1. {#2தாவீதின் பாடல்களில் ஒன்று. அவன் குகையிலிருந்தபோது செய்த ஜெபம் } [QS]நான் கர்த்தரை உதவிக்காகக் கூப்பிடுவேன். [QE][QS2]நான் கர்த்தரிடம் ஜெபம் செய்வேன். [QE]
2. [QS]நான் கர்த்தரிடம் என் சிக்கல்களைச் சொல்வேன். [QE][QS2]நான் கர்த்தரிடம் என் தொல்லைகளைச் சொல்வேன். [QE]
3. [QS]என் பகைவர்கள் எனக்குக் கண்ணி வைத்திருக்கிறார்கள். [QE][QS2]நான் எல்லாவற்றையும் விட்டுவிடத் தயாராயிருக்கிறேன். [QE][QS2]ஆனால் கர்த்தர் எனக்கு நடக்கின்றவற்றை அறிந்திருக்கிறார். [QE][PBR]
4. [QS]நான் சுற்றிலும் பார்த்தேன், என் நண்பர்களைக் காணவில்லை. [QE][QS2]எனக்கு ஓடிச் செல்ல இடமில்லை. என்னைக் காப்பாற்ற முயல்பவர் எவருமில்லை. [QE]
5. [QS]எனவே நான் கர்த்தரிடம் உதவிக்காக அழுதேன். [QE][QS2]கர்த்தாவே, நீரே என் பாதுகாப்பிடம். [QE][QS2]கர்த்தாவே, என்னைத் தொடர்ந்து வாழவிட உம்மால் ஆகும். [QE]
6. [QS]கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும். நீர் எனக்கு மிகுதியாகத் தேவைப்படுகிறீர். [QE][QS2]என்னைத் துரத்தி வருகிற ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும். [QE][QS2]அவர்கள் என்னைக் காட்டிலும் மிகுந்த பலவான்கள். [QE]
7. [QS]இந்தக் கண்ணியிலிருந்து தப்பிச்செல்ல எனக்கு உதவும். [QE][QS2]அப்போது நான் உமது நாமத்தைத் துதிப்பேன். [QE][QS2]நீர் என்னைக் கவனித்து வந்ததால் நல்லோர் என்னோடு சேர்ந்து கொண்டாடுவார்கள். [QE]