1. {#2தாவீதின் ஒரு பாடல் } [QS]தேவனே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிக்கிறேன். [QE][QS2]எல்லா தெய்வங்களின் முன்பாகவும் நான் உமது பாடல்களைப் பாடுவேன். [QE]
2. [QS]தேவனே, உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் குனிந்து வணங்குவேன். [QE][QS2]நான் உமது நாமத்தையும், உண்மை அன்பையும் நேர்மை யையும் துதிப்பேன். [QE][QS2]உமது வார்த்தையின் வல்லமையால் நீர் புகழ்பெற்றவர். இப்போது நீர் அதை இன்னமும் மேன்மையாகச் செய்தீர். [QE]
3. [QS]தேவனே, உதவிக்காக நான் உம்மைக் கூப்பிட்டேன். [QE][QS2]நீர் எனக்குப் பதில் தந்தீர்! நீர் எனக்குப் பெலன் அளித்தீர். [QE]
4. [QS]கர்த்தாவே, நீர் சொல்கின்றவற்றைக் கேட்கும்போது [QE][QS2]பூமியின் எல்லா அரசர்களும் உம்மைத் துதிப்பார்கள். [QE]
5. [QS]அவர்கள் கர்த்தருடைய வழியைக் குறித்துப் பாடுவார்கள். [QE][QS2]ஏனெனில் கர்த்தருடைய மகிமை மிக மேன்மையானது. [QE]
6. [QS]தேவன் மிக முக்கியமானவர். [QE][QS2]ஆனால் அவர் தாழ்மையான ஜனங்களுக்காக கவலைப்படு கிறார். [QE][QS2]பெருமைக்காரர்கள் செய்வதை தேவன் அறிகிறார். ஆனால் அவர் அவர்களிடமிருந்து வெகுதூரம் விலகியிருக்கிறார். [QE]
7. [QS]தேவனே, நான் தொல்லையில் சிக்குண்டால், என்னை உயிரோடு வாழவிடும். [QE][QS2]என் பகைவர்கள் என்னிடம் கோபமாயிருந்தால், அவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும். [QE]
8. [QS]கர்த்தாவே, நீர் வாக்களித்தவற்றை எனக்குத் தாரும். [QE][QS2]கர்த்தாவே, உமது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். [QE][QS2]கர்த்தாவே, நீர் எங்களை உண்டாக்கினீர், எனவே எங்களை விட்டுவிடாதேயும்! [QE]