுமையான, வலிய மரத்தைப் போலிருந்தான். [QE]
36. [QS]ஆனால் அவன் மடிந்தான், [QE][QS2]அவனை நான் தேடியபோது அவன் காணப்படவில்லை. [QE]
37. [QS]தூய்மையாகவும், உண்மையாகவும் இருங்கள். ஏனெனில் அது சமாதானத்தைத் தரும். [QE][QS2]சமாதானத்தை விரும்பும் ஜனங்களுக்கு பல சந்ததியினர் இருப்பார்கள். [QE]
38. [QS]சட்டத்தை மீறுகிற ஜனங்கள் அழிக்கப்படுவார்கள். [QE][QS2]அவர்களின் சந்ததி நாட்டை விட்டு வெளியேற நேரிடும். [QE]
39. [QS]கர்த்தர் நல்லோரை மீட்கிறார். [QE][QS2]நல்லோர் வேதனைப்படும்போது கர்த்தர் அவர்களின் பெலனாவார். [QE]
40. [QS]கர்த்தர் நல்லோருக்கு உதவிசெய்து அவர்களைப் பாதுகாக்கிறார். [QE][QS2]நல்லோர் கர்த்தரைச் சார்ந்திருப்பார்கள். [QE][QS2]அவர் அவர்களைத் தீயோரிடமிருந்து காக்கிறார். [QE]