1. {#2தாவீதின் பாடல் } [QS]கர்த்தாவே, என் யுத்தங்களையும் [QE][QS2]என் போர்களையும் நீரே நடத்தும். [QE]
2. [QS]கர்த்தாவே, சிறியதும் பெரியதுமான கேடகத்தை எடுத்துக்கொள்ளும். [QE][QS2]எழுந்திருந்து எனக்கு உதவும். [QE]
3. [QS]ஈட்டியை எடுத்து என்னைத் துரத்தும் ஜனங்களோடு போரிடும். [QE][QS2]கர்த்தாவே, என் ஆத்துமாவை நோக்கி, “நான் உன்னைக் காப்பாற்றுவேன்” என்று கூறும். [QE][PBR]
4. [QS]சிலர் என்னைக் கொல்ல முயல்கிறார்கள். [QE][QS2]அவர்கள் ஏமாறவும் வெட்கமடையவும் செய்யும். அவர்கள் திரும்பி ஓடிவிடச் செய்யும். [QE][QS]அவர்கள் என்னைக் காயப்படுத்தத் திட்டமிடுகிறார்கள். [QE][QS2]அவர்களை வெட்கமடையச் செய்யும். [QE]
5. [QS]காற்றால் பறக்கடிக்கும் பதரைப்போல் அவர்களை மாற்றும். [QE][QS2]கர்த்தருடைய தூதன் அவர்களைத் துரத்தட்டும். [QE]
6. [QS]கர்த்தாவே, அவர்களின் பாதை இருளாகவும், வழுக்கலுடையதாகவும் ஆகட்டும். [QE][QS2]கர்த்தருடைய தூதன் அவர்களைத் துரத்தட்டும். [QE]
7. [QS]நான் பிழையேதும் செய்யவில்லை. [QE][QS2]ஆனால் அவர்கள் என்னைத் தங்கள் கண்ணியில் சிக்கவைக்க முயல்கிறார்கள். [QE][QS2]காரணமின்றி அவர்கள் என்னைச் சிக்கவைக்க முயல்கிறார்கள். [QE]
8. [QS]எனவே கர்த்தாவே, அவர்களே தங்கள் கண்ணிகளில் விழட்டும். [QE][QS2]அவர்கள் தங்கள் வலைகளில் தடுமாறட்டும். [QE][QS2]அறியாத தீங்கு அவர்களைப் பிடிக்கட்டும். [QE]
9. [QS]அப்போது நான் கர்த்தரில் களிகூருவேன். [QE][QS2]அவர் என்னை மீட்கும்போது நான் சந்தோஷம்கொள்வேன். [QE]
10. [QS]“கர்த்தாவே, உம்மைப் போன்றோர் யாருமில்லை. [QE][QS2]கர்த்தாவே, பலமான ஜனங்களிடமிருந்து நீர் ஏழையைக் காப்பாற்றுகிறீர். [QE][QS]ஏழையினும் கீழ்ப்பட்ட ஏழைகளின் பொருள்களைக் கவரும் கயவர்களிடமிருந்து [QE][QS2]அவர்களைக் காப்பாற்றுகிறீர்” என்று என் முழு மனதோடும் கூறுவேன். [QE]
11. [QS]சாட்சிகள் சிலர் என்னைத் துன்புறுத்தத் திட்டமிடுகின்றனர். [QE][QS2]அந்த ஜனங்கள் கேள்விகள் எழுப்புகின்றனர். [QE][QS2]அவர்கள் பேசுவதைக் குறித்து நான் அறியேன். [QE]
12. [QS]நான் நற்காரியங்களையே செய்திருக்கிறேன். [QE][QS2]ஆனால் அந்த ஜனங்கள் எனக்குத் தீய காரியங்களைச் செய்கின்றனர். [QE][QS2]கர்த்தாவே, தகுதியான நற்காரியங்களை எனக்குத் தாரும். [QE]
13. [QS]அந்த ஜனங்கள் நோயுற்றபோது, அவர்களுக்காக வருந்தினேன். [QE][QS2]உணவு உண்ணாமல் என் துக்கத்தை வெளிப்படுத்தினேன். [QE][QS2]அவர்களுக்காக ஜெபித்ததினால் நான் பெறும் பலன் இதுவா? [QE]
14. [QS]அந்த ஜனங்களுக்காகத் துக்கத்தின் ஆடைகளை உடுத்திக்கொண்டேன். [QE][QS2]அந்த ஜனங்களை என் நண்பர்களைப் போலவும், என் சகோதரர்களைப்போலவும் நடத்தினேன். [QE][QS]தாயை இழந்த மனிதன் அழுவதைப்போன்று நான் துக்கமுற்றேன். [QE][QS2]அந்த ஜனங்களுக்காக என் துக்கத்தை வெளிப்படுத்துவதற்குக் கறுப்பு நிற ஆடைகளை உடுத்திக் கொண்டேன். [QE][QS2]துக்கத்தால் தலை குனிந்து நடந்தேன். [QE]
15. [QS]ஆனால் என் தவற்றுக்கு அந்த ஜனங்கள் நகைத்தனர். [QE][QS2]அந்த ஜனங்கள் உண்மை நண்பர்கள் அல்ல. [QE][QS]ஜனங்களை நான் அறிந்திருக்கவில்லை. [QE][QS2]அந்த ஜனங்கள் என்னைச் சூழ்ந்து தாக்கினார்கள். [QE]
16. [QS]அவர்கள் தீய மொழிகளைப் பேசி என்னைப் பரிகசித்தார்கள். [QE][QS2]அவர்கள் பற்களைக் கடித்துத் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினார்கள். [QE][PBR]
17. [QS]என் ஆண்டவரே, அத்தீய காரியங்கள் நடப்பதை எத்தனைக் காலம் பொறுத்திருப்பீர்? [QE][QS2]அந்த ஜனங்கள் என்னை அழிக்க முயலுகிறார்கள். [QE][QS2]கர்த்தாவே, என் உயிரைக் காப்பாற்றும் குரூரமான சிங்கம் போன்றவர்களாகிய அத்தீயோரிடமிருந்து என் ஆருயிரைக் காப்பாற்றும். [QE][PBR]
18. [QS]கர்த்தாவே, பெரும் சபையில் உம்மைத் துதிப்பேன். [QE][QS2]வல்லமைமிக்க ஜனங்கள் மத்தியில் உம்மைத் துதிப்பேன். [QE]
19. [QS]பொய் பேசுகிற என் பகைவர்கள் எப்போதும் நகைத்துக்கொண்டிருக்க முடியாது. [QE][QS2]தங்களின் இரகசிய திட்டங்களுக்காக என் பகைவர்கள் கண்டிப்பாகத் தண்டனை பெறுவார்கள். [QE]
20. [QS]என் பகைவர்கள் சமாதானத்திற்கான திட்டங்களை நிச்சயமாக வகுக்கவில்லை. [QE][QS2]இந்நாட்டிலுள்ள சமாதானமான ஜனங்களுக்குத் தீமைகள் செய்வதற்கு இரகசிய திட்டங்களை அவர்கள் வகுக்கிறார்கள். [QE]
21. [QS]என் பகைவர்கள் என்னைக்குறித்துத் தீய காரியங்களையே பேசுகிறார்கள். [QE][QS2]அவர்கள் மகிழ்ச்சியடைந்து “ஆஹா! [QE][QS2]நீ என்ன செய்கிறாய் என்பதை நாங்கள் அறிவோம்” என்கிறார்கள். [QE]
22. [QS]கர்த்தாவே, உண்மையில் நடப்பவற்றை நீர் நிச்சயமாகப் பார்க்கமுடியும். [QE][QS2]எனவே சும்மா இராதேயும். [QE][QS2]என்னை விட்டு விலகாதேயும். [QE]
23. [QS]கர்த்தாவே விழித்தெழும், எழுந்திரும். [QE][QS2]என் தேவனே, என் ஆண்டவரே, எனக்காகப் போரிட்டு நியாயமளியும். [QE]
24. [QS]எனது தேவனாகிய கர்த்தாவே, தக்க முறையில் என்னை நியாயந்தீரும். [QE][QS2]அந்த ஜனங்கள் என்னைப் பார்த்து நகைக்கவிடாதேயும். [QE]
25. [QS]அந்த ஜனங்கள், “ஆஹா! [QE][QS2]எங்களுக்கு வேண்டியதைப் பெற்றோம்” எனக் கூறவிடாதேயும். [QE][QS2]கர்த்தாவே, “நாங்கள் அவனை அழித்தோம்!” [QE][QS2]என அவர்கள் கூறவிடாதேயும். [QE]
26. [QS]என் பகைவர்கள் வெட்கி, நாணுவார்கள் என நம்புகிறேன். [QE][QS2]எனக்குத் தீயக் காரியங்கள் நிகழ்ந்தபோது அந்த ஜனங்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். [QE][QS]என்னைக் காட்டிலும் தாங்கள் சிறந்தவர்கள் என்று அவர்கள் எண்ணினார்கள். [QE][QS2]எனவே அந்த ஜனங்கள் வெட்கத்தினாலும் இழிவினாலும் மூடப்படட்டும். [QE]
27. [QS]எனக்கு நல்ல காரியங்கள் நிகழட்டுமென்று சில ஜனங்கள் விரும்புகிறார்கள். [QE][QS2]அந்த ஜனங்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழுவார்கள் என நான் நம்புகிறேன். [QE][QS]அந்த ஜனங்கள் எப்போதும், “கர்த்தர் மேன்மையானவர்! [QE][QS2]அவரது வேலையாளுக்கு நல்லது எதுவோ அதையே அவர் விரும்புவார்” என்று கூறுகிறார்கள். [QE][PBR]
28. [QS]எனவே கர்த்தாவே, நீர் எவ்வளவு நல்லவர் என்பதை ஜனங்களுக்குக் கூறுவேன். [QE][QS2]ஒவ்வொரு நாளும் நான் உம்மைத் துதிப்பேன். [QE]