1. {#2தாவீதின் ஒரு பாடல் } [QS]கர்த்தர் என் கன்மலை. [QE][QS2]கர்த்தரைப் போற்றுங்கள். [QE][QS]கர்த்தர் என்னைப் போருக்குப் பழக்கப்படுத்துகிறார். [QE][QS2]கர்த்தர் என்னை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார். [QE]
2. [QS]கர்த்தர் என்னை நேசித்து என்னைப் பாதுக்காக்கிறார். [QE][QS2]மலைகளின் உயரத்தில் கர்த்தரே என் பாதுகாப்பிடம். [QE][QS]கர்த்தர் என்னை விடுவிக்கிறார். [QE][QS2]கர்த்தர் எனது கேடகம். [QE][QS]நான் அவரை நம்புகிறேன். [QE][QS2]நான் என் ஜனங்களை ஆள்வதற்குக் கர்த்தர் உதவுகிறார். [QE][PBR]
3. [QS]கர்த்தாவே, நீர் ஏன் ஜனங்களை முக்கியமானவர்களாகக் கருதுகிறீர்? [QE][QS2]நீர் ஏன் அவர்களைக் கண்ணோக்கிக்கொண்டு இருக்கிறீர்? [QE]
4. [QS]ஊதும் காற்றைப்போன்று ஒருவனின் வாழ்க்கை உள்ளது. [QE][QS2]மறையும் நிழலைப் போன்றது மனித வாழ்க்கை. [QE][PBR]
5. [QS]கர்த்தாவே, வானங்களைக் கிழித்துக் கீழே வாரும். [QE][QS2]மலைகளைத் தொடும், அவற்றிலிருந்து புகை எழும்பும். [QE]
6. [QS]கர்த்தாவே, மின்னலை அனுப்பி என் பகைவர்களை ஓடிவிடச் செய்யும். [QE][QS2]உமது “அம்புகளைச்” செலுத்தி அவர்கள் ஓடிப்போகச் செய்யும். [QE]
7. [QS]கர்த்தாவே, பரலோகத்திலிருந்து இறங்கி வந்து என்னைக் காப்பாற்றும்! [QE][QS2]பகைவர்களின் கடலில் நான் அமிழ்ந்துபோக விடாதேயும். [QE][QS2]இந்த அந்நியர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும். [QE]
8. [QS]இப்பகைவர்கள் பொய்யர்கள். [QE][QS2]அவர்கள் உண்மையில்லாதவற்றைக் கூறுகிறார்கள். [QE][PBR]
9. [QS]கர்த்தாவே, நீர் செய்யும் அற்புதமான காரியங்களைப்பற்றி நான் ஒரு புதிய பாடலைப் பாடுவேன். [QE][QS2]நான் உம்மைத் துதிப்பேன். பத்து நரம்பு வீணையை நான் மீட்டுவேன். [QE]
10. [QS]அரசர்கள் போர்களில் வெற்றி காண, கர்த்தர் உதவுகிறார். [QE][QS2]பகைவர்களின் வாள்களிலிருந்து கர்த்தர் அவரது ஊழியனாகிய தாவீதைக் காப்பாற்றினார். [QE][PBR]
11. [QS]இந்த அந்நியர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும். [QE][QS2]இப்பகைவர்கள் பொய்யர்கள். [QE][QS2]அவர்கள் உண்மையில்லாதவற்றைக் கூறுகிறார்கள். [QE]
12. [QS]நம் இளமகன்கள் பலத்த மரங்களைப் போன்றவர்கள். [QE][QS2]நம் இளமகள்கள் அரண்மனையின் அழகிய அலங்கார ஒப்பனைகளைப் போன்றிருக்கிறார்கள். [QE]
13. [QS]நம் களஞ்சியங்கள் பலவகை தானியங்களால் நிரம்பியிருக்கின்றன. [QE][QS2]நம் வயல்களில் ஆயிரமாயிரம் ஆடுகள் உள்ளன. [QE]
14. [QS]நம் வீரர்கள் பாதுகாப்பாயிருக்கிறார்கள். [QE][QS2]எந்தப் பகைவனும் உள்ளே நுழைய முயலவில்லை. [QE][QS2]நாங்கள் போருக்குச் செல்லவில்லை. [QE][QS2]ஜனங்கள் நம் தெருக்களில் கூக்குரல் எழுப்பவில்லை. [QE][PBR]
15. [QS]இத்தகைய காலங்களில் ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். [QE][QS2]கர்த்தர் அவர்கள் தேவனாக இருக்கும்போது ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். [QE]