1. {தாவீது இராகத் தலைவனுக்கு அளித்த பாடல்} [PS] “தேவன் இல்லை” என்று மூடன் தன் உள்ளத்தில் சொல்லிக்கொள்வான். [QBR2] கொடிய, சீர்கெட்ட காரியங்களை மூடர்கள் செய்வார்கள். [QBR2] அவர்களுள் ஒருவனும் நல்லதைச் செய்வதில்லை.
2. கர்த்தர் பரலோகத்திலிருந்து கீழே ஜனங்களைப் பார்ப்பார். [QBR2] ஞானவானைப் பார்க்க கர்த்தர் முயன்றார். [QBR] (ஞானமுள்ளவன் தேவனிடம் உதவி கேட்பான்.) [QBR]
3. ஆனால் எல்லோரும் தேவனைவிட்டு விலகிப் போனார்கள். [QBR2] எல்லா ஜனங்களும் தீயோராய் மாறினார்கள். ஒருவன் கூட நல்லதைச் செய்யவில்லை.
4. தீயோர் என் ஜனங்களை அழித்தனர். [QBR2] அத்தீயோர் தேவனை அறியார்கள். [QBR] தீயோருக்கு மிகுதியாய் உணவு உண்டு. [QBR2] கர்த்தரை அவர்கள் ஆராதிப்பதில்லை. [QBR]
5. (5-6) ஏழையின் அறிவுரையை அத்தீயோர் கேளார்கள். [QBR2] ஏனெனில் ஏழை தேவனை நம்பி வாழ்வான். [QBR] தேவன் நல்லவர்களோடு இருப்பார். [QBR2] எனவே தீயோர் மிகவும் அச்சம் கொள்வார்கள்.
6. சீயோன் (மலை) மேல் உள்ளவரே இஸ்ரவேலைக் காப்பாற்ற முடியும். [QBR2] கர்த்தர் தாமே இஸ்ரவேலைக் காப்பவர்! [QBR] கர்த்தருடைய ஜனங்கள் அழைத்துச் செல்லப்பட்டுச் சிறைக் கைதிகளாக்கப்பட்டனர். [QBR2] ஆனால் கர்த்தரோ தம் ஜனங்களைத் திரும்ப அழைத்து வருவார். [QBR2] அப்போது யாக்கோபுக்கு (இஸ்ரவேல்) மிகவும் மகிழ்ச்சியுண்டாகும். [PE]
7.