1. [QS]கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள். [QE][QS2]எங்கள் தேவனுக்கு துதிகளைப் பாடுங்கள். [QE][QS2]அவரைத் துதிப்பது நல்லதும் களிப்புமானது. [QE]
2. [QS]கர்த்தர் எருசலேமைக் கட்டினார். [QE][QS2]சிறைப் பிடித்துச் செல்லப்பட்ட இஸ்ரவேலரை தேவன் மீண்டும் அழைத்து வந்தார். [QE]
3. [QS]தேவன் அவர்களின் உடைந்த இருதயங்களைக் குணமாக்கி, [QE][QS2]அவர்கள் காயங்களைக் கட்டுகிறார். [QE]
4. [QS]தேவன் நட்சத்திரங்களின் எண்ணிக்கையை அறிகிறார். [QE][QS2]ஒவ்வொன்றின் பெயரையும் தெரிந்திருக்கிறார். [QE]
5. [QS]நம் ஆண்டவர் மிகவும் மேன்மையானவர். [QE][QS2]அவர் மிகவும் வல்லமையுள்ளவர். [QE][QS2]அவர் அறிகிற காரியங்களுக்கு எல்லையில்லை. [QE]
6. [QS]கர்த்தர் எளியோரைத் தாங்கி உதவுகிறார். [QE][QS2]ஆனால் அவர் தீயோரை அவமானப்படுத்துகிறார். [QE]
7. [QS]கர்த்தருக்கு நன்றி சொல்லுங்கள். [QE][QS2]கின்னரங்களால் நமது தேவனைத் துதியுங்கள். [QE]
8. [QS]தேவன் வானத்தை மேகங்களால் நிரப்புகிறார். [QE][QS2]தேவன் பூமிக்காக மழையைப் பெய்யப்பண்ணுகிறார். [QE][QS2]தேவன் மலைகளின் மேல் புல் வளரும்படி செய்கிறார். [QE]
9. [QS]தேவன் மிருகங்களுக்கு உணவளிக்கிறார். [QE][QS2]தேவன் பறவைக் குஞ்சுகளுக்கு உணவூட்டுகிறார். [QE]
10. [QS]போர்க் குதிரைகளும் [QE][QS2]வல்லமையுள்ள வீரர்களும் அவரை மகிழ்ச்சிப்படுத்தமாட்டார்கள். [QE]
11. [QS]கர்த்தரைத் தொழுதுகொள்கிற ஜனங்கள் அவரை மகிழ்ச்சியாக்குகிறார்கள். [QE][QS2]அவரது உண்மை அன்பை நம்புகிற ஜனங்களைக் கண்டு அவர் சந்தோஷமடைகிறார். [QE]
12. [QS]எருசலேமே, கர்த்தரைத் துதி! [QE][QS2]சீயோனே, உன் தேவனைத் துதி! [QE]
13. [QS]எருசலேமே, தேவன் உன் கதவுகளை உறுதி யாக்குகிறார். [QE][QS2]தேவன் உன் நகரத்தின் ஜனங்களை ஆசீர்வதிக்கிறார். [QE]
14. [QS]உன் நாட்டிற்கு தேவன் சமாதானத்தைக் கொண்டுவந்தார். [QE][QS2]எனவே பகைவர்கள் போரில் உன் நாட்டுத் தானியத்தைக் கவர்ந்து செல்லவில்லை. [QE][QS2]உனக்கு உணவிற்குத் தேவையான தானியம் மிகுதியாக இருக்கிறது. [QE]
15. [QS]பூமிக்கு தேவன் கட்டளையிடுகிறார். [QE][QS2]அது உடனே கீழ்ப்படிகிறது. [QE]
16. [QS]நிலம் கம்பளியைப்போன்று வெண்மையாகும்வரை தேவன் பனியை விழப்பண்ணுகிறார். [QE][QS2]உறைந்த பனி காற்றினூடே தூசியைப்போல வீசும்படி தேவன் செய்கிறார். [QE]
17. [QS]தேவன் வானத்திலிருந்து கற்களைப்போல கல்மழையை பெய்யப் பண்ணுகிறார். [QE][QS2]அவர் அனுப்பும் குளிரைத் தாங்கிக்கொள்ள ஒருவனாலும் ஆகாது. [QE]
18. [QS]அப்போது, தேவன் மற்றொரு கட்டளையைத் தருகிறார், உடனே வெப்பமான காற்று மீண்டும் வீசுகிறது. [QE][QS2]பனி உருகுகிறது, தண்ணீர் பாய்ந்தோடத் தொடங்குகிறது. [QE][PBR]
19. [QS]தேவன் யாக்கோபிற்குத் தமது கட்டளைகளைக் கொடுத்தார். [QE][QS2]தேவன் இஸ்ரவேலுக்கு அவரது சட்டங்களைக் கொடுத்தார். [QE]
20. [QS]தேவன் வேறெந்த தேசத்திற்கும் இதைச் செய்யவில்லை. [QE][QS2]தேவன் வேறெந்த ஜனங்களுக்கும் தனது சட்டங்களைப் போதிக்கவில்லை. [QE][PBR] [QS]கர்த்தரைத் துதியுங்கள்! [QE][PBR]