1. நான் எந்த காலத்திலும் கர்த்தரை ஸ்தோத்தரிப்பேன். [QBR2] என் உதடுகள் எப்போதும் அவரைத் துதிக்கும். [QBR]
2. தாழ்மையான ஜனங்களே, செவிக்கொடுத்து மகிழுங்கள். [QBR2] என் ஆத்துமா கர்த்தரைக் குறித்துப் பெருமைகொள்ளும். [QBR]
3. தேவனுடைய மேன்மையை எனக்குக் கூறுங்கள். [QBR2] அவரது நாமத்தை என்னோடு சேர்ந்து துதியுங்கள். [QBR]
4. உதவிவேண்டி தேவனிடம் போனேன். [QBR2] அவர் கேட்டார், நான் அஞ்சிய எல்லாக் காரியங்களிலிருந்தும் அவர் என்னை மீட்டார். [QBR]
5. உதவிக்காக தேவனை நாடுங்கள். [QBR2] அவர் உங்களை ஏற்றுக்கொள்ளுவார். வெட்க மடையாதீர்கள். [QBR]
6. இந்த ஏழை உதவிக்காகக் கர்த்தரைக் கூப்பிட்டான். [QBR2] கர்த்தர் எனக்குச் செவிகொடுத்தார். [QBR2] என் தொல்லைகளிலிருந்து என்னை மீட்டார். [QBR]
7. கர்த்தரை நம்புவோரைச் சுற்றிலும் கர்த்தருடைய தூதன் ஒரு பாளையமிடுகிறான். [QBR2] கர்த்தருடைய தூதன் அவர்களைக் காத்து அவர்களுடைய துன்பங்களிலிருந்து விடுதலை அளிக்கிறான். [QBR]
8. கர்த்தரை நல்லவர் என்று ருசித்து அறியுங்கள். [QBR2] கர்த்தரைச் சார்ந்து வாழும் மனிதன் உண்மையாகவே சந்தோஷமடைவான். [QBR]
9. கர்த்தருடைய பரிசுத்த ஜனங்கள் அவரைத் தொழுதுகொள்ளட்டும். [QBR2] கர்த்தரைப் பின்பற்றுவோருக்கு வேறெந்த அடைக்கலமும் தேவையில்லை. [QBR]
10. வல்லமையுள்ள ஜனங்கள் சோர்ந்து பசியடைவார்கள். [QBR2] ஆனால் தேவனிடம் உதவி வேண்டிச் செல்வோர் நல்லவற்றையெல்லாம் அடைவார்கள். [QBR]
11. பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள். [QBR2] கர்த்தரை எப்படி மதிக்கவேண்டுமென்று உங்களுக்குப் போதிப்பேன். [QBR]
12. தன் வாழ்க்கையை நேசித்து, நீண்ட ஆயுளை விரும்பும், [QBR]
13. மனிதன் தீயவற்றைப் பேசக்கூடாது. [QBR2] அம்மனிதன் பொய் பேசக்கூடாது. [QBR]
14. தீமை செய்வதை அவன் விட்டுவிட வேண்டும். [QBR2] நல்லவற்றைச் செய். சமாதானத்திற்காகப் பாடுபடு. [QBR2] அதை அடையும்வரை அதற்கென முயற்சி செய். [QBR]
15. நல்லோரைக் கர்த்தர் பாதுகாக்கிறார். [QBR2] அவர்கள் ஜெபங்களை அவர் கேட்கிறார். [QBR]
16. கர்த்தர் தீயோருக்கு எதிரானவராயிருந்து [QBR2] அவர்களை முற்றிலும் அழிக்கிறார்.
17. கர்த்தரிடம் ஜெபியுங்கள். [QBR2] அவர் உங்கள் விண்ணப்பங்களைக் கேட்பார். [QBR2] உங்கள் எல்லாத் தொல்லைகளிலிருந்தும் உங்களைக் காப்பார். [QBR]
18. சிலருக்குத் தொல்லைகள் மிகுதியாகும்பொழுது அவர்கள் பெருமையை விட்டொழிப்பர். [QBR2] கர்த்தர் அவர்களருகே இருந்து தாழ்மையான அந்த ஜனங்களைக் காக்கிறார். [QBR]
19. நல்லோருக்குத் தொல்லைகள் பல நேரிட்டாலும் [QBR2] அவர்கள் தொல்லைகளிலிருந்து கர்த்தர் அவர்களை மீட்பார். [QBR]
20. அவர்கள் எலும்புகளில் ஒன்றும் முறிந்து போகாதபடி [QBR2] கர்த்தர் அவற்றைப் பாதுகாப்பார். [QBR]
21. தீயோரைத் தொல்லைகள் கொல்லும். [QBR2] நல்லோரின் பகைவர்கள் அழிக்ப்படுவார்கள். [QBR]
22. தமது ஊழியர்களின் ஆத்துமாக்களைக் கர்த்தர் மீட்கிறார். [QBR2] அவரைச் சார்ந்திருக்கும் ஜனங்களை அழியவிடமாட்டார். [PE]