1. கர்த்தரைத் துதிப்போம்! கர்த்தருடைய நாமத்தைத் துதிப்போம்! [QBR2] கர்த்தருடைய ஊழியர்களே, அவரைத் துதியுங்கள்! [QBR]
2. தேவனுடைய ஆலய முற்றத்தில், [QBR2] கர்த்தருடைய ஆலயத்தில் நிற்கும் ஜனங்களே, அவரைத் துதியுங்கள். [QBR]
3. கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள். [QBR2] அவரது நாமத்தைத் துதியுங்கள், ஏனெனில் அது இன்பமானது.
4. கர்த்தர் யாக்கோபைத் தேர்ந்தெடுத்தார். [QBR2] இஸ்ரவேல் தேவனுக்கு உரியது. [QBR]
5. கர்த்தர் உயர்ந்தவர் என நான் அறிகிறேன்! [QBR2] நமது ஆண்டவர் எல்லா தெய்வங்களிலும் மேன்மையானவர்! [QBR]
6. பரலோகத்திலும், பூமியிலும், கடல்களிலும் ஆழமான. [QBR2] சமுத்திரங்களிலும், கர்த்தர் அவருக்கு வேண்டியவற்றையெல்லாம் செய்கிறார். [QBR]
7. பூமியின்மேல் மேகங்களை தேவன் உண்டாக்குகிறார். [QBR2] தேவன் மின்னலையும் மழையையும் உண்டாக்குகிறார். [QBR2] தேவன் காற்றையும் உண்டாக்குகிறார். [QBR]
8. எகிப்தின் எல்லா முதற்பேறான ஆண்களையும், [QBR2] எல்லா முதற்பேறான மிருகங்களையும் தேவன் அழித்தார். [QBR]
9. எகிப்தில் தேவன் பல அற்புதங்களையும் அதிசயங்களையும் நிகழ்த்தினார். [QBR2] பார்வோனுக்கும் அவனது அதிகாரிகளுக்கும் தேவன் அக்காரியங்களை நிகழப்பண்ணினார். [QBR]
10. தேவன் பல தேசங்களை முறியடித்தார். [QBR2] தேவன் வல்லமையுடைய அரசர்களைக் கொன்றார். [QBR]
11. எமோரியரின் அரசனாகிய சீகோனை தேவன் தோற்கடித்தார். [QBR2] பாஷானின் அரசனாகிய ஓகையும் தேவன் தோற்கடித்தார். [QBR2] கானானின் எல்லா தேசங்களையும் தேவன் தோற்கடித்தார். [QBR]
12. தேவன் இஸ்ரவேலருக்கு அவர்களின் தேசத்தைக் கொடுத்தார். [QBR2] அவரது ஜனங்களுக்கு தேவன் அத்தேசத்தைக் கொடுத்தார்.
13. கர்த்தாவே, உமது நாமம் என்றென்றும் புகழ்வாய்ந்ததாயிருக்கும். [QBR2] கர்த்தாவே, ஜனங்கள் உம்மை என்றென்றைக்கும் எப்போதும் நினைவுக்கூருவார்கள். [QBR]
14. கர்த்தர் தேசங்களைத் தண்டித்தார். [QBR2] ஆனால் கர்த்தர் அவரது ஊழியரிடம் தயவுடையவராயிருந்தார். [QBR]
15. பிற ஜனங்களின் தெய்வங்கள் வெறும் பொன்னாலும் வெள்ளியாலுமாகிய சிலைகள் மட்டுமே. [QBR2] அவர்களின் தெய்வங்கள் ஜனங்கள் செய்த வெறும் சிலைகள் மட்டுமே. [QBR]
16. சிலைகளுக்கு வாய்கள் இருந்தன, ஆனால் பேச முடியவில்லை. [QBR2] சிலைகளுக்குக் கண்கள் இருந்தன, ஆனால் பார்க்க முடியவில்லை. [QBR]
17. சிலைகளுக்குக் காதுகள் இருந்தன, ஆனால் கேட்க முடியவில்லை. [QBR2] சிலைகளுக்கு மூக்குகள் இருந்தன, ஆனால் முகர்ந்துபார்க்க முடியவில்லை. [QBR]
18. அச்சிலைகளைச் செய்த ஜனங்களும் அவற்றைப் போலாவார்கள். [QBR2] ஏனெனில் அச்சிலைகள் அவர்களுக்கு உதவ வேண்டுமென்று அவர்கள் நம்பினார்கள்.
19. இஸ்ரவேலின் குடும்பமே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்! [QBR2] ஆரோனின் குடும்பமே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்! [QBR]
20. லேவியின் குடும்பமே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்! [QBR2] கர்த்தரைப் பின்பற்றுவோரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்! [QBR]
21. கர்த்தர் சீயோனிலிருந்தும், [QBR2] அவரது வீடாகிய எருசலேமிலிருந்தும் போற்றப்படுகிறார். கர்த்தரைத் துதியுங்கள்! [PE]