1. {#2தாவீதின் பாடல் } [QS]கர்த்தாவே, உமது பரிசுத்த கூடாரத்தில் யார் வாழக்கூடும்? [QE][QS2]உமது பரிசுத்த மலைகளில் யார் வாழக்கூடும்? [QE]
2. [QS]தூய வாழ்க்கை வாழ்ந்து, நற்செயல்களை செய்பவனும், [QE][QS2]உள்ளத்திலிருந்து உண்மையைப் பேசுபவனும் உமது மலையில் வாழமுடியும். [QE]
3. [QS]அம்மனிதன் பிறரைக் குறித்துத் தீமை கூறான். [QE][QS2]அம்மனிதன் அயலானுக்குத் தீங்கு செய்யான். [QE][QS2]அம்மனிதன் அவன் குடும்பத்தைக் குறித்து வெட்கம் தரும் மொழிகளைச் சொல்லான். [QE]
4. [QS]தேவனை வெறுப்போரை அவன் மதியான். [QE][QS2]ஆனால் கர்த்தரைச் சேவிப்போரையெல்லாம் அம்மனிதன் மதிப்பான். [QE][QS]அவன் அயலானுக்கு வாக்களித்தால் [QE][QS2]அவற்றைச் சரியாகக் கடைப்பிடிப்பான். [QE]
5. [QS]அவன் கடன் கொடுத்தால், வட்டி கேளான். [QE][QS2]குற்றமற்ற மனிதருக்குத் தீங்கிழைப்பதற்கு அவன் பணம் பெறான். [QE][PBR] [QS]அந்த நல்ல மனிதனைப்போல வாழும் ஒருவன் எப்போதும் நீங்காது தேவனுடைய அருகே இருப்பான். [QE]