1. {#2தாவீது பாடிய பாடல்களுள் ஒன்று. ஆலயத்தின் அர்ப்பணிப்புக்காகப் பாடிய பாடல். } [QS]கர்த்தாவே, என் தொல்லைகளினின்று என்னை விடுவித்தீர். [QE][QS2]எனது பகைவர்கள் என்னைத் தோற்கடித்து என்னை நோக்கி நகைக்காமல் இருக்கச் செய்தீர். [QE][QS2]எனவே நான் உம்மை கனப்படுத்துவேன். [QE]
2. [QS]என் தேவனாகிய கர்த்தாவே, நான் உம்மிடம் ஜெபித்தேன். [QE][QS2]நீர் என்னைக் குணமாக்கினீர். [QE]
3. [QS]கல்லறையினின்று என்னை விடுவித்தீர். [QE][QS2]என்னை வாழவிட்டீர். [QE][QS2]குழிகளில் இருக்கும் பிணங்களோடு நான் தங்கியிருக்க நேரவில்லை. [QE][PBR]
4. [QS]தேவனைப் பின்பற்றுவோர் கர்த்தருக்குத் துதிகளைப் பாடுவார்கள்! [QE][QS2]அவரது பரிசுத்த நாமத்தைத் துதியுங்கள்! [QE]
5. [QS]தேவன் கோபங்கொண்டார். அதன் முடிவு “மரணமே”. [QE][QS2]ஆனால் அவர் அன்பை வெளிப்படுத்தினார், எனக்கு “உயிரைக்” கொடுத்தார். [QE][QS]இரவில் அழுதபடி படுத்திருந்தேன். [QE][QS2]மறுநாள் காலையில் மகிழ்ச்சியோடு பாடிக்கொண்டிருந்தேன்! [QE][PBR]
6. [QS]இப்போது இவ்வாறு நான் கூறமுடியும். [QE][QS2]அது உண்மையென நிச்சயமாய் நான் அறிவேன். [QE][QS2]“நான் ஒருபோதும் தோற்கடிக்கப்படமாட்டேன்!” [QE]
7. [QS]கர்த்தாவே, என்னிடம் தயவாயிருந்தீர். [QE][QS2]எதுவும் என்னை வெல்ல முடியாது என உணர்ந்தேன். [QE][QS]சிலகாலம், நீர் என்னை விட்டு விலகினீர், [QE][QS2]நான் மிகவும் பயந்தேன். [QE]
8. [QS]தேவனே, நான் உம்மிடம் திரும்பி ஜெபித்தேன். [QE][QS2]எனக்கு இரக்கம் காட்டுமாறு வேண்டினேன். [QE]
9. [QS]நான், “தேவனே, நான் மரித்துக் கல்லறைக்குள் அடக்கம் பண்ணப்பட்டால் என்ன பயன்? [QE][QS2]மரித்தோர் புழுதியில் கிடப்பார்கள். [QE][QS]அவர்கள் உம்மைத் துதிப்பதில்லை! [QE][QS2]என்றென்றும் தொடரும் உம் நன்மையை அவர்கள் பேசார்கள்” என்றேன். [QE]
10. [QS]கர்த்தாவே என் ஜெபத்தைக் கேளும். [QE][QS2]என்னிடம் தயவாயிரும்! [QE][QS2]கர்த்தாவே, எனக்கு உதவும். [QE]
11. [QS]நான் ஜெபித்தேன், நீர் எனக்கு உதவினீர்! [QE][QS2]என் அழுகையை நடனக்களிப்பாய் மாற்றினீர். [QE][QS]அழுகையின் ஆடைகளை நீர் அகற்றிப்போட்டீர். [QE][QS2]மகிழ்ச்சியால் என்னைப் பொதிந்து வைத்தீர். [QE]
12. [QS]எனது தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றும் நான் துதிப்பேன். [QE][QS2]ஒருபோதும் அமைதியாயிராமல் நான் இதைச் செய்வேன். [QE][QS2]எப்போதும் யாராவது ஒருவர் உம்மை கனப்படுத்திக் கொண்டிருப்பார்கள். [QE]