1. கர்த்தாவே, என் தொல்லைகளினின்று என்னை விடுவித்தீர். [QBR2] எனது பகைவர்கள் என்னைத் தோற்கடித்து என்னை நோக்கி நகைக்காமல் இருக்கச் செய்தீர். [QBR2] எனவே நான் உம்மை கனப்படுத்துவேன். [QBR]
2. என் தேவனாகிய கர்த்தாவே, நான் உம்மிடம் ஜெபித்தேன். [QBR2] நீர் என்னைக் குணமாக்கினீர். [QBR]
3. கல்லறையினின்று என்னை விடுவித்தீர். [QBR2] என்னை வாழவிட்டீர். [QBR2] குழிகளில் இருக்கும் பிணங்களோடு நான் தங்கியிருக்க நேரவில்லை.
4. தேவனைப் பின்பற்றுவோர் கர்த்தருக்குத் துதிகளைப் பாடுவார்கள்! [QBR2] அவரது பரிசுத்த நாமத்தைத் துதியுங்கள்! [QBR]
5. தேவன் கோபங்கொண்டார். அதன் முடிவு “மரணமே”. [QBR2] ஆனால் அவர் அன்பை வெளிப்படுத்தினார், எனக்கு “உயிரைக்” கொடுத்தார். [QBR] இரவில் அழுதபடி படுத்திருந்தேன். [QBR2] மறுநாள் காலையில் மகிழ்ச்சியோடு பாடிக்கொண்டிருந்தேன்!
6. இப்போது இவ்வாறு நான் கூறமுடியும். [QBR2] அது உண்மையென நிச்சயமாய் நான் அறிவேன். [QBR2] “நான் ஒருபோதும் தோற்கடிக்கப்படமாட்டேன்!” [QBR]
7. கர்த்தாவே, என்னிடம் தயவாயிருந்தீர். [QBR2] எதுவும் என்னை வெல்ல முடியாது என உணர்ந்தேன். [QBR] சிலகாலம், நீர் என்னை விட்டு விலகினீர், [QBR2] நான் மிகவும் பயந்தேன். [QBR]
8. தேவனே, நான் உம்மிடம் திரும்பி ஜெபித்தேன். [QBR2] எனக்கு இரக்கம் காட்டுமாறு வேண்டினேன். [QBR]
9. நான், “தேவனே, நான் மரித்துக் கல்லறைக்குள் அடக்கம் பண்ணப்பட்டால் என்ன பயன்? [QBR2] மரித்தோர் புழுதியில் கிடப்பார்கள். [QBR] அவர்கள் உம்மைத் துதிப்பதில்லை! [QBR2] என்றென்றும் தொடரும் உம் நன்மையை அவர்கள் பேசார்கள்” என்றேன். [QBR]
10. கர்த்தாவே என் ஜெபத்தைக் கேளும். [QBR2] என்னிடம் தயவாயிரும்! [QBR2] கர்த்தாவே, எனக்கு உதவும். [QBR]
11. நான் ஜெபித்தேன், நீர் எனக்கு உதவினீர்! [QBR2] என் அழுகையை நடனக்களிப்பாய் மாற்றினீர். [QBR] அழுகையின் ஆடைகளை நீர் அகற்றிப்போட்டீர். [QBR2] மகிழ்ச்சியால் என்னைப் பொதிந்து வைத்தீர். [QBR]
12. எனது தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றும் நான் துதிப்பேன். [QBR2] ஒருபோதும் அமைதியாயிராமல் நான் இதைச் செய்வேன். [QBR2] எப்போதும் யாராவது ஒருவர் உம்மை கனப்படுத்திக் கொண்டிருப்பார்கள். [PE]