1. {தாவீதின் பாடல்} [PS] கர்த்தாவே, நீரே என் ஒளியும் இரட்சகருமானவர். [QBR2] யாருக்கும் நான் பயப்படமாட்டேன்! [QBR] கர்த்தர் என் வாழ்க்கையின் பாதுகாப்பானவர். [QBR2] எந்த மனிதனுக்கும் நான் அஞ்சேன். [QBR]
2. தீய ஜனங்கள் என்னைத் தாக்கக்கூடும். [QBR2] என்னைத் தாக்கி என் சரீரத்தை அழிக்க என் பகைவர்கள் முயலக்கூடும். [QBR]
3. ஒரு படையே என்னைச் சூழ்ந்தாலும் நான் அஞ்சமாட்டேன். [QBR2] போரில் ஜனங்கள் என்னைத் தாக்கினாலும் நான் பயப்படேன். [QBR2] ஏனெனில் நான் கர்த்தரை நம்புகிறேன். [QBR]
4. எனக்குத் தருமாறு ஒன்றையே நான் கர்த்தரிடம் கேட்பேன். [QBR2] இதுவே என் கோரிக்கை: [QBR] “என் வாழ்க்கை முழுவதும் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கி [QBR2] கர்த்தருடைய அழகைக்கண்டு அவர் அரண்மனையை தரிசிக்க அனுமதியும்.”
5. ஆபத்தில் நான் இருக்கையில் கர்த்தர் என்னைக் காப்பார். [QBR2] அவரது கூடாரத்தில் என்னை ஒளித்து வைப்பார். [QBR2] அவரது பாதுகாப்பிடம் வரைக்கும் என்னை அழைத்துச் செல்வார். [QBR]
6. என் பகைவர்கள் என்னைச் சூழ்ந்துள்ளனர். [QBR2] அவர்களைத் தோற்கடிக்கக் கர்த்தர் எனக்கு உதவுவார். [QBR] அப்போது அவரது கூடாரத்தில் பலிகளைச் செலுத்துவேன். [QBR2] மகிழ்ச்சி ஆரவாரத்தோடு என் பலிகளை அளிப்பேன். [QBR2] கர்த்தரை, மகிமைப்படுத்தும் பாடல்களை இசைத்துப் பாடுவேன்.
7. கர்த்தாவே, என் குரலைக் கேட்டு எனக்குப் பதில் தாரும், என்னிடம் தயவாயிரும். [QBR]
8. கர்த்தாவே, உம்மோடு பேசவிரும்புகிறேன். [QBR2] என் இருதயத்திலிருந்து உம்மிடம் பேசவாஞ்சிக்கிறேன். [QBR2] கர்த்தாவே, உம்மிடம் பேசுவதற்காக உமக்கு முன்பாக வருகிறேன். [QBR]
9. கர்த்தாவே, என்னிடமிருந்து விலகாதேயும்! [QBR2] உமது ஊழியனாகிய என்னிடம் கோபங்கொண்டு, என்னைவிட்டு விலகாதேயும்! [QBR] எனக்கு உதவும்! என்னைத் தூரத்தள்ளாதிரும். [QBR2] என்னை விட்டு விடாதிரும்! [QBR2] என் தேவனே, நீரே என் இரட்சகர்! [QBR]
10. என் தந்தையும் தாயும் என்னை கைவிட்டனர். [QBR2] ஆனால் கர்த்தர் என்னை எடுத்து தமக்குரியவன் ஆக்கினார். [QBR]
11. கர்த்தாவே, எனக்குப் பகைவருண்டு. [QBR2] எனவே உமது வழிகளை எனக்குப் போதியும். [QBR] சரியான காரியங்களைச் செய்வதற்கு எனக்குப் போதியும். [QBR]
12. எனது சத்தருக்கள் என்னைத் தாக்கினார்கள். [QBR2] என்னைப்பற்றி பொய்யுரைத்தனர். [QBR2] என்னைத் துன்புறுத்த பொய் கூறினர். [QBR]
13. நான் மரிக்கும் முன்னர் [QBR2] கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என நான் உண்மையாகவே நம்புகிறேன். [QBR]
14. கர்த்தருடைய உதவிக்குக் காத்திரு. [QBR2] பெலத்தோடும் தைரியத்தோடும் இருந்து, கர்த்தருக்குக் காத்திரு. [PE]