1. {#2இசைத் தலைவனுக்கு கர்த்தருடைய ஊழியனாகிய தாவீது எழுதிய பாடல். சவுலிடமிருந்தும் பிற பகைவர்களிடமிருந்தும் கர்த்தர் அவனைத் தப்புவித்தப்போது இப்பாடலை எழுதினான். } [QS]“எனது பெலனாகிய கர்த்தாவே, [QE][QS2]நான் உம்மை நேசிக்கிறேன்!” [QE][PBR]
2. [QS]கர்த்தர் என் பாறையாகவும், கோட்டையாகவும், எனக்குப் பாதுகாப்பான இடமாகவும் இருக்கிறார். [QE][QS2]பாதுகாப்பிற்காக ஓடும் பாறையாக என் தேவன் இருக்கிறார். [QE][QS]தேவன் எனக்குக் கேடகம். அவரது வல்லமை என்னைக் காப்பாற்றும். [QE][QS2]உயர்ந்த மலைகளில் மறைவிடமாக கர்த்தர் எனக்கு விளங்குகிறார். [QE][PBR]
3. [QS]எனது விரோதிகள் என்னை காயப்படுத்த முயன்றனர். [QE][QS2]ஆனால் நான் கர்த்தருடைய உதவியை நாடினேன், நான் என் பகைவரிடமிருந்து காப்பாற்றப்பட்டேன். [QE]
4. [QS]என் பகைவர்கள் என்னைக் கொல்ல முயன்றுகொண்டிருந்தார்கள்! [QE][QS]மரணத்தின் கயிறுகள் என்னைச் சூழ்ந்திருந்தன. [QE][QS2]மரணத்தின் இடங்களுக்கு என்னைக் கொண்டு செல்லும் பெருவெள்ளத்தில் நான் அகப்பட்டேன். [QE]
5. [QS]கல்லறையின் கயிறுகள் என்னைச் சுற்றிலுமிருந்தன. [QE][QS2]மரணக் கண்ணிகள் என் முன் கிடந்தன. [QE]
6. [QS]நெருக்கத்தில் கர்த்தருடைய உதவியை நாடினேன். [QE][QS2]ஆம், என் தேவனை நான் கூப்பிட்டேன். [QE][QS]தேவன் அவரது ஆலயத்தில் இருந்தார். [QE][QS2]என் குரலைக் கேட்டார். என் அபயக் குரல் அவர் காதில் விழுந்தது. [QE]
7. [QS]பூமி அதிர்ந்து நடுங்கிற்று. விண்ணின் அஸ்திபாரங்கள் அதிர்ந்தன. [QE][QS2]ஏனெனில் கர்த்தர் கோபமாயிருந்தார்! [QE]
8. [QS]தேவனுடைய மூக்கில் புகை கிளம்பிற்று. [QE][QS2]தேவனுடைய வாயில் நெருப்புக்கொழுந்துகள் தோன்றின. [QE][QS2]அவரிடமிருந்து எரியும் ஜூவாலைகள் பறந்தன. [QE]
9. [QS]கர்த்தர் வானத்தைக் கிழித்துக் கீழிறங்கினார்! [QE][QS2]திரண்ட காரிருளின் மேல் நின்றார்! [QE]
10. [QS]கர்த்தர் காற்றின் மேல் எழுந்து [QE][QS2]பறக்கும் கேருபீன்கள் மேலேறிப் பறந்துக்கொண்டிருந்தார். [QE]
11. [QS]அவரைச் சுற்றி கூடாரம்போல் சூழ்ந்திருந்த கருமேகங்களுக்குள் கர்த்தர் மறைந்திருந்தார். [QE][QS2]இடி மேகங்களினுள் அவர் ஒளிந்திருந்தார். [QE]
12. [QS]அப்போது தேவனுடைய பிரகாசிக்கும் ஒளி மேகங்களைக் கிழித்து வெளிவந்தது. [QE][QS2]புயலும் மின்னலும் தோன்றின. [QE]
13. [QS]கர்த்தர் வானத்திலிருந்து இடி இடித்தார். [QE][QS2]உன்னதமான தேவன் அவரது குரலைக் கேட்கச் செய்தார். கல்மழையும், மின்னல் ஒளியும் தோன்றின. [QE]
14. [QS]கர்த்தர் அம்புகளைச்[* அம்புகள் அது “மின்னல்.” ] செலுத்திப் பகைவரைச் சிதறடித்தார். [QE][QS2]கர்த்தர் மின்னலை அனுப்பினார் ஜனங்கள் குழப்பத்தில் சிதறடிக்கப்பட்டனர். [QE]
15. [QS]கர்த்தாவே, நீர் வல்லமையாகப் பேசினீர், [QE][QS2]உமது வாயிலிருந்து வல்லமையுள்ள காற்று வீசிற்று, தண்ணீரானது பின்னே தள்ளப்பட்டது. [QE][QS]கடலின் அடிப்பகுதியைப் பார்க்க முடிந்தது. [QE][QS2]பூமியின் அஸ்திபாரங்கள் எங்கள் கண்களுக்குப் புலப்பட்டன. [QE][PBR]
16. [QS]கர்த்தர் மேலிருந்து கீழிறங்கி என்னைக் காப்பாற்றினார். [QE][QS2]கர்த்தர் என்னைப் பிடித்து ஆழமான தண்ணீரிலிருந்து வெளியே எடுத்தார். [QE]
17. [QS]எனது பகைவர்கள் என்னிலும் பலவான்கள். [QE][QS2]அவர்கள் என்னைப் பகைத்தார்கள். [QE][QS]என்னைக் காட்டிலும் என் பகைவர்கள் பலசாலிகள். [QE][QS2]எனவே தேவன் என்னைக் காப்பாற்றினார். [QE]
18. [QS]நான் தொல்லையில் சிக்குண்டபோது என் பகைவர்கள் என்னைத் தாக்கினார்கள். [QE][QS2]ஆனால் கர்த்தரோ எனக்கு ஆதரவளித்தார். [QE]
19. [QS]கர்த்தர் என்னை நேசிக்கிறார், எனவே என்னைக் காப்பாற்றினார். [QE][QS2]என்னைப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றார். [QE]
20. [QS]நான் ஒன்றும் அறியாதவன் எனவே கர்த்தர் எனக்குரிய பலனைத் தருவார். [QE][QS2]நான் தவறேதும் செய்யவில்லை, எனவே எனக்காக அவர் நன்மைகளைச் செய்வார். [QE]
21. [QS]ஏனெனில் நான் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தேன். [QE][QS2]என் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்யவில்லை. [QE]
22. [QS]கர்த்தருடைய முடிவுகளை நான் நினைவு கூர்ந்தேன். [QE][QS2]அவர் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தேன்! [QE]
23. [QS]அவருக்கு முன் என்னைத் தூய்மையாகவும் [QE][QS2]களங்கமின்றியும் வைத்துக்கொண்டேன். [QE]
24. [QS]அதனால் கர்த்தர் எனக்கு வெகுமதி கொடுப்பார். [QE][QS2]ஏனெனில் நான் கபடமற்றவன். [QE][QS]தேவனுடைய பார்வையில் நான் தவறிழைக்கவில்லை. [QE][QS2]அவர் எனக்கு நன்மைகள் செய்வார். [QE][PBR]
25. [QS]கர்த்தாவே! ஒருவன் உம்மை உண்மையாய் நேசித்தால் நீர் உமது உண்மையான அன்பை அவனுக்குக் காண்பிப்பீர். [QE][QS2]ஆண்டவரே ஒருவன் உமக்கு உண்மையாய் இருந்தால் நீரும் அவனுக்கு உண்மையாய் இருப்பீர். [QE]
26. [QS]கர்த்தாவே, நல்லோருக்கும் தூயோருக்கும் நீர் நல்லவர், தூயவர். [QE][QS2]ஆனால் இழிவானவர்களையும், கபடதாரிகளையும் நீர் மிக நன்கு அறிவீர். [QE]
27. [QS]கர்த்தாவே, நீர் தாழ்மையுள்ளோருக்கு உதவுகிறீர். [QE][QS2]அகந்தையுள்ளோரைத் தாழ்த்துவீர். [QE]
28. [QS]கர்த்தாவே, என் விளக்கை ஏற்றுகிறீர். [QE][QS2]என் தேவனுடைய வெளிச்சம் என்னைச் சூழ்ந்த இருளை போக்குகிறது! [QE]
29. [QS]கர்த்தாவே, உமது உதவியால், நான் வீரரோடு ஓடுவேன். [QE][QS2]தேவனுடைய உதவியால், பகைவரின் சுவர்களில் ஏறுவேன். [QE][PBR]
30. [QS]தேவனுடைய வல்லமை முழுமையானது. [QE][QS2]கர்த்தருடைய வார்த்தைகள் புடமிடப்பட்டிருக்கிறது. [QE][QS2]அவரை நம்பும் ஜனங்களை அவர் பாதுகாக்கிறார். [QE]
31. [QS]கர்த்தரைத் தவிர தேவன் எவருமில்லை. [QE][QS2]நமது தேவனைத் தவிர வேறு பாறை இல்லை. [QE]
32. [QS]தேவன் எனக்கு பெலன் தந்து [QE][QS2]தூய வாழ்க்கை வாழ உதவுவார். [QE]
33. [QS]மானைப்போல ஓடுவதற்குத் தேவன் உதவுகிறார். [QE][QS2]உயர்ந்த இடங்களில் என்னை உறுதியாக நிலைநிறுத்துகிறார். [QE]
34. [QS]தேவன் என்னை யுத்தங்களுக்குப் பழக்குகிறார். [QE][QS2]எனவே எனது கரங்கள் பலமான வில்லை வளைக்கும். [QE][PBR]
35. [QS]தேவனே, நீர் என்னைப் பாதுகாத்து வெற்றியடையச் செய்தீர். [QE][QS2]உமது வலது கரத்தால் என்னைத் தாங்கினீர். [QE][QS2]என் சத்துருக்களை நான் வெல்ல உதவி செய்தீர். [QE]
36. [QS]நான் தடுமாறாமல் விரைந்து நடக்கும்படிக்கு உதவி செய்தீர். [QE][QS2]எனது கால்களையும், மூட்டுக்களையும் பலப்படுத்தினீர். [QE][PBR]
37. [QS]நான் என் பகைவர்களைத் துரத்திப் பிடிக்க முடியும். [QE][QS2]அவர்கள் அழியும்வரை நான் திரும்பேன். [QE]
38. [QS]எனது பகைவரைத் தோற்கடிப்பேன். [QE][QS2]அவர்கள் மீண்டும் எழுந்திரார்கள். [QE][QS2]என் பகைவர்கள் என் பாதங்களுக்குக் கீழிருப்பார்கள். [QE]
39. [QS]தேவனே, என்னை யுத்தங்களில் பலவான் ஆக்கினீர். [QE][QS2]என் பகைவர்கள் என் முன்னே விழும்படி செய்தீர். [QE]
40. [QS]என் பகைவரின் கழுத்தை முறிக்கப் பண்ணி, [QE][QS2]அவர்களை அழிக்கச் செய்தீர். [QE]
41. [QS]என் பகைவர்கள் உதவி வேண்டினார்கள். [QE][QS2]அவர்களைக் காப்பவர் எவருமில்லை. [QE][QS]கர்த்தரை நோக்கி முறையிட்டனர், [QE][QS2]அவர் பதிலளிக்கவில்லை. [QE]
42. [QS]நான் என் பகைவரைத் துண்டிப்பேன். [QE][QS2]அவர்கள் காற்றில் பறக்கும் தூளைப் போலாவார்கள். [QE][PS]அவர்களைத் துண்டாக நசுக்குவேன். [PE][PBR]
43. [QS]என்னிடம் போர் செய்கிற ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும். [QE][QS2]என்னை அத்தேசங்களின் தலைவனாக்கும். [QE][QS2]எனக்குத் தெரியாத ஜனங்களும் என்னைச் சேவிப்பார்கள். [QE]
44. [QS]அந்த ஜனங்கள் என்னைக் குறித்துக் கேள்விப்படுவார்கள். எனக்கு உடனே கீழ்ப்படிவார்கள். [QE][QS2]அந்த அயலார்கள் என்னைக் கண்டு அஞ்சுவார்கள். அந்த அயலார் நடுங்கி வீழ்வார்கள். [QE]
45. [QS]அவர்கள் தைரியமிழந்து [QE][QS2]தங்கள் மறைவிடங்களிலிருந்து நடுங்கிக்கொண்டே வெளிவருவார்கள். [QE][PBR]
46. [QS]கர்த்தர் உயிரோடிருக்கிறார்! [QE][QS2]நான் என் பாறையை (தேவனை) துதிப்பேன்! [QE][QS2]தேவன் என்னைக் காப்பாற்றுகிறார். [QE][QS2]அவர் மேன்மையானவர். [QE]
47. [QS]தேவன் எனக்காக என் பகைவர்களைத் தண்டித்தார். [QE][QS2]என் கட்டுப்பாட்டின் கீழ் ஜனங்களைக் கொண்டுவந்தார். [QE]
48. [QS]கர்த்தாவே, நீர் என் பகைவரிடமிருந்து என்னைக் காப்பாற்றினீர். [QE][PBR] [QS]எனக்கு எதிரான ஜனங்களைத் தோற்கடிக்க உதவினீர். [QE][QS2]கொடியோரிடமிருந்து என்னை மீட்டீர். [QE]
49. [QS]கர்த்தாவே, தேசங்களுக்கு முன்பாக உம்மைத் துதிப்பேன். [QE][QS2]உமது நாமத்தைக் குறித்துப் பாடல்கள் இசைப்பேன். [QE][PBR]
50. [QS]தான் ஏற்படுத்தின அரசன் யுத்தங்கள் பலவற்றில் வெல்ல கர்த்தர் உதவுகிறார்! [QE][QS2]தான் தேர்ந்தெடுத்த அரசனுக்குத் தன் உண்மையான அன்பை உணர்த்துகிறார். [QE][QS2]அவர் தாவீதுக்கும் அவன் சந்ததியினருக்கும் என்றென்றும் உண்மையுள்ளவராக இருக்கிறார். [QE]