1. {ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்} [PS] கர்த்தாவே, நான் மிகுந்த துன்பத்திற்குள்ளாயிருக்கிறேன், [QBR2] எனவே நான் உதவிக்காக உம்மைக் கூப்பிட்டுக்கொண்டிருக்கிறேன். [QBR]
2. என் ஆண்டவரே, எனக்குச் செவிகொடும். [QBR2] உதவிக்காக எழுப்பும் என் குரலைக் கேளும். [QBR]
3. கர்த்தாவே, ஜனங்கள் செய்கிற எல்லாப் பாவங்களுக்காகவும் [QBR2] நீர் அவர்களைத் தண்டித்தால் ஒருவனும் உயிரோடிருக்கமாட்டான். [QBR]
4. கர்த்தாவே, உமது ஜனங்களை மன்னியும். [QBR2] அப்போது உம்மைத் தொழுதுகொள்வதற்கு ஜனங்கள் இருப்பார்கள்.
5. கர்த்தர் எனக்கு உதவும்படி, நான் காத்துக்கொண்டிருக்கிறேன். [QBR2] என் ஆத்துமா அவருக்காகக் காத்திருக்கிறது. கர்த்தர் கூறுவதை நான் நம்புகிறேன். [QBR]
6. நான் என் ஆண்டவருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன். [QBR2] காலை வேளைக்கெனக் காத்து நிற்கும் காவலாளரைப்போல் நான் இருக்கிறேன். [QBR]
7. இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு. கர்த்தரிடம் மட்டுமே உண்மையான அன்பைக் காண முடியும். [QBR2] கர்த்தர் நம்மை மீண்டும் மீண்டும் காப்பாற்றுகிறார். [QBR2]
8. கர்த்தர் இஸ்ரவேலை அவர்களின் எல்லாப் பாவங்களுக்காகவும் மன்னிப்பார். [PE]