தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ESV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. [QS]பாபிலோனின் நதிகளின் அருகே நாங்கள் அமர்ந்து [QE][QS2]சீயோனை நினைத்தவாறே அழுதோம். [QE]
2. [QS]அருகேயிருந்த அலரிச்செடிகளில் எங்கள் [QE][QS2]கின்னரங்களைத் தொங்கவிட்டோம். [QE]
3. [QS]பாபிலோனின் எங்களைப் பிடித்தவர்கள் எங்களைப் பாடச் சொன்னார்கள். [QE][QS2]அவர்கள் எங்களிடம் மகிழ்ச்சியான பாடல்களைப் பாடச் சொன்னார்கள். [QE][QS2]சீயோனைக் குறித்துப் பாடல்களைப் பாடச் சொன்னார்கள். [QE]
4. [QS]ஆனால் வெளிநாட்டில் நாங்கள் கர்த்தருடைய [QE][QS2]பாடல்களைப் பாட முடியவில்லை! [QE]
5. [QS]எருசலேமே, நான் உன்னை எப்போதேனும் மறந்தால், [QE][QS2]நான் என்றும் பாடலை பாடமாட்டேன் என்று நம்புகிறேன். [QE]
6. [QS]எருசலேமே, நான் உன்னை எப்போதேனும் மறந்தால், [QE][QS2]நான் என்றும் பாடேன். [QE][QS2]நான் உன்னை ஒருபோதும் மறக்கமாட்டேனென வாக்களிக்கிறேன். [QE][PBR]
7. [QS]ஆண்டவரே ஏதோமியர்களை நினையும். [QE][QS2]எருசலேம் வீழ்ந்த நாளில் அவர்கள், “அதைத் தரைமட்டமாக இடித்து அழித்துவிடுங்கள்” [QE][QS2]என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். [QE]
8. [QS]பாபிலோனே நீ அழிக்கப்படுவாய்! [QE][QS2]நீ பெற வேண்டிய தண்டனையை அளிக்கும் மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன். [QE][QS2]எங்களை நீ துன்புறுத்தியதைப்போல் உன்னையும் துன்புறுத்துகிற மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன். [QE]
9. [QS]உனது குழந்தைகளை இழுத்துச்சென்று, [QE][QS2]அவர்களைப் பாறையில் மோதி அழிக்கிற மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன். [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 137 / 150
1 பாபிலோனின் நதிகளின் அருகே நாங்கள் அமர்ந்து சீயோனை நினைத்தவாறே அழுதோம். 2 அருகேயிருந்த அலரிச்செடிகளில் எங்கள் கின்னரங்களைத் தொங்கவிட்டோம். 3 பாபிலோனின் எங்களைப் பிடித்தவர்கள் எங்களைப் பாடச் சொன்னார்கள். அவர்கள் எங்களிடம் மகிழ்ச்சியான பாடல்களைப் பாடச் சொன்னார்கள். சீயோனைக் குறித்துப் பாடல்களைப் பாடச் சொன்னார்கள். 4 ஆனால் வெளிநாட்டில் நாங்கள் கர்த்தருடைய பாடல்களைப் பாட முடியவில்லை! 5 எருசலேமே, நான் உன்னை எப்போதேனும் மறந்தால், நான் என்றும் பாடலை பாடமாட்டேன் என்று நம்புகிறேன். 6 எருசலேமே, நான் உன்னை எப்போதேனும் மறந்தால், நான் என்றும் பாடேன். நான் உன்னை ஒருபோதும் மறக்கமாட்டேனென வாக்களிக்கிறேன். 7 ஆண்டவரே ஏதோமியர்களை நினையும். எருசலேம் வீழ்ந்த நாளில் அவர்கள், “அதைத் தரைமட்டமாக இடித்து அழித்துவிடுங்கள்” என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். 8 பாபிலோனே நீ அழிக்கப்படுவாய்! நீ பெற வேண்டிய தண்டனையை அளிக்கும் மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன். எங்களை நீ துன்புறுத்தியதைப்போல் உன்னையும் துன்புறுத்துகிற மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன். 9 உனது குழந்தைகளை இழுத்துச்சென்று, அவர்களைப் பாறையில் மோதி அழிக்கிற மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 137 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References