1. {இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்} [PS] கர்த்தாவே, உமது பெலன் அரசனை மகிழ்விக்கிறது. [QBR2] நீர் அவனை மீட்கும்போது அவன் மிகவும் சந்தோஷமடைகிறான். [QBR]
2. நீர் அரசனுக்கு வேண்டியவற்றைக் கொடுத்தீர். [QBR2] அரசன் சிலவற்றைக் கேட்டான். [QBR] கர்த்தாவே, அவன் கேட்டவற்றை நீர் கொடுத்தீர்.
3. கர்த்தாவே, நீர் உண்மையாகவே அரசனை ஆசீர்வதித்தீர். [QBR2] அவன் தலையில் பொற்கிரீடத்தைச் சூட்டினீர். [QBR]
4. தேவனே அரசன் உம்மிடம், ஆயுளைக் கேட்டான். நீர் அதை அவனுக்குக் கொடுத்தீர். [QBR2] நீர் அவனுக்கு என்றென்றும் நிலைத்துத் தொடரும் நீண்ட ஆயுளைக் கொடுத்தீர். [QBR]
5. வெற்றிக்கு நேராக நீர் அரசனை வழிநடத்தினீர். [QBR2] அவனுக்குப் பெரும் மேன்மையைத் தந்தீர். [QBR2] அவனுக்குப் பெருமையையும், புகழையும் தந்தீர். [QBR]
6. தேவனே, நீர் உண்மையாகவே என்றென்றைக்கும் தேர்ந்தெடுத்த அரசனை ஆசீர்வதித்தீர். [QBR2] உமது உயர்ந்த வல்லமையை உபயோகித்து அரசனைப் பாதுகாத்தீர். [QBR2] அரசன் உம்முகத்தைப் பார்க்கும்போது அது அவனை மகிழச் செய்யும். [QBR]
7. அரசன் கர்த்தரை நம்புகிறான். [QBR2] உன்னதமான தேவனாகிய நீர் அவனை ஏமாற்றமாட்டீர். [QBR]
8. தேவனே, உமது பகைவர்க்கு உம் பெலனை உணர்த்துவீர். [QBR2] உம்மைப் பகைக்கிற அந்த ஜனங்களை உமது வல்லமை வெல்லும். [QBR]
9. கர்த்தாவே, நீர் அரசனோடு இருக்கும் போது, அவர் எல்லாவற்றையும் கொளுத்திவிடும் உலையைப்போல் இருப்பார். [QBR2] அவர் தன் பகைவர்களை அழிப்பார். [QBR]
10. அவரது பகைவர்களின் குடும்பங்கள் அழிக்கப்படும். [QBR2] அவர்கள் பூமியிலிருந்து அகற்றப்படுவார்கள். [QBR]
11. ஏனெனில் கர்த்தாவே, அந்த ஜனங்கள் தீயவற்றை உமக்கெதிராய் திட்டமிட்டார்கள். [QBR2] அவர்கள் தீயன செய்யத் திட்டமிட்டும் வெற்றி பெறவில்லை. [QBR]
12. கர்த்தாவே, அந்த ஜனங்களை அடிமைகளைப் போலாக்கினீர். [QBR2] நீர் அவர்களைக் கயிறுகளால் கட்டினீர். [QBR] அவர்களின் கழுத் துக்களைச் சுற்றி கயிறுகளால் வளைத்தீர். [QBR2] அடிமைகளைப் போல் உம்மைக் குனிந்து வணங்கச் செய்தீர்.
13. கர்த்தாவே, உமது மகத்துவத்தில் நீர் உயர்ந்திரும். [QBR2] கர்த்தருடைய மேன்மையைப் பாடல்களால் பாடி இசைப்போம்! [PE]