1. {#2ஆலயத்திற்குப் போகும்போது பாடுவதற்கென்று தாவீது அளித்த பாடல் } [QS]கர்த்தர் நமது சார்பில் இருந்திராவிட்டால், நமக்கு என்ன நேர்ந்திருக்கும்? [QE][QS2]இஸ்ரவேலே, எனக்குப் பதில் கூறு. [QE]
2. [QS]ஜனங்கள் நம்மைத் தாக்கியபோது, கர்த்தர் நமது சார்பில் [QE][QS2]இருந்திராவிட்டால் நமக்கு என்ன நேர்ந்திருக்கும்? [QE]
3. [QS]கோபம் வந்தபோதெல்லாம் நம் பகைவர்கள் நம்மை [QE][QS2]உயிரோடு விழுங்கியிருப்பார்கள். [QE]
4. [QS]நம்மை அடித்துச்செல்லும் பெருவெள்ளத்தைப் போன்றும், [QE][QS2]நம்மை அமிழ்த்துவிடும் நதியைப் போன்றும் [QE][QS2]நம் பகைவர்களின் சேனைகள் நம்மிடம் நடந்துகொண்டிருக்கும். [QE]
5. [QS]நம் வாய்மட்டும் எழுந்து நம்மை அமிழ்த்திவிடும் [QE][QS2]தண்ணீரைப்போன்று அப்பெருமைக்காரர்கள் நடந்துக்கொண்டிருப்பார்கள். [QE][PBR]
6. [QS]கர்த்தரைத் துதியுங்கள்! [QE][QS2]நம் பகைவர்கள் நம்மைப் பிடித்துக்கொல்வதற்குக் கர்த்தர் அனுமதிக்கவில்லை. [QE][PBR]
7. [QS]வலையில் அகப்பட்டுப் பின்னர் தப்பிச்சென்ற பறவையைப் போல நாம் இருக்கிறோம். [QE][QS2]வலை அறுந்தது, நாம் தப்பினோம். [QE]
8. [QS]நமக்கு உதவி கர்த்தரிடமிருந்து வந்தது. [QE][QS2]கர்த்தரே பரலோகத்தையும் பூமியையும் உண்டாக்கினார். [QE]