1. {தாவீதின் மிக்தாம் என்னும் பாடல்} [PS] தேவனே, நாம் உம்மைச் சார்ந்திருப்பதால் என்னைக் காத்துக்கொள்ளும். [QBR]
2. நான் கர்த்தரை நோக்கி, “கர்த்தாவே, நீர் என் ஆண்டவர், [QBR2] என்னிடமுள்ள நற்காரியம் ஒவ்வொன்றும் உம்மிடமிருந்து வருகிறது” என்றேன். [QBR]
3. பூமியிலுள்ள தன் சீடருக்குக் கர்த்தர் அற்புதமானவற்றைச் செய்கிறார். [QBR2] அந்த ஜனங்களை உண்மையாய் நேசிப்பதைக் கர்த்தர் காட்டுகிறார்.
4. பிற தெய்வங்களைத் தொழுதுகொள்ள ஓடும் ஜனங்களோ வேதனைக்கு ஆளாவார்கள். [QBR2] அவ்விக்கிரகங்களுக்கு அவர்கள் படைக்கும் இரத்த பலிகளில் நான் பங்கு கொள்ளமாட்டேன். [QBR2] அவ்விக்கிரகங்களின் பெயர்களையும் கூட நான் கூறமாட்டேன். [QBR]
5. என் பங்கும் பாத்திரமும் கர்த்தரிடமிருந்தே வரும். [QBR2] கர்த்தாவே, எனக்கு உதவும், என் பங்கை எனக்குத் தாரும். [QBR]
6. என் பரம்பரைச் சொத்து அற்புதமானது. [QBR2] நான் பெற்ற பங்கு மிக அழகானது. [QBR]
7. எனக்கு நன்கு போதித்த கர்த்தரைத் துதிப்பேன். [QBR2] இரவில் என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து இந்த ஆலோசனைகள் வருகின்றன.
8. என் கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன். [QBR2] அவர் என் வலதுபுறத்திலிருப்பதால் நிச்சயமாய் விலகமாட்டேன். [QBR]
9. என் இருதயமும் ஆத்துமாவும் மிகவும் மகிழும். [QBR2] என் உடலும் பாதுகாப்பாய் வாழும். [QBR]
10. ஏனெனில் கர்த்தாவே, என் ஆத்துமாவை மரணத்தின் இடத்தில் இருக்கவிடமாட்டீர். [QBR2] உம்மீது நம்பிக்கை வைத்த ஒருவரையும் கல்லறையில் அழுகிப்போக அனுமதிக்கமாட்டீர். [QBR]
11. சரியான வழியில் வாழ நீர் எனக்குப் போதிப்பீர். [QBR2] கர்த்தாவே, உம்மோடிருப்பதே எனக்குப் பூரண ஆனந்தம் தரும். [QBR2] உமது வலதுபுறத்தில் தங்குவதே என்றென்றும் இன்பம் தரும். [PE]