1. {தன் குமாரனாகிய அப்சலோமிடமிருந்து தப்பிச் சென்றபோது தாவீது பாடிய பாட்டு} [PS] கர்த்தாவே, எனக்குப் பகைவர்கள் அநேகர், [QBR2] பல ஜனங்கள் எனக்கெதிராக எழும்புகின்றனர். [QBR]
2. பலர் என்னைக் குறித்து, “தேவன் அவனைத் தொல்லையிலிருந்து மீட்கமாட்டார்!” என்று பேசுகின்றனர்.
3. ஆனால் கர்த்தாவே, நீரே எனக்குக் கேடகம். நீரே என் மகிமை. [QBR2] கர்த்தாவே, நீர் என்னை பிரதானமானவனாக்குகிறீர்! [QBR]
4. நான் கர்த்தரிடம் ஜெபிப்பேன். [QBR2] அவரது பரிசுத்த மலையிலிருந்து அவர் எனக்குப் பதில் தருவார்.
5. நான் படுத்து ஓய்வெடுக்க முடியும், நான் எழும்புவேன் என்பதும் எனக்குத் தெரியும். [QBR2] இதை நான் எப்படி அறிவேன்? கர்த்தர் என்னை மூடிப் பாதுகாக்கிறார்! [QBR]
6. ஆயிரம் வீரர்கள் என்னைச் சூழக்கூடும். [QBR2] ஆனால் நான் அப்பகைவர்களுக்கு அஞ்சேன்!
7. கர்த்தாவே, எழும்பும்! [QBR2] எனது தேவனே, வந்து என்னைப் பாதுக்காப்பீராக! [QBR] நீர் வல்லமையுள்ளவர்! [QBR2] என் தீய பகைவரைக் கன்னத்தில் நீர் அறைந்தால் அவர்கள் பற்களெல்லாம் நொறுங்கும்.
8. கர்த்தரே தம் ஜனங்களைப் பாதுக்காக்கிறார். [QBR2] கர்த்தாவே, உம்முடைய ஜனங்களுக்கு நல்லவராயிரும். [PE]