1. {தாவீதின் பாடல்} [PS] தேவனுடைய புத்திரரே, கர்த்தரைத் துதியுங்கள்! [QBR2] அவரது மகிமையையும் வல்லமையையும் துதியுங்கள். [QBR]
2. கர்த்தரைத் துதித்து அவர் நாமத்தை கனப்படுத்துங்கள்! [QBR2] உங்கள் விசேஷ ஆடைகளை அணிந்து அவரைத் தொழுதுகொள்ளுங்கள். [QBR]
3. கடலின்மேல் கர்த்தர் தமது குரலை எழுப்புகிறார். [QBR2] மகிமைபொருந்திய தேவனுடைய குரல் பெரும் சமுத்திரத்தின்மேல் இடியாய் முழங்கும். [QBR]
4. கர்த்தருடைய குரல் அவர் வல்லமையைக் காட்டும். [QBR2] அவரது குரல் அவர் மகிமையைக் காட்டும். [QBR]
5. கர்த்தருடைய குரல் பெரிய கேதுரு மரங்களையும் சின்னஞ்சிறு துண்டுகளாக்கும். [QBR2] லீபனோனின் பெரிய கேதுரு மரங்களை கர்த்தர் உடைத்தெறிகிறார். [QBR]
6. கர்த்தர் லீபனோனைக் குலுக்குகிறார். [QBR2] இளங்கன்று நடனமாடினாற்போன்று அது தோன்றுகிறது. [QBR] எர்மோன் மலை நடுங்குகிறது. [QBR2] இளமையான வெள்ளாடு குதிப்பதைப்போன்று அது தோன்றுகிறது. [QBR]
7. கர்த்தருடைய குரல் மின்னலைப்போல் ஒளிவிட்டுத் தாக்குகிறது. [QBR]
8. கர்த்தருடைய குரல் பாலைவனத்தைக் குலுக்குகிறது. [QBR2] கர்த்தருடைய குரலால் காதேஸ் பாலைவனம் நடுங்குகிறது. [QBR]
9. கர்த்தருடைய குரல் மானை அஞ்சச்செய்யும். [QBR2] கர்த்தர் காடுகளை அழிக்கிறார். [QBR] அவரது அரண்மனையில், ஜனங்கள் அவரது மகிமையைப் பாடுகிறார்கள்.
10. வெள்ளப்பெருக்கின்போது கர்த்தர் அரசராயிருந்தார். [QBR2] என்றென்றும் கர்த்தரே அரசர். [QBR]
11. கர்த்தர்தாமே அவரது ஜனங்களைப் பாதுகாப்பாராக. [QBR2] கர்த்தர் அவரது ஜனங்களை சமாதானத்தோடு வாழும்படி ஆசீர்வதிப்பாராக. [PE]