1. {#2“உதயத்தின் மான்” என்னும் இராகத்தில் இசைப்பதற்கு இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல் } [QS]என் தேவனே, என் தேவனே! [QE][QS2]ஏன் என்னைக் கைவிட்டீர்? [QE][QS]என்னை மீட்பதற்கு இயலாதபடி வெகு தூரத்திற்குச் சென்றீர் [QE][QS2]உதவிவேண்டிக் கதறும் என் குரலைக் கேளாதபடி வெகு தூரத்தில் இருக்கிறீர்! [QE]
2. [QS]என் தேவனே, பகல் பொழுதில் உம்மைக் கூப்பிட்டேன். [QE][QS2]நீர் எனக்குப் பதில் தரவில்லை. [QE][QS2]இரவிலும் தொடர்ந்து உம்மைக் கூப்பிட்டேன். [QE][PBR]
3. [QS]தேவனே,நீர் பரிசுத்தர். [QE][QS2]நீர் அரசனைப்போல் அமர்கிறீர். [QE][QS2]கர்த்தாவே, உமது சிங்காசனம் இஸ்ரவேலின் துதிகளின் மத்தியில் உள்ளது. [QE]
4. [QS]எங்கள் முற்பிதாக்கள் உம்மை நம்பினார்கள். [QE][QS2]ஆம் தேவனே, அவர்கள் உம்மை நம்பினார்கள். [QE][QS2]நீர் அவர்களை மீட்டீர். [QE]
5. [QS]தேவனே, எங்கள் முற்பிதாக்கள் உதவிக்காய் உம்மை அழைத்தனர். [QE][QS2]அவர்கள் பகைவர்களிடமிருந்து தப்பித்தனர். [QE][QS2]அவர்கள் உம்மை நம்பினார்கள். அவர்கள் ஏமாந்து போகவில்லை. [QE]
6. [QS]நான் மனிதனன்றி, புழுவா? [QE][QS2]ஜனங்கள் என்னைக் கண்டு வெட்கினார்கள். [QE][QS2]ஜனங்கள் என்னைப் பழித்தனர். [QE]
7. [QS]என்னைப் பார்ப்போர் பரிகாசம் செய்தனர். [QE][QS2]அவர்கள் தலையை அசைத்து, உதட்டைப்பிதுக்கினர். [QE]
8. [QS]அவர்கள் என்னை நோக்கி, “நீ கர்த்தரிடம் உதவிகேள். [QE][QS2]அவர் உன்னை மீட்கக்கூடும். [QE][QS2]உன்னை அவர் மிகவும் நேசித்தால், அவர் உன்னை நிச்சயம் காப்பாற்றுவார்!” என்றார்கள். [QE][PBR]
9. [QS]தேவனே, நான் உம்மை முற்றிலும் சார்ந்திருக்கிறேன் என்பதே உண்மை. [QE][QS2]நான் பிறந்த நாளிலிருந்தே என்னைக் காப்பாற்றி வருகிறீர். [QE][QS2]என் தாயிடம் பால் பருகும் காலத்திலிருந்தே நீர் உறுதியான நம்பிக்கையை தந்து எனக்கு ஆறுதல் அளித்தீர். [QE]
10. [QS]நான் பிறந்த நாளிலிருந்தே நீரே என் தேவன். [QE][QS2]என் தாயின் உடலிலிருந்து வெளி வந்தது முதல் உமது பாதுகாப்பில் நான் வாழ்கிறேன். [QE][PBR]
11. [QS]எனவே, தேவனே, என்னை விட்டு நீங்காதிரும்! [QE][QS2]தொல்லை அருகே உள்ளது, எனக்கு உதவுவார் எவருமில்லை. [QE]
12. [QS]ஜனங்கள் என்னைச் சூழ்ந்துள்ளனர். [QE][QS2]முரட்டுக் காளைகள்போல் என்னைச் சுற்றிலும் இருக்கின்றனர். [QE]
13. [QS]கெர்ச்சித்துக்கொண்டு விலங்கைக் கிழித்துண்ணும் சிங்கத்தைப்போல் [QE][QS2]அவர்கள் வாய்கள் திறந்திருக்கின்றன. [QE]
14. [QS]நிலத்தில் ஊற்றப்பட்ட நீரைப்போன்று என் வலிமை அகன்றது. [QE][QS2]என் எலும்புகள் பிரிக்கப்பட்டிருந்தன. என் தைரியம் மறைந்தது. [QE]
15. [QS]உடைந்த மண்பாண்டத்தின் துண்டைப் போன்று என் வாய் உலர்ந்து போயிற்று. [QE][QS2]என் வாயின் மேலண்ணத்தில் என் நாவு ஒட்டிக் கொண்டது. [QE][QS2]“மரணத் தூளில்” நீர் என்னைப் போட்டீர். [QE]
16. [QS]“நாய்கள்” என்னைச் சூழ்ந்திருக்கின்றன. [QE][QS2]தீயோர் கூட்டத்தின் கண்ணியில் விழுந்தேன். [QE][QS2]சிங்கத்தைப்போன்று என் கைகளையும் கால்களையும் அவர்கள் கிழித்தெறிந்தார்கள். [QE]
17. [QS]என் எலும்புகளை நான் காண்கிறேன். [QE][QS2]ஜனங்கள் என்னை முறைத்தனர்! [QE][QS2]அவர்கள் என்னைக் கவனித்துக்கொண்டேயிருக்கிறார்கள்! [QE]
18. [QS]அந்த ஜனங்கள் என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்துகொள்கிறார்கள். [QE][QS2]என் அங்கியின் பொருட்டு சீட்டெழுதிப் போடுகின்றார்கள். [QE][PBR]
19. [QS]கர்த்தாவே, என்னை விட்டு விலகாதேயும். [QE][QS2]நீரே என் வலிமை. விரைந்து எனக்கு உதவும்! [QE]
20. [QS]கர்த்தாவே, என் உயிரை வாளுக்குத் தப்புவியும். [QE][QS2]அந்த நாய்களிடமிருந்து அருமையான என் உயிரை மீட்டருளும். [QE]
21. [QS]சிங்கத்தின் வாயிலிருந்து என்னை விடுவியும். [QE][QS2]காளையின் கொம்புகளுக்கு என்னைத் தப்புவியும். [QE][PBR]
22. [QS]கர்த்தாவே, என் சகோதரர்களுக்கு உம்மைப் பற்றிச் சொல்லுவேன். [QE][QS2]பெரும் சபைகளில் நான் உம்மைத் துதிப்பேன். [QE]
23. [QS]கர்த்தரைத் துதியுங்கள். ஜனங்களே! [QE][QS2]அவரைத் தொழுதுகொள்ளுங்கள். [QE][QS]இஸ்ரவேலின் சந்ததியினரே, கர்த்தரை மகிமைப்படுத்துங்கள். [QE][QS2]இஸ்ரவேலின் எல்லா ஜனங்களே, கர்த்தருக்குப் பயந்து அவரை மதியுங்கள். [QE]
24. [QS]தொல்லைகளில் உழலும் ஏழைகளுக்கு கர்த்தர் உதவுகிறார். [QE][QS2]கர்த்தர் அவர்களைக் குறித்து வெட்கப்படுவதில்லை. [QE][QS]கர்த்தர் அவர்களை வெறுப்பதில்லை. [QE][QS2]கர்த்தரிடம் ஜனங்கள் உதவி கேட்கையில் அவர்களைக் கண்டு அவர் ஒளிப்பதில்லை. [QE][PBR]
25. [QS]கர்த்தாவே, மகாசபையில் எனது வாழ்த்துதல்கள் உம்மிடமிருந்தே வருகின்றன. [QE][QS2]உம்மைத் தொழுதுகொள்வோர் முன்பாக, நான் உமக்குச் சொன்ன வாக்குறுதியான பலிகளைச் செலுத்துவேன். [QE]
26. [QS]ஏழைகள் உண்டு திருப்தியுறுவார்கள். [QE][QS2]கர்த்தரைத் தேடிவரும் ஜனங்களே, அவரைத் துதியுங்கள். [QE][QS2]உங்கள் இருதயம் என்றென்றும் மகிழ்வதாக! [QE]
27. [QS]தூரத்து நாடுகளின் ஜனங்கள் கர்த்தரை நினைத்து அவரிடம் மீண்டும் வரட்டும். [QE][QS2]எல்லா அயல் நாடுகளின் ஜனங்களும் கர்த்தரைத் தொழுதுகொள்ளட்டும். [QE]
28. [QS]ஏனெனில் கர்த்தரே அரசர். [QE][QS2]அவர் எல்லா தேசங்களையும் ஆளுகிறார். [QE]
29. [QS]பெலமுள்ள, ஆரோக்கியமான ஜனங்கள் உண்டு, தேவனுக்குமுன் வணங்கியிருக்கிறார்கள். [QE][QS2]எல்லா ஜனங்களும், ஏற்கெனவே இறந்தவரும், மரிக்கப் போவோரும் தேவனுக்கு முன்பாக நாம் ஒவ்வொருவரும் குனிந்து வணங்குவோம். [QE]
30. [QS]வருங்காலத்தில், நம் சந்ததியினர் கர்த்தருக்குச் சேவை செய்வார்கள். [QE][QS2]என்றென்றும் ஜனங்கள் அவரைக் குறித்துச் சொல்வார்கள். [QE]
31. [QS]பிறக்கவிருக்கும் பிள்ளைகளுக்கு அவர்கள் தேவனுடைய நன்மையைச் சொல்வார்கள். [QE][QS2]தேவன் உண்மையாகச் செய்த நல்ல காரியங்களை அவர்கள் சொல்வார்கள். [QE]