1. என் தேவனே, என் தேவனே! [QBR2] ஏன் என்னைக் கைவிட்டீர்? [QBR] என்னை மீட்பதற்கு இயலாதபடி வெகு தூரத்திற்குச் சென்றீர் [QBR2] உதவிவேண்டிக் கதறும் என் குரலைக் கேளாதபடி வெகு தூரத்தில் இருக்கிறீர்! [QBR]
2. என் தேவனே, பகல் பொழுதில் உம்மைக் கூப்பிட்டேன். [QBR2] நீர் எனக்குப் பதில் தரவில்லை. [QBR2] இரவிலும் தொடர்ந்து உம்மைக் கூப்பிட்டேன்.
3. தேவனே,நீர் பரிசுத்தர். [QBR2] நீர் அரசனைப்போல் அமர்கிறீர். [QBR2] கர்த்தாவே, உமது சிங்காசனம் இஸ்ரவேலின் துதிகளின் மத்தியில் உள்ளது. [QBR]
4. எங்கள் முற்பிதாக்கள் உம்மை நம்பினார்கள். [QBR2] ஆம் தேவனே, அவர்கள் உம்மை நம்பினார்கள். [QBR2] நீர் அவர்களை மீட்டீர். [QBR]
5. தேவனே, எங்கள் முற்பிதாக்கள் உதவிக்காய் உம்மை அழைத்தனர். [QBR2] அவர்கள் பகைவர்களிடமிருந்து தப்பித்தனர். [QBR2] அவர்கள் உம்மை நம்பினார்கள். அவர்கள் ஏமாந்து போகவில்லை. [QBR]
6. நான் மனிதனன்றி, புழுவா? [QBR2] ஜனங்கள் என்னைக் கண்டு வெட்கினார்கள். [QBR2] ஜனங்கள் என்னைப் பழித்தனர். [QBR]
7. என்னைப் பார்ப்போர் பரிகாசம் செய்தனர். [QBR2] அவர்கள் தலையை அசைத்து, உதட்டைப்பிதுக்கினர். [QBR]
8. அவர்கள் என்னை நோக்கி, “நீ கர்த்தரிடம் உதவிகேள். [QBR2] அவர் உன்னை மீட்கக்கூடும். [QBR2] உன்னை அவர் மிகவும் நேசித்தால், அவர் உன்னை நிச்சயம் காப்பாற்றுவார்!” என்றார்கள்.
9. தேவனே, நான் உம்மை முற்றிலும் சார்ந்திருக்கிறேன் என்பதே உண்மை. [QBR2] நான் பிறந்த நாளிலிருந்தே என்னைக் காப்பாற்றி வருகிறீர். [QBR2] என் தாயிடம் பால் பருகும் காலத்திலிருந்தே நீர் உறுதியான நம்பிக்கையை தந்து எனக்கு ஆறுதல் அளித்தீர். [QBR]
10. நான் பிறந்த நாளிலிருந்தே நீரே என் தேவன். [QBR2] என் தாயின் உடலிலிருந்து வெளி வந்தது முதல் உமது பாதுகாப்பில் நான் வாழ்கிறேன்.
11. எனவே, தேவனே, என்னை விட்டு நீங்காதிரும்! [QBR2] தொல்லை அருகே உள்ளது, எனக்கு உதவுவார் எவருமில்லை. [QBR]
12. ஜனங்கள் என்னைச் சூழ்ந்துள்ளனர். [QBR2] முரட்டுக் காளைகள்போல் என்னைச் சுற்றிலும் இருக்கின்றனர். [QBR]
13. கெர்ச்சித்துக்கொண்டு விலங்கைக் கிழித்துண்ணும் சிங்கத்தைப்போல் [QBR2] அவர்கள் வாய்கள் திறந்திருக்கின்றன. [QBR]
14. நிலத்தில் ஊற்றப்பட்ட நீரைப்போன்று என் வலிமை அகன்றது. [QBR2] என் எலும்புகள் பிரிக்கப்பட்டிருந்தன. என் தைரியம் மறைந்தது. [QBR]
15. உடைந்த மண்பாண்டத்தின் துண்டைப் போன்று என் வாய் உலர்ந்து போயிற்று. [QBR2] என் வாயின் மேலண்ணத்தில் என் நாவு ஒட்டிக் கொண்டது. [QBR2] “மரணத் தூளில்” நீர் என்னைப் போட்டீர். [QBR]
16. “நாய்கள்” என்னைச் சூழ்ந்திருக்கின்றன. [QBR2] தீயோர் கூட்டத்தின் கண்ணியில் விழுந்தேன். [QBR2] சிங்கத்தைப்போன்று என் கைகளையும் கால்களையும் அவர்கள் கிழித்தெறிந்தார்கள். [QBR]
17. என் எலும்புகளை நான் காண்கிறேன். [QBR2] ஜனங்கள் என்னை முறைத்தனர்! [QBR2] அவர்கள் என்னைக் கவனித்துக்கொண்டேயிருக்கிறார்கள்! [QBR]
18. அந்த ஜனங்கள் என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்துகொள்கிறார்கள். [QBR2] என் அங்கியின் பொருட்டு சீட்டெழுதிப் போடுகின்றார்கள்.
19. கர்த்தாவே, என்னை விட்டு விலகாதேயும். [QBR2] நீரே என் வலிமை. விரைந்து எனக்கு உதவும்! [QBR]
20. கர்த்தாவே, என் உயிரை வாளுக்குத் தப்புவியும். [QBR2] அந்த நாய்களிடமிருந்து அருமையான என் உயிரை மீட்டருளும். [QBR]
21. சிங்கத்தின் வாயிலிருந்து என்னை விடுவியும். [QBR2] காளையின் கொம்புகளுக்கு என்னைத் தப்புவியும்.
22. கர்த்தாவே, என் சகோதரர்களுக்கு உம்மைப் பற்றிச் சொல்லுவேன். [QBR2] பெரும் சபைகளில் நான் உம்மைத் துதிப்பேன். [QBR]
23. கர்த்தரைத் துதியுங்கள். ஜனங்களே! [QBR2] அவரைத் தொழுதுகொள்ளுங்கள். [QBR] இஸ்ரவேலின் சந்ததியினரே, கர்த்தரை மகிமைப்படுத்துங்கள். [QBR2] இஸ்ரவேலின் எல்லா ஜனங்களே, கர்த்தருக்குப் பயந்து அவரை மதியுங்கள். [QBR]
24. தொல்லைகளில் உழலும் ஏழைகளுக்கு கர்த்தர் உதவுகிறார். [QBR2] கர்த்தர் அவர்களைக் குறித்து வெட்கப்படுவதில்லை. [QBR] கர்த்தர் அவர்களை வெறுப்பதில்லை. [QBR2] கர்த்தரிடம் ஜனங்கள் உதவி கேட்கையில் அவர்களைக் கண்டு அவர் ஒளிப்பதில்லை.
25. கர்த்தாவே, மகாசபையில் எனது வாழ்த்துதல்கள் உம்மிடமிருந்தே வருகின்றன. [QBR2] உம்மைத் தொழுதுகொள்வோர் முன்பாக, நான் உமக்குச் சொன்ன வாக்குறுதியான பலிகளைச் செலுத்துவேன். [QBR]
26. ஏழைகள் உண்டு திருப்தியுறுவார்கள். [QBR2] கர்த்தரைத் தேடிவரும் ஜனங்களே, அவரைத் துதியுங்கள். [QBR2] உங்கள் இருதயம் என்றென்றும் மகிழ்வதாக! [QBR]
27. தூரத்து நாடுகளின் ஜனங்கள் கர்த்தரை நினைத்து அவரிடம் மீண்டும் வரட்டும். [QBR2] எல்லா அயல் நாடுகளின் ஜனங்களும் கர்த்தரைத் தொழுதுகொள்ளட்டும். [QBR]
28. ஏனெனில் கர்த்தரே அரசர். [QBR2] அவர் எல்லா தேசங்களையும் ஆளுகிறார். [QBR]
29. பெலமுள்ள, ஆரோக்கியமான ஜனங்கள் உண்டு, தேவனுக்குமுன் வணங்கியிருக்கிறார்கள். [QBR2] எல்லா ஜனங்களும், ஏற்கெனவே இறந்தவரும், மரிக்கப் போவோரும் தேவனுக்கு முன்பாக நாம் ஒவ்வொருவரும் குனிந்து வணங்குவோம். [QBR]
30. வருங்காலத்தில், நம் சந்ததியினர் கர்த்தருக்குச் சேவை செய்வார்கள். [QBR2] என்றென்றும் ஜனங்கள் அவரைக் குறித்துச் சொல்வார்கள். [QBR]
31. பிறக்கவிருக்கும் பிள்ளைகளுக்கு அவர்கள் தேவனுடைய நன்மையைச் சொல்வார்கள். [QBR2] தேவன் உண்மையாகச் செய்த நல்ல காரியங்களை அவர்கள் சொல்வார்கள். [PE]