1. [QS]யூதரல்லாத மனிதர்கள் ஏன் இவ்வளவு கோபமாயிருக்கிறார்கள்? [QE][QS2]ஏன் அந்தத் தேசங்கள் மதியீனமான திட்டங்களை வகுக்கின்றன? [QE]
2. [QS]அவர்களுடைய அரசர்களும், தலைவர்களும் கர்த்தரையும், [QE][QS2]கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசனையும் எதிர்க்க ஒன்றுகூடினார்கள். [QE]
3. [QS]அந்நாடுகளின் தலைவர்கள், “நாம் தேவனையும், அவர் தேர்ந்தெடுத்த அரசனையும் எதிர்த்துக் கலகம் செய்வோம். [QE][QS2]அவரிடமிருந்து நம்மை விடுவித்துக்கொள்வோம்!” என்றார்கள். [QE][PBR]
4. [QS]ஆனால் என் ஆண்டவர் பரலோகத்தின் அரசர், [QE][QS2]அவர் அந்த ஜனங்களைப் பார்த்து நகைக்கிறார். [QE]
5. [QS](5-6)தேவன் கோபமடைந்து அந்த ஜனங்களை நோக்கி, [QE][QS2]“நான் இம்மனிதனை அரசனாகத் தேர்ந்தெடுத்தேன்! [QE][QS]அவன் சீயோன் மலையில் அரசாளுவான். [QE][QS2]சீயோன் என்னுடைய பரிசுத்த மலை” என்கிறார். [QE][QS]அது மற்ற தலைவர்களை பயமுறுத்தும். [QE][PBR]
6.
7. [QS]இப்போது கர்த்தருடைய உடன்படிக்கையை உனக்குக் கூறுவேன். [QE][QS2]கர்த்தர் என்னிடம், “இன்று நான் உனக்குத் தந்தையானேன்! [QE][QS2]நீ எனக்கு மகன். [QE]
8. [QS]நீ என்னைக் கேட்டால், நான் உனக்குத் தேசங்களையெல்லாம் கொடுப்பேன். [QE][QS2]பூமியின் ஜனங்களெல்லாம் உன்னுடையவர்களாவார்கள்! [QE]
9. [QS]இரும்புத் தடியால் மண்குடத்தை உடைப்பதைப்போல [QE][QS2]நீ அத்தேசங்களை அழிக்கமுடியும்” என்றார். [QE][PBR]
10. [QS]எனவே அரசர்களே, ஞானமுள்ளவர்களாய் இருங்கள். [QE][QS2]அரசாளுபவர்களே, இப்பாடத்தை கற்றுக்கொள்ளுங்கள். [QE]
11. [QS]மிகுந்த அச்சத்தோடு கர்த்தருக்குக் கீழ்ப்படியுங்கள். [QE]
12. [QS]தேவனுடைய குமாரனுக்கு நீங்கள் உண்மையானவர்கள் என்பதைக் காட்டுங்கள், நீங்கள் இவ்வாறு செய்யாவிட்டால் ஆண்டவர் உங்களை அழிக்க தன் கோபத்தைக் காட்டத் தயாராக இருக்கிறார். [QE][QS2]கர்த்தரை நம்பும் ஜனங்கள் சந்தோஷமாயிருப்பார்கள். [QE][QS]ஆனால் மற்ற ஜனங்கள் கவனமாக இருக்கவேண்டும். [QE][QS2]கர்த்தர் தமது கோபத்தை வெளிப்படுத்தத் தயாராக இருக்கிறார். [QE]