1. {#2தாவீதின் பாடல் } [QS]கர்த்தாவே, நீரே என் ஒளியும் இரட்சகருமானவர். [QE][QS2]யாருக்கும் நான் பயப்படமாட்டேன்! [QE][QS]கர்த்தர் என் வாழ்க்கையின் பாதுகாப்பானவர். [QE][QS2]எந்த மனிதனுக்கும் நான் அஞ்சேன். [QE]
2. [QS]தீய ஜனங்கள் என்னைத் தாக்கக்கூடும். [QE][QS2]என்னைத் தாக்கி என் சரீரத்தை அழிக்க என் பகைவர்கள் முயலக்கூடும். [QE]
3. [QS]ஒரு படையே என்னைச் சூழ்ந்தாலும் நான் அஞ்சமாட்டேன். [QE][QS2]போரில் ஜனங்கள் என்னைத் தாக்கினாலும் நான் பயப்படேன். [QE][QS2]ஏனெனில் நான் கர்த்தரை நம்புகிறேன். [QE]
4. [QS]எனக்குத் தருமாறு ஒன்றையே நான் கர்த்தரிடம் கேட்பேன். [QE][QS2]இதுவே என் கோரிக்கை: [QE][QS]“என் வாழ்க்கை முழுவதும் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கி [QE][QS2]கர்த்தருடைய அழகைக்கண்டு அவர் அரண்மனையை தரிசிக்க அனுமதியும்.” [QE][PBR]
5. [QS]ஆபத்தில் நான் இருக்கையில் கர்த்தர் என்னைக் காப்பார். [QE][QS2]அவரது கூடாரத்தில் என்னை ஒளித்து வைப்பார். [QE][QS2]அவரது பாதுகாப்பிடம் வரைக்கும் என்னை அழைத்துச் செல்வார். [QE]
6. [QS]என் பகைவர்கள் என்னைச் சூழ்ந்துள்ளனர். [QE][QS2]அவர்களைத் தோற்கடிக்கக் கர்த்தர் எனக்கு உதவுவார். [QE][QS]அப்போது அவரது கூடாரத்தில் பலிகளைச் செலுத்துவேன். [QE][QS2]மகிழ்ச்சி ஆரவாரத்தோடு என் பலிகளை அளிப்பேன். [QE][QS2]கர்த்தரை, மகிமைப்படுத்தும் பாடல்களை இசைத்துப் பாடுவேன். [QE][PBR]
7. [QS]கர்த்தாவே, என் குரலைக் கேட்டு எனக்குப் பதில் தாரும், என்னிடம் தயவாயிரும். [QE]
8. [QS]கர்த்தாவே, உம்மோடு பேசவிரும்புகிறேன். [QE][QS2]என் இருதயத்திலிருந்து உம்மிடம் பேசவாஞ்சிக்கிறேன். [QE][QS2]கர்த்தாவே, உம்மிடம் பேசுவதற்காக உமக்கு முன்பாக வருகிறேன். [QE]
9. [QS]கர்த்தாவே, என்னிடமிருந்து விலகாதேயும்! [QE][QS2]உமது ஊழியனாகிய என்னிடம் கோபங்கொண்டு, என்னைவிட்டு விலகாதேயும்! [QE][QS]எனக்கு உதவும்! என்னைத் தூரத்தள்ளாதிரும். [QE][QS2]என்னை விட்டு விடாதிரும்! [QE][QS2]என் தேவனே, நீரே என் இரட்சகர்! [QE]
10. [QS]என் தந்தையும் தாயும் என்னை கைவிட்டனர். [QE][QS2]ஆனால் கர்த்தர் என்னை எடுத்து தமக்குரியவன் ஆக்கினார். [QE]
11. [QS]கர்த்தாவே, எனக்குப் பகைவருண்டு. [QE][QS2]எனவே உமது வழிகளை எனக்குப் போதியும். [QE][QS]சரியான காரியங்களைச் செய்வதற்கு எனக்குப் போதியும். [QE]
12. [QS]எனது சத்தருக்கள் என்னைத் தாக்கினார்கள். [QE][QS2]என்னைப்பற்றி பொய்யுரைத்தனர். [QE][QS2]என்னைத் துன்புறுத்த பொய் கூறினர். [QE]
13. [QS]நான் மரிக்கும் முன்னர் [QE][QS2]கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என நான் உண்மையாகவே நம்புகிறேன். [QE]
14. [QS]கர்த்தருடைய உதவிக்குக் காத்திரு. [QE][QS2]பெலத்தோடும் தைரியத்தோடும் இருந்து, கர்த்தருக்குக் காத்திரு. [QE]