1. {#2தாவீதின் துதிப் பாடல்களுள் ஒன்று } [QS]கர்த்தாவே, நான் உதவிக்காக உம்மைக் கூப்பிடுகிறேன். [QE][QS2]நான் உம்மிடம் ஜெபம் செய்யும்போது, எனக்குச் செவிகொடும். [QE][QS2]விரைவாக எனக்கு உதவும்! [QE]
2. [QS]கர்த்தாவே, என் ஜெபத்தை ஏற்றுக் கொள்ளும். [QE][QS2]எரியும் நறுமணப் பொருள்களின் பரிசைப் போலவும், மாலையின் பலியாகவும் அது இருக்கட்டும். [QE][PBR]
3. [QS]கர்த்தாவே, நான் கூறுபவற்றில் கட்டுப் பாட்டோடிருக்க எனக்கு உதவும். [QE][QS2]நான் கூறுபவற்றில் கவனமாக இருக்க எனக்கு உதவும். [QE]
4. [QS]தீயவற்றை செய்ய நான் விரும்பாதிருக்கும்படி பாரும். [QE][QS2]தீயோர் தவறுகளைச் செய்யும்போது அவர்களோடு சேராதிருக்குமாறு என்னைத் தடுத்துவிடும். [QE][QS2]தீயோர் களிப்போடு செய்யும் காரியங்களில் நான் பங்குகொள்ளாதிருக்கும்படி செய்யும். [QE]
5. [QS]நல்லவன் ஒருவன் என்னைத் திருத்த முடியும். [QE][QS2]அது அவன் நற்செயலாகும். [QE][QS]உம்மைப் பின்பற்றுவோர் என்னை விமர்சிக்கட்டும். [QE][QS2]அது அவர்கள் செய்யத்தக்க நல்ல காரியமாகும். [QE][QS2]நான் அதை ஏற்றுக்கொள்வேன். [QE][QS2]ஆனால் தீயோர் செய்யும் தீயவற்றிற்கெதிராக நான் எப்போதும் ஜெபம் செய்கிறேன். [QE]
6. [QS]அவர்களின் அரசர்கள் தண்டிக்கப்படட்டும். [QE][QS2]அப்போது நான் உண்மை பேசினேன் என்பதை ஜனங்கள் அறிவார்கள். [QE]
7. [QS]ஜனங்கள் நிலத்தைத் தோண்டி உழுவார்கள், சேற்றை எங்கும் பரப்புவார்கள். [QE][QS2]அவ்வாறே கல்லறையில் எங்கள் எலும்புகளும் எங்கும் பரந்து கிடக்கும். [QE]
8. [QS]என் ஆண்டவராகிய கர்த்தாவே, நான் உதவிக்காக உம்மை நோக்கிப் பார்ப்பேன். [QE][QS2]நான் உம்மை நம்புகிறேன். [QE][QS2]தயவுசெய்து என்னை மரிக்கவிடாதேயும். [QE]
9. [QS]தீயோர் எனக்குக் கண்ணிகளை வைத்தார்கள். [QE][QS2]அவர்கள் கண்ணிகளில் நான் விழாதபடி செய்யும். [QE][QS2]அவர்கள் என்னைக் கண்ணிக்குள் அகப்படுத்தாதபடி பாரும். [QE]
10. [QS]நான் பாதிக்கப்படாது நடந்து செல்கையில் கெட்ட [QE][QS2]ஜனங்கள் தங்கள் கண்ணிக்குள் தாங்களே விழட்டும். [QE]