1. கர்த்தரை துதி! [QBR2] என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி! [QBR]
2. என் வாழ்க்கை முழுவதும் நான் கர்த்தரைத் துதிப்பேன். [QBR2] என் வாழ்க்கை முழுவதும் நான் அவருக்குத் துதிகளைப் பாடுவேன். [QBR]
3. உதவிக்காக உங்கள் தலைவர்களை சார்ந்திராதீர்கள். [QBR2] ஜனங்களை நம்பாதீர்கள். ஏனெனில் ஜனங்கள் உங்களைக் காப்பாற்றமுடியாது. [QBR]
4. ஜனங்கள் மரித்தபின் புதைக்கப்படுவார்கள். [QBR2] அப்போது உதவி செய்வதற்கான அவர்கள் திட்டங்கள் எல்லாம் மறைந்துபோகும். [QBR]
5. ஆனால் தேவனிடம் உதவி வேண்டுகிற ஜனங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். [QBR2] அந்த ஜனங்கள் அவர்களின் தேவனாகிய கர்த்தரை சார்ந்திருக்கிறார்கள். [QBR]
6. கர்த்தர் பரலோகத்தையும், பூமியையும் உண்டாக்கினார். [QBR2] கர்த்தர் கடலையும் அதிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினார். [QBR2] கர்த்தர் அவற்றை என்றென்றும் பாதுகாப்பார். [QBR]
7. ஒடுக்கப்பட்ட ஜனங்களுக்கு ஆண்டவர் நீதி வழங்குகிறார். [QBR2] தேவன் ஏழைகளுக்கு உணவளிக்கிறார். [QBR] சிறைகளில் பூட்டி வைக்கப்பட்ட ஜனங்களைக் கர்த்தர் விடுவிக்கிறார். [QBR2]
8. குருடர் மீண்டும் காண்பதற்குக் கர்த்தர் உதவுகிறார். [QBR] தொல்லையில் சிக்குண்ட ஜனங்களுக்குக் கர்த்தர் உதவுகிறார். [QBR2] கர்த்தர் நல்லோரை நேசிக்கிறார். [QBR]
9. நம் நாட்டிலுள்ள அந்நியர்களைக் கர்த்தர் காப்பாற்றுகிறார். [QBR2] விதவைகளையும் அநாதைகளையும் கர்த்தர் கவனித்துக் காக்கிறார். [QBR2] ஆனால் கர்த்தர் தீயோரை அழிக்கிறார். [QBR]
10. கர்த்தர் என்றென்றும் அரசாளுவார்! [QBR2] சீயோனே, உன் தேவன் என்றென்றும் எப்போதும் அரசாளுவார்! கர்த்தரைத் துதியுங்கள்! [PE]