1. {#2ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல் } [QS]கர்த்தர் நம்மை மீண்டும் விடுவிக்கும்போது [QE][QS2]அது ஒரு கனவைப் போன்றிருக்கும். [QE]
2. [QS]நாம் சிரித்துக்கொண்டும் மகிழ்ச்சியுடன் பாடல்களைப் [QE][QS2]பாடிக்கொண்டும் இருப்போம்! பிற தேசத்து ஜனங்கள், [QE][QS2]“இஸ்ரவேலின் ஜனங்களுக்குக் கர்த்தர் ஒரு அற்புதமான காரியத்தைச் செய்தார்!” என்பார்கள். [QE]
3. [QS]ஆம், கர்த்தர் அந்த அற்புதமான காரியத்தை நமக்குச் செய்ததால் [QE][QS2]நாம் மகிழ்ச்சியடைய வேண்டும். [QE][PBR]
4. [QS]கர்த்தாவே, பாலைவன நீரூற்றுக்கள் மீண்டும் ஓடிவரும் வெள்ளத்தின் [QE][QS2]தண்ணீரால் நிரம்புவதைப்போல எங்களை மீண்டும் விடுவியும். [QE]
5. [QS]ஒருவன் விதைகளை விதைக்கும்போது துக்கமாயிருக்கலாம். [QE][QS2]ஆனால் அவன் பயிர்களின் பலனை அறுவடை செய்யும்போது மகிழ்ச்சியோடிருப்பான். [QE]
6. [QS]அவன் விதைகளை வயலுக்கு எடுத்துச் செல்லும்போது அழக்கூடும், [QE][QS2]ஆனால் அறுவடையைக் கொண்டுவரும்போது அவன் மகிழ்ச்சியோடிருப்பான். [QE]