1. {#2இசைத்தலைவனுக்காக தாவீது பாடிய பாடல் } [QS]கர்த்தாவே, நான் உம்மை நம்பியிருக்கிறேன். [QE][QS2]என்னை ஏமாற்றாதேயும். என்னிடம் தயவாயிருந்து என்னைக் காப்பாற்றும். [QE]
2. [QS]தேவனே, எனக்குச் செவிகொடும். [QE][QS2]விரைந்து வந்து என்னைக் காப்பாற்றும். [QE][QS]எனது பாறையாய் இரும். எனக்குப் பாதுகாப்பான இடமாயிரும். [QE][QS2]எனக்குக் கோட்டையாயிரும். என்னைப் பாதுகாத்தருளும். [QE]
3. [QS]தேவனே, நீரே என் பாறை. [QE][QS2]எனவே, உமது நாமத்தின் நன்மையால் என்னை நடத்தி, வழி காட்டும். [QE]
4. [QS]என் பகைவர்கள் எனக்கு முன்னே கண்ணியை வைத்தார்கள். [QE][QS2]அவர்கள் கண்ணிக்கு என்னைக் காப்பாற்றும். நீரே என் பாதுகாப்பிடம் ஆவீர். [QE]
5. [QS]கர்த்தாவே, நான் நம்பவல்ல தேவன் நீரே. [QE][QS2]என் உயிரை உமது கரங்களில் நான் வைத்தேன். என்னைக் காப்பாற்றும்! [QE]
6. [QS]பொய்த் தெய்வங்களைத் தொழுது கொள்ளும் ஜனங்களை நான் வெறுக்கிறேன். [QE][QS2]கர்த்தரை மட்டுமே நான் நம்புகிறேன். [QE]
7. [QS]தேவனே, உமது தயவு எனக்கு மிகுந்த களிப்பூட்டுகிறது. [QE][QS2]நீர் எனது தொல்லைகளைக் கண்டுள்ளீர். [QE][QS2]என் தொல்லைகளை நீர் அறிகிறீர். [QE]
8. [QS]எனது பகைவர்கள் என்னை வெற்றிகொள்ள விடமாட்டீர். [QE][QS2]அவர்கள் கண்ணிகளிலிருந்து என்னை விடுவியும். [QE]
9. [QS]கர்த்தாவே, எனக்குத் தொல்லைகள் பல உண்டு, எனவே என்னிடம் தயவாயிரும். [QE][QS2]என் மனத் துன்பத்தினால் என் கண்கள் நோகின்றன. [QE][QS2]என் தொண்டையும் வயிறும் வலிக்கின்றன. [QE]
10. [QS]என் வாழ்க்கைத் துயரத்தில் முடிந்து கொண்டிருக்கிறது. [QE][QS2]பெருமூச்சால் என் வயது கழிந்து போகிறது. [QE][QS]என் தொல்லைகள் என் வலிமையை அழிக்கின்றன. [QE][QS2]என் ஆற்றல் என்னை விட்டு விலகிக் கொண்டிருக்கிறது. [QE]
11. [QS]என் பகைவர்கள் என்னை வெறுக்கிறார்கள். [QE][QS2]என் அக்கம் பக்கத்தாரும் என்னை வெறுக்கிறார்கள். [QE][QS]என் உறவினர்கள் தெருவில் என்னைப் பார்க்கிறார்கள். [QE][QS2]அவர்கள் எனக்குப் பயந்து என்னை விட்டு விலகுகிறார்கள். [QE]
12. [QS]காணாமற்போன கருவியைப் போலானேன். [QE][QS2]ஜனங்கள் என்னை முற்றிலும் மறந்தார்கள். [QE]
13. [QS]ஜனங்கள் என்னைக்குறித்துப் பேசும் கொடிய காரியங்களை நான் கேட்டேன். [QE][QS2]அந்த ஜனங்கள் எனக்கு எதிராகத் திரும்பினார்கள். [QE][QS2]அவர்கள் என்னைக் கொல்லத் திட்டமிடுகிறார்கள். [QE][PBR]
14. [QS]கர்த்தாவே, நான் உம்மை நம்புகிறேன். [QE][QS2]நீரே என் தேவன். [QE]
15. [QS]என் உயிர் உமது கைகளில் உள்ளது. [QE][QS2]என் பகைவரிடமிருந்து என்னைக் காப்பாற்றும். [QE][QS]சில ஜனங்கள் என்னைத் துரத்துகிறார்கள். [QE][QS2]அவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும். [QE]
16. [QS]உமது வேலையாளை வரவேற்று ஏற்றுக்கொள்ளும். [QE][QS2]என்னிடம் தயவாயிருந்து என்னைக் காப்பாற்றும்! [QE]
17. [QS]கர்த்தாவே, உம்மிடம் ஜெபித்தேன். [QE][QS2]எனவே நான் ஏமாந்து போகமாட்டேன். [QE][QS]தீயோர் ஏமாந்து போவார்கள். [QE][QS2]அமைதியாக கல்லறைக்குச் செல்வார்கள். [QE]
18. [QS]அத்தீயோர் நல்லோரைக் குறித்துத் தீமையும் பொய்யும் உரைப்பார்கள். [QE][QS2]அத்தீயோர் பெருமைக்காரர். [QE][QS2]ஆனால் அவர்களின் பொய் கூறும் உதடுகள் அமைதியாகிவிடும். [QE][PBR]
19. [QS]தேவனே, உம்மைப் பின்பற்றுவோருக்காக பல அதிசயமான காரியங்களை நீர் மறைவாய் வைத்திருக்கிறீர். [QE][QS2]உம்மை நம்பும் ஜனங்களுக்கு எல்லோர் முன்பாகவும் நற்காரியங்களைச் செய்கிறீர். [QE]
20. [QS]தீயோர் நல்லோரைத் தாக்க ஒருமித்துக் கூடுகிறார்கள். [QE][QS2]அத்தீயோர் சண்டையிட முயல்கிறார்கள். [QE][QS]ஆனால் அந்நல்லோரை மறைத்து அவர்களைக் காப்பாற்றும். [QE][QS2]உமது அடைக்கலத்தில் வைத்து அவர்களைப் பாதுகாத்தருளும். [QE]
21. [QS]கர்த்தருக்கு ஸ்தோத்திரம். [QE][QS2]நகரம் பகைவர்களால் சூழப்பட்டபோது அவர் தம் உண்மையான அன்பை அதிசயமாக எனக்கு வெளிப்படுத்தினார். [QE]
22. [QS]நான் அஞ்சினேன், “தேவன் பார்க்கமுடியாத இடத்தில் நான் இருக்கிறேன்” என்றேன். [QE][QS2]ஆனால் தேவனே, நான் உம்மிடம் ஜெபித்தேன். [QE][QS2]உதவிக்கான என் உரத்த ஜெபங்களை நீர் கேட்டீர். [QE][PBR]
23. [QS]தேவனைப் பின்பற்றுவோரே, நீங்கள் கர்த்தரை நேசியுங்கள். [QE][QS2]தம்மிடம் விசுவாசமுள்ள ஜனங்களை கர்த்தர் காக்கிறார். [QE][QS]ஆனால் தங்கள் வல்லமையைக் குறித்துப் பெருமை பாராட்டுவோரை கர்த்தர் தண்டிக்கிறார். [QE][QS2]அவர்களுக்கான தண்டனையை தேவன் அளிக்கிறார். [QE]
24. [QS]கர்த்தருடைய உதவிக்காகக் காத்துக் கொண்டிருக்கிற ஜனங்களே, [QE][QS2]வலிமையும் துணிவும் உடையோராயிருங்கள்! [QE]