1. {#2இராகத் தலைவனுக்கு, கர்த்தருடைய ஊழியனாகிய தாவீது கொடுத்த பாடல் } [QS]தீயவன் ஒருவன் தனக்குள், “நான் தேவனுக்கு பயப்படவோ, அவரை மதிக்கவோமாட்டேன்” எனக் கூறும்போது [QE][QS2]அவன் மிகத்தீமையான காரியத்தைச் செய்கிறான். [QE]
2. [QS]அம்மனிதன் தனக்குத்தானே பொய் பேசுகிறான். [QE][QS2]அம்மனிதன் தனது சொந்த தவறுகளைப் பார்ப்பதில்லை. [QE][QS2]எனவே அவன் மன்னிப்பும் கேட்பதில்லை. [QE]
3. [QS]அவன் வார்த்தைகள் பயனற்ற பொய்களாகும். [QE][QS2]அவன் ஞானம் பெறவுமில்லை, நல்லதைச் செய்யக் கற்றுக்கொள்ளவுமில்லை. [QE]
4. [QS]இரவில், அவன் தீய செயல்களைத் திட்டமிடுகிறான். [QE][QS2]எழுந்து, நல்லவற்றைச் செய்வதில்லை. [QE][QS2]ஆனால் தீயவற்றைச் செய்வதற்கு அவன் மறுப்பதில்லை. [QE][PBR]
5. [QS]கர்த்தாவே, உமது உண்மை அன்பு வானத்திலும் உயர்ந்தது. [QE][QS2]உம் நேர்மை மேகங்களிலும் உயர்ந்தது. [QE]
6. [QS]கர்த்தாவே, உமது நன்மை உயரமான மலைகளைக் காட்டிலும் உயர்ந்தது. [QE][QS2]உமது நியாயம் ஆழமான சமுத்திரத்திலும் ஆழமானது. [QE][QS2]கர்த்தாவே, நீர் மனிதனையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர். [QE]
7. [QS]உமது அன்பான இரக்கத்தைக் காட்டிலும் விலையுயர்ந்தது எதுவுமில்லை. [QE][QS2]ஜனங்கள் உம்மிடத்தில் அடைக்கலம் புகுகின்றனர். [QE][QS2]உமது கருணையான பாதுகாப்பில் மகிழ்கிறார்கள். [QE]
8. [QS]கர்த்தாவே, உம் வீட்டின் நற்காரியங்களால் அவர்கள் புதுவலிமை பெறுகிறார்கள். [QE][QS2]அற்புதமான நதியிலிருந்து அவர்களைப் பருகப்பண்ணுவீர். [QE]
9. [QS]கர்த்தாவே, ஜீவஊற்று உம்மிடமிருந்து புறப்படுகிறது. [QE][QS2]உமது வெளிச்சம் நாங்கள் ஒளியைக் காண உதவுகிறது. [QE]
10. [QS]கர்த்தாவே, உம்மை உண்மையில் அறியும் ஜனங்களைத் தொடர்ந்து நேசியும். [QE][QS2]உமக்கு உண்மையாயிருக்கிற அந்த ஜனங்களுக்கு உமது நன்மை எப்போதும் இருக்கட்டும். [QE]
11. [QS]கர்த்தாவே, பெருமை நிரம்பியோர் என்னை அகப்படுத்தாதிருக்கட்டும். [QE][QS2]தீயவர்கள் என்னைப் பிடிக்கவிடாதிரும். [QE]
12. [QS]“துன்மார்க்கர் இங்கே விழுந்து நசுக்கப்பட்டனர். [QE][QS2]அவர்கள் மீண்டும் எழுந்திருப்பதில்லை” என்பதை அவர்கள் கல்லறைகளில் பொறித்து வையுங்கள். [QE]