1. {தாவீதின் பாடல்} [PS] கர்த்தர் என் மேய்ப்பர். [QBR2] எனக்குத் தேவையானவை எப்போதும் என்னிடமிருக்கும். [QBR]
2. அவர் பசுமையான புல்வெளிகளில் என்னை இளைப்பாறச் செய்கிறார். [QBR2] குளிர்ந்த நீரோடைகளருகே அவர் என்னை வழிநடத்துகிறார். [QBR]
3. அவர் நாமத்தின் நன்மைக்கேற்ப, என் ஆத்துமாவிற்குப் புது வலிமையைத் தருகிறார். [QBR2] அவர் நல்லவரெனக் காட்டும்படி, நன்மையின் பாதைகளில் என்னை நடத்துகிறார். [QBR]
4. மரணத்தின் இருண்ட பள்ளத்தாக்குகளில் நான் நடந்தாலும் எந்தத் தீமைக்கும் பயப்படமாட்டேன். [QBR2] ஏனெனில் கர்த்தாவே, நீர் என்னோடிருக்கிறீர். [QBR2] உமது கோலும் தடியும் எனக்கு ஆறுதல் நல்கும். [QBR]
5. கர்த்தாவே, என் பகைவர்களின் முன்னிலையில் என் பந்தியை ஆயத்தமாக்கினீர். [QBR2] என் தலையில் எண்ணெயை ஊற்றினீர். என் பாத்திரம் நிரம்பி வழிகிறது. [QBR]
6. என் ஆயுள் முழுவதும் உமது நன்மையும் இரக்கமும் என்னோடிருக்கும். [QBR2] நித்திய காலமாக நான் கர்த்தருடைய ஆலயத்தில் அமர்ந்திருப்பேன். [PE]