1. “எனது பெலனாகிய கர்த்தாவே, [QBR2] நான் உம்மை நேசிக்கிறேன்!”
2. கர்த்தர் என் பாறையாகவும், கோட்டையாகவும், எனக்குப் பாதுகாப்பான இடமாகவும் இருக்கிறார். [QBR2] பாதுகாப்பிற்காக ஓடும் பாறையாக என் தேவன் இருக்கிறார். [QBR] தேவன் எனக்குக் கேடகம். அவரது வல்லமை என்னைக் காப்பாற்றும். [QBR2] உயர்ந்த மலைகளில் மறைவிடமாக கர்த்தர் எனக்கு விளங்குகிறார்.
3. எனது விரோதிகள் என்னை காயப்படுத்த முயன்றனர். [QBR2] ஆனால் நான் கர்த்தருடைய உதவியை நாடினேன், நான் என் பகைவரிடமிருந்து காப்பாற்றப்பட்டேன். [QBR]
4. என் பகைவர்கள் என்னைக் கொல்ல முயன்றுகொண்டிருந்தார்கள்! [QBR] மரணத்தின் கயிறுகள் என்னைச் சூழ்ந்திருந்தன. [QBR2] மரணத்தின் இடங்களுக்கு என்னைக் கொண்டு செல்லும் பெருவெள்ளத்தில் நான் அகப்பட்டேன். [QBR]
5. கல்லறையின் கயிறுகள் என்னைச் சுற்றிலுமிருந்தன. [QBR2] மரணக் கண்ணிகள் என் முன் கிடந்தன. [QBR]
6. நெருக்கத்தில் கர்த்தருடைய உதவியை நாடினேன். [QBR2] ஆம், என் தேவனை நான் கூப்பிட்டேன். [QBR] தேவன் அவரது ஆலயத்தில் இருந்தார். [QBR2] என் குரலைக் கேட்டார். என் அபயக் குரல் அவர் காதில் விழுந்தது. [QBR]
7. பூமி அதிர்ந்து நடுங்கிற்று. விண்ணின் அஸ்திபாரங்கள் அதிர்ந்தன. [QBR2] ஏனெனில் கர்த்தர் கோபமாயிருந்தார்! [QBR]
8. தேவனுடைய மூக்கில் புகை கிளம்பிற்று. [QBR2] தேவனுடைய வாயில் நெருப்புக்கொழுந்துகள் தோன்றின. [QBR2] அவரிடமிருந்து எரியும் ஜூவாலைகள் பறந்தன. [QBR]
9. கர்த்தர் வானத்தைக் கிழித்துக் கீழிறங்கினார்! [QBR2] திரண்ட காரிருளின் மேல் நின்றார்! [QBR]
10. கர்த்தர் காற்றின் மேல் எழுந்து [QBR2] பறக்கும் கேருபீன்கள் மேலேறிப் பறந்துக்கொண்டிருந்தார். [QBR]
11. அவரைச் சுற்றி கூடாரம்போல் சூழ்ந்திருந்த கருமேகங்களுக்குள் கர்த்தர் மறைந்திருந்தார். [QBR2] இடி மேகங்களினுள் அவர் ஒளிந்திருந்தார். [QBR]
12. அப்போது தேவனுடைய பிரகாசிக்கும் ஒளி மேகங்களைக் கிழித்து வெளிவந்தது. [QBR2] புயலும் மின்னலும் தோன்றின. [QBR]
13. கர்த்தர் வானத்திலிருந்து இடி இடித்தார். [QBR2] உன்னதமான தேவன் அவரது குரலைக் கேட்கச் செய்தார். கல்மழையும், மின்னல் ஒளியும் தோன்றின. [QBR]
14. கர்த்தர் அம்புகளைச் [*அம்புகள் அது “மின்னல்.”] செலுத்திப் பகைவரைச் சிதறடித்தார். [QBR2] கர்த்தர் மின்னலை அனுப்பினார் ஜனங்கள் குழப்பத்தில் சிதறடிக்கப்பட்டனர். [QBR]
15. கர்த்தாவே, நீர் வல்லமையாகப் பேசினீர், [QBR2] உமது வாயிலிருந்து வல்லமையுள்ள காற்று வீசிற்று, தண்ணீரானது பின்னே தள்ளப்பட்டது. [QBR] கடலின் அடிப்பகுதியைப் பார்க்க முடிந்தது. [QBR2] பூமியின் அஸ்திபாரங்கள் எங்கள் கண்களுக்குப் புலப்பட்டன.
16. கர்த்தர் மேலிருந்து கீழிறங்கி என்னைக் காப்பாற்றினார். [QBR2] கர்த்தர் என்னைப் பிடித்து ஆழமான தண்ணீரிலிருந்து வெளியே எடுத்தார். [QBR]
17. எனது பகைவர்கள் என்னிலும் பலவான்கள். [QBR2] அவர்கள் என்னைப் பகைத்தார்கள். [QBR] என்னைக் காட்டிலும் என் பகைவர்கள் பலசாலிகள். [QBR2] எனவே தேவன் என்னைக் காப்பாற்றினார். [QBR]
18. நான் தொல்லையில் சிக்குண்டபோது என் பகைவர்கள் என்னைத் தாக்கினார்கள். [QBR2] ஆனால் கர்த்தரோ எனக்கு ஆதரவளித்தார். [QBR]
19. கர்த்தர் என்னை நேசிக்கிறார், எனவே என்னைக் காப்பாற்றினார். [QBR2] என்னைப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றார். [QBR]
20. நான் ஒன்றும் அறியாதவன் எனவே கர்த்தர் எனக்குரிய பலனைத் தருவார். [QBR2] நான் தவறேதும் செய்யவில்லை, எனவே எனக்காக அவர் நன்மைகளைச் செய்வார். [QBR]
21. ஏனெனில் நான் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தேன். [QBR2] என் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்யவில்லை. [QBR]
22. கர்த்தருடைய முடிவுகளை நான் நினைவு கூர்ந்தேன். [QBR2] அவர் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தேன்! [QBR]
23. அவருக்கு முன் என்னைத் தூய்மையாகவும் [QBR2] களங்கமின்றியும் வைத்துக்கொண்டேன். [QBR]
24. அதனால் கர்த்தர் எனக்கு வெகுமதி கொடுப்பார். [QBR2] ஏனெனில் நான் கபடமற்றவன். [QBR] தேவனுடைய பார்வையில் நான் தவறிழைக்கவில்லை. [QBR2] அவர் எனக்கு நன்மைகள் செய்வார்.
25. கர்த்தாவே! ஒருவன் உம்மை உண்மையாய் நேசித்தால் நீர் உமது உண்மையான அன்பை அவனுக்குக் காண்பிப்பீர். [QBR2] ஆண்டவரே ஒருவன் உமக்கு உண்மையாய் இருந்தால் நீரும் அவனுக்கு உண்மையாய் இருப்பீர். [QBR]
26. கர்த்தாவே, நல்லோருக்கும் தூயோருக்கும் நீர் நல்லவர், தூயவர். [QBR2] ஆனால் இழிவானவர்களையும், கபடதாரிகளையும் நீர் மிக நன்கு அறிவீர். [QBR]
27. கர்த்தாவே, நீர் தாழ்மையுள்ளோருக்கு உதவுகிறீர். [QBR2] அகந்தையுள்ளோரைத் தாழ்த்துவீர். [QBR]
28. கர்த்தாவே, என் விளக்கை ஏற்றுகிறீர். [QBR2] என் தேவனுடைய வெளிச்சம் என்னைச் சூழ்ந்த இருளை போக்குகிறது! [QBR]
29. கர்த்தாவே, உமது உதவியால், நான் வீரரோடு ஓடுவேன். [QBR2] தேவனுடைய உதவியால், பகைவரின் சுவர்களில் ஏறுவேன்.
30. தேவனுடைய வல்லமை முழுமையானது. [QBR2] கர்த்தருடைய வார்த்தைகள் புடமிடப்பட்டிருக்கிறது. [QBR2] அவரை நம்பும் ஜனங்களை அவர் பாதுகாக்கிறார். [QBR]
31. கர்த்தரைத் தவிர தேவன் எவருமில்லை. [QBR2] நமது தேவனைத் தவிர வேறு பாறை இல்லை. [QBR]
32. தேவன் எனக்கு பெலன் தந்து [QBR2] தூய வாழ்க்கை வாழ உதவுவார். [QBR]
33. மானைப்போல ஓடுவதற்குத் தேவன் உதவுகிறார். [QBR2] உயர்ந்த இடங்களில் என்னை உறுதியாக நிலைநிறுத்துகிறார். [QBR]
34. தேவன் என்னை யுத்தங்களுக்குப் பழக்குகிறார். [QBR2] எனவே எனது கரங்கள் பலமான வில்லை வளைக்கும்.
35. தேவனே, நீர் என்னைப் பாதுகாத்து வெற்றியடையச் செய்தீர். [QBR2] உமது வலது கரத்தால் என்னைத் தாங்கினீர். [QBR2] என் சத்துருக்களை நான் வெல்ல உதவி செய்தீர். [QBR]
36. நான் தடுமாறாமல் விரைந்து நடக்கும்படிக்கு உதவி செய்தீர். [QBR2] எனது கால்களையும், மூட்டுக்களையும் பலப்படுத்தினீர்.
37. நான் என் பகைவர்களைத் துரத்திப் பிடிக்க முடியும். [QBR2] அவர்கள் அழியும்வரை நான் திரும்பேன். [QBR]
38. எனது பகைவரைத் தோற்கடிப்பேன். [QBR2] அவர்கள் மீண்டும் எழுந்திரார்கள். [QBR2] என் பகைவர்கள் என் பாதங்களுக்குக் கீழிருப்பார்கள். [QBR]
39. தேவனே, என்னை யுத்தங்களில் பலவான் ஆக்கினீர். [QBR2] என் பகைவர்கள் என் முன்னே விழும்படி செய்தீர். [QBR]
40. என் பகைவரின் கழுத்தை முறிக்கப் பண்ணி, [QBR2] அவர்களை அழிக்கச் செய்தீர். [QBR]
41. என் பகைவர்கள் உதவி வேண்டினார்கள். [QBR2] அவர்களைக் காப்பவர் எவருமில்லை. [QBR] கர்த்தரை நோக்கி முறையிட்டனர், [QBR2] அவர் பதிலளிக்கவில்லை. [QBR]
42. நான் என் பகைவரைத் துண்டிப்பேன். [QBR2] அவர்கள் காற்றில் பறக்கும் தூளைப் போலாவார்கள். [PE][PS] அவர்களைத் துண்டாக நசுக்குவேன்.
43. என்னிடம் போர் செய்கிற ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும். [QBR2] என்னை அத்தேசங்களின் தலைவனாக்கும். [QBR2] எனக்குத் தெரியாத ஜனங்களும் என்னைச் சேவிப்பார்கள். [QBR]
44. அந்த ஜனங்கள் என்னைக் குறித்துக் கேள்விப்படுவார்கள். எனக்கு உடனே கீழ்ப்படிவார்கள். [QBR2] அந்த அயலார்கள் என்னைக் கண்டு அஞ்சுவார்கள். அந்த அயலார் நடுங்கி வீழ்வார்கள். [QBR]
45. அவர்கள் தைரியமிழந்து [QBR2] தங்கள் மறைவிடங்களிலிருந்து நடுங்கிக்கொண்டே வெளிவருவார்கள்.
46. கர்த்தர் உயிரோடிருக்கிறார்! [QBR2] நான் என் பாறையை (தேவனை) துதிப்பேன்! [QBR2] தேவன் என்னைக் காப்பாற்றுகிறார். [QBR2] அவர் மேன்மையானவர். [QBR]
47. தேவன் எனக்காக என் பகைவர்களைத் தண்டித்தார். [QBR2] என் கட்டுப்பாட்டின் கீழ் ஜனங்களைக் கொண்டுவந்தார். [QBR]
48. கர்த்தாவே, நீர் என் பகைவரிடமிருந்து என்னைக் காப்பாற்றினீர். எனக்கு எதிரான ஜனங்களைத் தோற்கடிக்க உதவினீர். [QBR2] கொடியோரிடமிருந்து என்னை மீட்டீர். [QBR]
49. கர்த்தாவே, தேசங்களுக்கு முன்பாக உம்மைத் துதிப்பேன். [QBR2] உமது நாமத்தைக் குறித்துப் பாடல்கள் இசைப்பேன்.
50. தான் ஏற்படுத்தின அரசன் யுத்தங்கள் பலவற்றில் வெல்ல கர்த்தர் உதவுகிறார்! [QBR2] தான் தேர்ந்தெடுத்த அரசனுக்குத் தன் உண்மையான அன்பை உணர்த்துகிறார். [QBR2] அவர் தாவீதுக்கும் அவன் சந்ததியினருக்கும் என்றென்றும் உண்மையுள்ளவராக இருக்கிறார். [PE]