1. {ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்} [PS] கர்த்தர் நம்மை மீண்டும் விடுவிக்கும்போது [QBR2] அது ஒரு கனவைப் போன்றிருக்கும். [QBR]
2. நாம் சிரித்துக்கொண்டும் மகிழ்ச்சியுடன் பாடல்களைப் [QBR2] பாடிக்கொண்டும் இருப்போம்! பிற தேசத்து ஜனங்கள், [QBR2] “இஸ்ரவேலின் ஜனங்களுக்குக் கர்த்தர் ஒரு அற்புதமான காரியத்தைச் செய்தார்!” என்பார்கள். [QBR]
3. ஆம், கர்த்தர் அந்த அற்புதமான காரியத்தை நமக்குச் செய்ததால் [QBR2] நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.
4. கர்த்தாவே, பாலைவன நீரூற்றுக்கள் மீண்டும் ஓடிவரும் வெள்ளத்தின் [QBR2] தண்ணீரால் நிரம்புவதைப்போல எங்களை மீண்டும் விடுவியும். [QBR]
5. ஒருவன் விதைகளை விதைக்கும்போது துக்கமாயிருக்கலாம். [QBR2] ஆனால் அவன் பயிர்களின் பலனை அறுவடை செய்யும்போது மகிழ்ச்சியோடிருப்பான். [QBR]
6. அவன் விதைகளை வயலுக்கு எடுத்துச் செல்லும்போது அழக்கூடும், [QBR2] ஆனால் அறுவடையைக் கொண்டுவரும்போது அவன் மகிழ்ச்சியோடிருப்பான். [PE]