1. [QS]கர்த்தரைத் துதியுங்கள்! [QE][QS]மேலேயுள்ள தேவ தூதர்களே, [QE][QS2]பரலோகத்திலிருந்து கர்த்தரைத் துதியுங்கள்! [QE]
2. [QS]தேவதூதர்கள் எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்! [QE][QS2]அவரது சேனைகள்[* அவரது சேனைகள் “தேவதூதர்கள்” அல்லது “நட்சத்திரங்களும் கிரகங்களும்” அல்லது “படை வீரர்கள்” எனப்பொருள் தரும். ] எல்லோரும் அவரைத் துதியுங்கள்! [QE]
3. [QS]சூரியனும் சந்திரனும் கர்த்தரைத் துதியுங்கள்! [QE][QS2]நட்சத்திரங்களும் வானின் விளக்குகளும் அவரைத் துதியுங்கள்! [QE]
4. [QS]மிக உயரத்திலுள்ள பரலோகமே கர்த்தரைத் துதியுங்கள்! [QE][QS2]வானின் மேலுள்ள வெள்ளங்களே, அவரைத் துதியுங்கள்! [QE]
5. [QS]கர்த்தருடைய நாமத்தைத் துதி. [QE][QS2]ஏனெனில் தேவன் கட்டளையிட்டபோது, நாமெல்லோரும் படைக்கப்பட்டோம்! [QE]
6. [QS]இவையனைத்தும் என்றென்றும் தொடருமாறு தேவன் செய்தார். [QE][QS2]என்றும் முடிவடையாத சட்டங்களை தேவன் உண்டாக்கினார். [QE]
7. [QS]பூமியிலுள்ள அனைத்தும் கர்த்தரைத் துதியுங்கள்! [QE][QS2]சமுத்திரத்தின் பெரிய விலங்குகளே, கர்த்தரைத் துதியுங்கள்! [QE]
8. [QS]தேவன் நெருப்பையும் கல்மழையையும் பனியையும் [QE][QS2]புகையையும் எல்லாவிதமான புயற்காற்றையும் உண்டாக்கினார். [QE]
9. [QS]மலைகளையும் குன்றுகளையும் கனிதரும் மரங்களையும் [QE][QS2]கேதுருமரங்களையும் தேவன் உண்டாக்கினார். [QE]
10. [QS]எல்லாக் காட்டு மிருகங்களையும் நாட்டு மிருகங்களையும் [QE][QS2]ஊர்வனவற்றையும் பறவைகளையும் தேவன் உண்டாக்கினார். [QE]
11. [QS]பூமியின் தேசங்களையும் அரசர்களையும் தேவன் உண்டாக்கினார். [QE][QS2]தலைவர்களையும் நீதிபதிகளையும் தேவன் உண்டாக்கினார். [QE]
12. [QS]இளைஞர்களையும் இளம்பெண்களையும் தேவன் உண்டாக்கினார். [QE][QS2]முதியோரையும் இளையோரையும் தேவன் உண்டாக்கினார். [QE]
13. [QS]கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்! [QE][QS2]அவர் நாமத்தை என்றென்றும் [QE][QS2]மகிமைப்படுத்துங்கள்! [QE][QS2]பரலோகத்திலும், பூமியிலுமுள்ள அனைத்தும் அவரைத் துதிக்கட்டும்! [QE]
14. [QS]தேவன் அவரது ஜனங்களைப் பலப்படுத்துகிறார். [QE][QS2]தேவனைப் பின்பற்றுவோரை ஜனங்கள் வாழ்த்துவார்கள். [QE][QS2]ஜனங்கள் இஸ்ரவேலை வாழ்த்துவார்கள். [QE][QS2]தேவன் அவர்களுக்காகப் போராடுகிறார். [QE][QS2]கர்த்தரைத் துதியுங்கள். [QE][PBR]