1. {தாவீதின் பாடல்} [PS] கர்த்தாவே, உமது பரிசுத்த கூடாரத்தில் யார் வாழக்கூடும்? [QBR2] உமது பரிசுத்த மலைகளில் யார் வாழக்கூடும்? [QBR]
2. தூய வாழ்க்கை வாழ்ந்து, நற்செயல்களை செய்பவனும், [QBR2] உள்ளத்திலிருந்து உண்மையைப் பேசுபவனும் உமது மலையில் வாழமுடியும். [QBR]
3. அம்மனிதன் பிறரைக் குறித்துத் தீமை கூறான். [QBR2] அம்மனிதன் அயலானுக்குத் தீங்கு செய்யான். [QBR2] அம்மனிதன் அவன் குடும்பத்தைக் குறித்து வெட்கம் தரும் மொழிகளைச் சொல்லான். [QBR]
4. தேவனை வெறுப்போரை அவன் மதியான். [QBR2] ஆனால் கர்த்தரைச் சேவிப்போரையெல்லாம் அம்மனிதன் மதிப்பான். [QBR] அவன் அயலானுக்கு வாக்களித்தால் [QBR2] அவற்றைச் சரியாகக் கடைப்பிடிப்பான். [QBR]
5. அவன் கடன் கொடுத்தால், வட்டி கேளான். [QBR2] குற்றமற்ற மனிதருக்குத் தீங்கிழைப்பதற்கு அவன் பணம் பெறான். அந்த நல்ல மனிதனைப்போல வாழும் ஒருவன் எப்போதும் நீங்காது தேவனுடைய அருகே இருப்பான். [PE]