1. {#2தாவீதின் துதிப் பாடல்களுள் ஒன்று } [QS]கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேளும். [QE][QS2]என் ஜெபத்திற்குச் செவிகொடும். [QE][QS2]நீர் என் ஜெபத்திற்குப் பதில் தாரும். [QE][QS2]நீர் உண்மையாகவே நல்லவரும் நேர்மையானவருமானவர் என்பதை எனக்குக் காட்டும். [QE]
2. [QS]உமது ஊழியனாகிய என்னை நியாயந்தீர்க்காதேயும். [QE][QS2]என் ஆயுள் முழுவதும் ஒருபோதும் களங்கமற்றவன் என நான் நியாயந்தீர்க்கப்படமாட்டேன். [QE]
3. [QS]ஆனாலும் என் பகைவர்கள் என்னைத் துரத்துகிறார்கள். [QE][QS2]அவர்கள் என் உயிரை புழுதிக்குள் தள்ளிவிட்டார்கள். [QE][QS2]அவர்கள் நீண்ட காலத்திற்கு முன் மரித்தோரைப்போன்று என்னை இருண்ட கல்லறைக்குள் தள்ளுகிறார்கள். [QE]
4. [QS]நான் எல்லாவற்றையும் விட்டுவிடத் துணிகிறேன். [QE][QS2]என் தைரியத்தை நான் இழந்துகொண்டிருக்கிறேன். [QE]
5. [QS]ஆனால் பல்லாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த காரியங்களை நான் நினைவுக்கூருகிறேன். [QE][QS2]நீர் செய்த பலக் காரியங்களையும் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். [QE][QS2]உமது மிகுந்த வல்லமையால் நீர் செய்தக் காரியங்களைக் குறித்து நான் பேசிக்கொண்டிருக்கிறேன்! [QE]
6. [QS]கர்த்தாவே, நான் என் கரங்களைத் தூக்கி, உம்மிடம் ஜெபம் செய்கிறேன். [QE][QS2]வறண்ட நிலம் மழைக்காக எதிர் நோக்கியிருப்பதைப்போல நான் உமது உதவிக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன். [QE]
7. [QS]விரையும், கர்த்தாவே, எனக்கு பதில் தாரும். [QE][QS2]நான் என் தைரியத்தை இழந்தேன். [QE][QS2]என்னிடமிருந்து அகன்று திரும்பிவிடாதேயும். [QE][QS2]கல்லறையில் மாண்டுகிடக்கும் மரித்தோரைப்போன்று நான் மரிக்கவிடாதேயும். [QE]
8. [QS]கர்த்தாவே, இக்காலையில் உமது உண்மை அன்பை எனக்குக் காட்டும். [QE][QS2]நான் உம்மை நம்புகிறேன். [QE][QS2]நான் செய்யவேண்டியவற்றை எனக்குக் காட்டும். [QE][QS2]நான் என் உயிரை உமது கைகளில் தருகிறேன். [QE]
9. [QS]கர்த்தாவே, நான் பாதுகாப்பு நாடி உம்மிடம் வருகிறேன். [QE][QS2]என் பகைவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும். [QE]
10. [QS]நான் செய்யவேண்டுமென நீர் விரும்புகின்றவற்றை எனக்குக் காட்டும். [QE][QS2]நீரே என் தேவன். [QE]
11. [QS]கர்த்தாவே, என்னை வாழவிடும். [QE][QS2]அப்போது ஜனங்கள் உமது நாமத்தைத் துதிப்பார்கள். [QE][QS]நீர் உண்மையாகவே நல்லவரென்பதை எனக்குக் காட்டும். [QE][QS2]என் பகைவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும். [QE]
12. [QS]கர்த்தாவே, உமது அன்பை எனக்குக் காட்டும். [QE][QS2]என்னைக் கொல்ல முயல்கிற என் பகைவர்களைத் தோற்கடியும். [QE][QS2]ஏனெனில் நான் உமது ஊழியன். [QE]