1. {#2தாவீதின் பாடல் } [QS]பூமியும் அதிலுள்ள எல்லாப் பொருள்களும் கர்த்தருடையவை. [QE][QS2]உலகமும் அதன் ஜனங்களும் அவருக்கே உரிமையாம். [QE]
2. [QS]கர்த்தர் பூமியை தண்ணீரின் மேல் உண்டாக்கினார். [QE][QS2]ஆறுகளின் மீது அதை உண்டாக்கினார். [QE][PBR]
3. [QS]கர்த்தருடைய மலைகளின் மேல் யார் ஏறக்கூடும்? [QE][QS2]கர்த்தருடைய பரிசுத்த ஆலயத்தில் யார் நிற்கக்கூடும்? [QE][QS2]யார் அங்கு வழிபட முடியும்? [QE]
4. [QS]தீயவை செய்யாத ஜனங்களும், [QE][QS2]பரிசுத்த இருதயம் உடையோரும், [QE][QS]பொய்யை உண்மையெனக் கூறுவதற்கு என் பெயரைப்[* என் பெயர் எழுத்தின் பிரகாரமாக “என் ஆத்துமா” எனப் பொருள்படும். ] பயன்படுத்தாதோரும், பொய்யும், [QE][QS2]பொய்யான வாக்குறுதிகளும் அளிக்காதோரும், மட்டுமே அங்கு தொழுதுகொள்ள முடியும். [QE][PBR]
5. [QS]நல்ல ஜனங்கள் கர்த்தரிடம் மற்ற ஜனங்களை ஆசீர்வதிக்கச் சொல்வார்கள். [QE][QS2]அந்த நல்ல ஜனங்கள் தங்கள் இரட்சகராகிய தேவனை நல்லக் காரியங்களைச் செய்யச் சொல்வார்கள். [QE]
6. [QS]அந்த நல்லோர் தேவனைப் பின்பற்ற முயல்வார்கள். [QE][QS2]யாக்கோபின் தேவனிடம் உதவி வேண்டி அவர்கள் செல்வார்கள். [QE][PBR]
7. [QS]வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்! [QE][QS2]பழைமையான கதவுகளே! திறவுங்கள்! [QE][QS2]மகிமை வாய்ந்த அரசர் உள்ளே வருவார். [QE]
8. [QS]யார் இந்த மகிமைமிக்க அரசர்? [QE][QS2]கர்த்தரே அந்த அரசர். அவரே வல்லமையுள்ள வீரர். [QE][QS2]கர்த்தரே அந்த அரசர். அவரே போரின் நாயகன். [QE][PBR]
9. [QS]வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்! [QE][QS2]பழைமையான கதவுகளே, திறவுங்கள்! [QE][QS2]மகிமை மிக்க அரசர் உள்ளே வருவார். [QE]
10. [QS]யார் அந்த மகிமை மிக்க அரசர்? [QE][QS2]சர்வ வல்லமையுள்ள கர்த்தரே அந்த அரசர். [QE][QS2]அவரே மகிமை மிக்க அரசர். [QE]