தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ESV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {#2தாவீதின் ஒரு பாடல் } [QS]கர்த்தாவே, நீர் என் பாறை. [QE][QS2]உதவிக்காக உம்மை அழைத்துக்கொண்டிருக்கிறேன். [QE][QS]என் ஜெபங்களுக்கு உமது காதுகளை மூடிக்கொள்ளாதிரும். [QE][QS2]உதவி கேட்கும் என் கூக்குரலுக்கு நீர் பதிலளிக்காதிருந்தால் கல்லறைக்குச் சென்ற பிணத்தைக் காட்டிலும் நான் மேலானவனில்லை என எண்ணுவேன். [QE]
2. [QS]கர்த்தாவே, என் கரங்களை உயர்த்தி, உமது மகா பரிசுத்த இடத்திற்கு நேராக ஜெபம் செய்வேன். [QE][QS2]உம்மை நோக்கி நான் கூப்பிடும்போது செவிகொடும். எனக்கு இரக்கம் காட்டும். [QE]
3. [QS]கர்த்தாவே, தீமை செய்யும் தீயோரைப் போல என்னை எண்ணாதேயும். [QE][QS2]“ஷாலோம்” என்று அவர்கள் தங்கள் அயலாரை வாழ்த்துவார்கள். [QE][QS2]ஆனால் அவர்களைக் குறித்துத் தீயவற்றைத் தங்கள் இருதயங்களில் எண்ணுகிறார்கள். [QE]
4. [QS]கர்த்தாவே, அவர்கள் பிறருக்குத் தீய காரியங்களைச் செய்வார்கள். [QE][QS2]எனவே அவர்களுக்குத் தீங்கு வரச்செய்யும். [QE][QS2]அவர்களுக்குத் தக்க தண்டனையை நீர் கொடுத்தருளும். [QE]
5. [QS]கர்த்தர் செய்யும் நல்லவற்றைத் தீயோர் புரிந்துகொள்வதில்லை. [QE][QS2]தேவன் செய்யும் நல்ல காரியங்களை அவர்கள் பார்ப்பதில்லை. [QE][QS]அவர்கள் அதைப் புரிந்துகொள்வதில்லை. [QE][QS2]அவர்கள் அழிக்க மட்டுமே முயல்வார்கள். [QE][PBR]
6. [QS]கர்த்தரைத் துதிப்பேன், [QE][QS2]இரக்கம் காட்டுமாறு கேட்ட என் ஜெபத்தை அவர் கேட்டார். [QE]
7. [QS]கர்த்தரே என் பெலன், அவரே என் கேடகம். [QE][QS2]அவரை நம்பினேன். [QE][QS]அவர் எனக்கு உதவினார். [QE][QS2]நான் மிகவும் மகிழ்கிறேன்! [QE][QS2]அவரைத் துதித்துப் பாடல்களைப் பாடுவேன். [QE]
8. [QS]கர்த்தர் தாம் தேர்ந்தெடுத்தவனைக் காக்கிறார். [QE][QS2]கர்த்தர் அவனை மீட்கிறார். கர்த்தரே அவன் பெலன். [QE][PBR]
9. [QS]தேவனே, உம் ஜனங்களை மீட்டருளும். [QE][QS2]உமது ஜனங்களை ஆசீர்வதியும்! [QE][QS]அவர்களை வழி நடத்தி என்றென்றும் கனப்படுத்தும்! [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 28 / 150
தாவீதின் ஒரு பாடல் 1 கர்த்தாவே, நீர் என் பாறை. உதவிக்காக உம்மை அழைத்துக்கொண்டிருக்கிறேன். என் ஜெபங்களுக்கு உமது காதுகளை மூடிக்கொள்ளாதிரும். உதவி கேட்கும் என் கூக்குரலுக்கு நீர் பதிலளிக்காதிருந்தால் கல்லறைக்குச் சென்ற பிணத்தைக் காட்டிலும் நான் மேலானவனில்லை என எண்ணுவேன். 2 கர்த்தாவே, என் கரங்களை உயர்த்தி, உமது மகா பரிசுத்த இடத்திற்கு நேராக ஜெபம் செய்வேன். உம்மை நோக்கி நான் கூப்பிடும்போது செவிகொடும். எனக்கு இரக்கம் காட்டும். 3 கர்த்தாவே, தீமை செய்யும் தீயோரைப் போல என்னை எண்ணாதேயும். “ஷாலோம்” என்று அவர்கள் தங்கள் அயலாரை வாழ்த்துவார்கள். ஆனால் அவர்களைக் குறித்துத் தீயவற்றைத் தங்கள் இருதயங்களில் எண்ணுகிறார்கள். 4 கர்த்தாவே, அவர்கள் பிறருக்குத் தீய காரியங்களைச் செய்வார்கள். எனவே அவர்களுக்குத் தீங்கு வரச்செய்யும். அவர்களுக்குத் தக்க தண்டனையை நீர் கொடுத்தருளும். 5 கர்த்தர் செய்யும் நல்லவற்றைத் தீயோர் புரிந்துகொள்வதில்லை. தேவன் செய்யும் நல்ல காரியங்களை அவர்கள் பார்ப்பதில்லை. அவர்கள் அதைப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் அழிக்க மட்டுமே முயல்வார்கள். 6 கர்த்தரைத் துதிப்பேன், இரக்கம் காட்டுமாறு கேட்ட என் ஜெபத்தை அவர் கேட்டார். 7 கர்த்தரே என் பெலன், அவரே என் கேடகம். அவரை நம்பினேன். அவர் எனக்கு உதவினார். நான் மிகவும் மகிழ்கிறேன்! அவரைத் துதித்துப் பாடல்களைப் பாடுவேன். 8 கர்த்தர் தாம் தேர்ந்தெடுத்தவனைக் காக்கிறார். கர்த்தர் அவனை மீட்கிறார். கர்த்தரே அவன் பெலன். 9 தேவனே, உம் ஜனங்களை மீட்டருளும். உமது ஜனங்களை ஆசீர்வதியும்! அவர்களை வழி நடத்தி என்றென்றும் கனப்படுத்தும்!
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 28 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References