1. [QS]நல்லோரே, கர்த்தருக்குள் களிப்படையுங்கள்! [QE][QS2]நல்ல நேர்மையான ஜனங்களே, அவரைத் துதியுங்கள்! [QE]
2. [QS]சுரமண்டலத்தை இசைத்துக் கர்த்தரைத் துதியுங்கள்! [QE][QS2]பத்து நரம்பு வீணையை இசைத்து கர்த்தரைப் பாடுங்கள். [QE]
3. [QS]புதுப்பாட்டை அவருக்குப் பாடுங்கள்! [QE][QS2]மகிழ்ச்சியான இராகத்தை இனிமையாய் மீட்டுங்கள். [QE]
4. [QS]தேவனுடைய வாக்கு உண்மையானது! [QE][QS2]அவர் செய்பவற்றை உறுதியாக நம்புங்கள்! [QE]
5. [QS]நன்மையையும் நேர்மையையும் தேவன் நேசிக்கிறார். [QE][QS2]கர்த்தர் பூமியை அவரது அன்பினால் நிப்பியுள்ளார். [QE]
6. [QS]கர்த்தர் கட்டளையிட, உலகம் உருவாயிற்று. [QE][QS2]தேவனுடைய வாயின் மூச்சு பூமியிலுள்ள அனைத்தையும் உருவாக்கிற்று. [QE]
7. [QS]கடலின் தண்ணீரை ஒரே இடத்தில் தேவன் ஒன்று திரட்டினார். [QE][QS2]அவர் சமுத்திரத்தை அதற்குரிய இடத்தில் வைக்கிறார். [QE]
8. [QS]பூமியிலுள்ளோர் யாவரும் கர்த்தருக்குப் பயந்து அவரை மதிக்கவேண்டும். [QE][QS2]உலகில் வாழும் ஜனங்கள் எல்லோரும் அவருக்கு அஞ்ச வேண்டும். [QE]
9. [QS]ஏனெனில் தேவன் கட்டளையிட, அக்காரியம் நிறைவேறுகிறது. [QE][QS2]அவர் “நில்!” எனக்கூற அக்காரியம் நின்றுவிடும். [QE]
10. [QS]எல்லோருடைய அறிவுரையையும் பயனற்றுப்போகச் செய்ய கர்த்தராலாகும். [QE][QS2]அவர்கள் திட்டங்களை கர்த்தர் அழிக்கக் கூடும். [QE]
11. [QS]கர்த்தருடைய அறிவுரை என்றென்றும் நல்லது. [QE][QS2]தலைமுறை தலைமுறைக்கும் அவர் திட்டங்கள் நன்மை தரும். [QE]
12. [QS]கர்த்தரை தேவனாக ஏற்றுக்கொண்ட ஜனங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். [QE][QS2]தேவன் தனது சொந்த ஜனங்களாக அவர்களைத் தேர்ந்தெடுத்தார். [QE]
13. [QS]பரலோகத்திலிருந்து கர்த்தர் கீழே பார்த்து, [QE][QS2]எல்லா ஜனங்களையும் கண்டார். [QE]
14. [QS]அவரது உயர்ந்த சிங்காசனத்திலிருந்து [QE][QS2]பூமியில் வாழும் மனிதர்களையெல்லாம் பார்த்தார். [QE]
15. [QS]ஒவ்வொருவனின் மனதையும் தேவன் படைத்தார். [QE][QS2]ஒவ்வொருவனின் எண்ணத்தையும் தேவன் அறிகிறார். [QE]
16. [QS]அரசன் தனது சொந்த வல்லமையால் காப்பாற்றப்படுவதில்லை. [QE][QS2]ஒரு வீரன் தனது மிகுந்த பெலத்தால் காப்பாற்றப்படுவதில்லை. [QE]
17. [QS]போரில் குதிரைகள் உண்மையான வெற்றியைத் தருவதில்லை. [QE][QS2]அவற்றின் ஆற்றல் நம்மை தப்புவிக்க வகை செய்வதேயில்லை. [QE]
18. [QS]கர்த்தர் அவரைப் பின்பற்றுவோரை கவனித்துக் காப்பாற்றுகிறார். [QE][QS2]அவரது பேரன்பு அவரை தொழுதுகொள்வோரைக் காக்கும். [QE]
19. [QS]தேவன் அந்த ஜனங்களை மரணத்தினின்று காக்கிறார். [QE][QS2]அவர்கள் பசித்திருக்கையில் அவர் பெலனளிக்கிறார். [QE]
20. [QS]எனவே நாம் கர்த்தருக்காகக் காத்திருப்போம். [QE][QS2]அவரே நமக்கு உதவியும் கேடகமுமாயிருக்கிறார். [QE]
21. [QS]தேவன் என்னை மகிழ்ச்சியடையச் செய்கிறார். [QE][QS2]அவரது பரிசுத்த நாமத்தை நான் உண்மையாக நம்புகிறேன். [QE]
22. [QS]கர்த்தாவே, நாங்கள் உம்மை உண்மையாக தொழுதுகொள்கிறோம்! [QE][QS2]உமது பேரன்பை எங்களுக்குக் காண்பியும். [QE]