1. {#2இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப் பாடல் } [QS]கர்த்தாவே, என்னைப் பொல்லாதவர்களிடமிருந்து காப்பாற்றும். [QE][QS2]கொடியோரிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும். [QE]
2. [QS]அந்த ஜனங்கள் பொல்லாதவற்றைச் செய்யத் திட்டமிடுகிறார்கள். [QE][QS2]அவர்கள் எப்போதும் சண்டையிட ஆரம்பிக்கிறார்கள். [QE]
3. [QS]அவர்களது நாவுகள் விஷமுள்ள பாம்புகளைப் போன்றவை. [QE][QS2]அவர்களது நாவுகளின் கீழ் பாம்பின் விஷம் இருக்கும். [QE]
4. [QS]கர்த்தாவே, கெட்ட ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும். [QE][QS2]கொடியோரிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும். [QE][QS2]அவர்கள் என்னைத் துரத்தி என்னைக் காயப்படுத்த முயல்கிறார்கள். [QE]
5. [QS]அப்பெருமைக்காரர்கள் எனக்காக ஒரு கண்ணியை வைத்தார்கள். [QE][QS2]என்னைப் பிடிக்க அவர்கள் ஒரு வலையை விரித்தார்கள். [QE][QS2]அவர்கள் என் பாதையில் ஒரு கண்ணியை வைத்தார்கள். [QE][PBR]
6. [QS]கர்த்தாவே, நீரே என் தேவன். [QE][QS2]கர்த்தாவே, நீர் என் ஜெபத்திற்குச் செவிகொடும். [QE]
7. [QS]கர்த்தாவே, நீர் என் பெலனான ஆண்டவர். [QE][QS2]நீரே என் மீட்பர். [QE][QS2]போரில் என் தலையைக் காக்கும் கவசத்தைப்போன்று இருக்கிறீர். [QE]
8. [QS]கர்த்தாவே, அந்தத் தீய ஜனங்கள் பெற விரும்புகின்றவற்றை பெற அனுமதிக்காதிரும். [QE][QS2]அவர்கள் திட்டங்கள் வெற்றியடையாமல் போகச் செய்யும். [QE][PBR]
9. [QS]கர்த்தாவே, என் பகைவர்கள் வெற்றிப் பெறவிடாதேயும். [QE][QS2]அந்த ஜனங்கள் தீய காரியங்களைத் திட்டமிடுகிறார்கள். [QE][QS2]ஆனால் அத்தீமைகள் அவர்களுக்கே நேரிடுமாறு செய்யும். [QE]
10. [QS]நெருப்புத் தழலை அவர்கள் தலையின் மீது ஊற்றும். [QE][QS2]என் பகைவர்களை நெருப்பில் வீசும். [QE][QS2]அவர்களைக் குழியில் தள்ளும், [QE][QS2]அவர்கள் மீண்டும் வெளியேறி வராதபடி செய்யும். [QE]
11. [QS]கர்த்தாவே, அப்பொய்யர்களை வாழவிடாதேயும். [QE][QS2]அத்தீயோருக்குத் தீமைகள் நிகழச் செய்யும். [QE]
12. [QS]கர்த்தர் ஏழைகளைத் தக்கபடி நியாயந்தீர்ப்பார் என நான் அறிவேன். [QE][QS2]தேவன் திக்கற்றோருக்கு உதவுவார். [QE]
13. [QS]கர்த்தாவே, நல்லோர் உமது நாமத்தைத் துதிப்பார்கள். [QE][QS2]நல்லோர் உம்மைத் தொழுதுகொள்வார்கள். [QE]