1. {#2தாவீதின் பாடல் } [QS]கர்த்தாவே, நான் என்னை உமக்கு அளிக்கிறேன். [QE]
2. [QS]என் தேவனே, நான் உம்மை நம்புகிறேன். நான் வெட்கப்பட்டுப் போகமாட்டேன். [QE][QS2]என் பகைவர்கள் என்னைக் கண்டு நகைப்பதில்லை. [QE]
3. [QS]ஒருவன் உம்மை நம்பினால் அவன் வெட்கப்பட்டுப் போகமாட்டான். [QE][QS2]ஆனால் வஞ்சகர் ஏமாந்து போவார்கள். [QE][QS2]அவர்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை. [QE][PBR]
4. [QS]கர்த்தாவே, உமது வழிகளைக் கற்றுக் கொள்ள உதவும். [QE][QS2]உமது வழிகளை எனக்குப் போதியும். [QE]
5. [QS]எனக்கு வழிகாட்டி உமது உண்மைகளைப் போதியும். [QE][QS2]நீரே என் தேவன், என் மீட்பர். [QE][QS2]அனுதினமும் நான் உம்மை நம்புகிறேன். [QE]
6. [QS]கர்த்தாவே, என்னிடம் தயவாயிருக்க நினைவு கூரும். [QE][QS2]எப்போதுமுள்ள உமது மென்மையான அன்பை எனக்குக் காட்டும். [QE]
7. [QS]எனது பாவங்களையும் என் சிறுவயதின் தீய செயல்களையும் நினைவில் கொள்ளாதேயும். [QE][QS2]கர்த்தாவே, உமது நல்ல நாமத்திற்கேற்ப, என்னை அன்பிலே நினைத்தருளும். [QE][PBR]
8. [QS]கர்த்தர் உண்மையாகவே நல்லவர். [QE][QS2]பாவிகளுக்கு வாழ்வதற்குரிய வழியை அவர் போதிக்கிறார். [QE]
9. [QS]தாழ்மைப்பட்டவர்களுக்கு அவர் தம் வழியைப் போதிக்கிறார். [QE][QS2]அவர் அந்த ஜனங்களை நியாயமாக நடத்துகிறார். [QE]
10. [QS]அவரது உடன்படிக்கையையும், வாக்குறுதிகளையும் பின்பற்றும் ஜனங்களுக்குக் [QE][QS2]கர்த்தர் தயவுள்ளவரும், உண்மையுமானவர். [QE]
11. [QS]கர்த்தாவே, நான் பிழையான காரியங்கள் பலவற்றைச் செய்தேன். [QE][QS2]ஆனால் உம் நன்மை வெளிப்படும் பொருட்டு நான் செய்தவற்றையெல்லாம் மன்னித்தீர். [QE][PBR]
12. [QS]கர்த்தரைப் பின்பற்றுவதை ஒருவன் தெரிந்துகொண்டால் [QE][QS2]அவன் வாழ்வதற்குரிய நல் வழியை தேவன் காட்டுவார். [QE]
13. [QS]அம்மனிதன் நல்லவற்றை அனுபவிப்பான். [QE][QS2]தேவன் வாக்களித்த தேசத்தை அவன் பிள்ளைகள் பெறுவார்கள். [QE]
14. [QS]தன்னைப் பின்பற்றுவோருக்குக் கர்த்தர் தன் இரகசியங்களைச் சொல்வார். [QE][QS2]அவரைப் பின்பற்றுவோருக்குத் தமது உடன்படிக்கையைக் கற்பிக்கிறார். [QE]
15. [QS]உதவிக்காக நான் எப்போதும் கர்த்தரை நோக்கியிருக்கிறேன். [QE][QS2]தொல்லைகளிலிருந்து அவர் எப்போதும் முடிவு உண்டாக்குகிறார். [QE][PBR]
16. [QS]கர்த்தாவே, நான் காயமுற்றுத் தனித்திருக்கிறேன். [QE][QS2]என்னிடம் திரும்பி எனக்கு இரக்கத்தைக் காட்டும். [QE]
17. [QS]என் தொல்லைகளிலிருந்து என்னை விடுவியும். [QE][QS2]என் சிக்கல்களைத் தீர்க்க எனக்கு உதவும். [QE]
18. [QS]கர்த்தாவே, என் தொல்லைகளையும், துன்பத்தையும் பாரும். [QE][QS2]நான் செய்த பாவங்களையெல்லாம் மன்னியும். [QE]
19. [QS]என் பகைவர்களையெல்லாம் பாரும். [QE][QS2]அவர்கள் என்னைப் பகைத்துத் தாக்க விரும்புகிறார்கள். [QE]
20. [QS]தேவனே, என்னைப் பாதுகாத்து மீட்டருளும். [QE][QS2]நான் உம்மை நம்புகிறேன், என்னை ஏமாற்றமடையச் செய்யாதேயும். [QE]
21. [QS]தேவனே, நீர் உண்மையாகவே நல்லவர். [QE][QS2]நான் உம்மை நம்புவதால் என்னைப் பாதுகாத்தருளும். [QE]
22. [QS]தேவனே, இஸ்ரவேல் ஜனங்களை [QE][QS2]அவர்களது பகைவர்கள் எல்லோரிடமிருந்தும் மீட்டுக்கொள்ளும். [QE]