1. {#2ஆலயத்திற்குப் போகும்போது பாடும்படி தாவீது அளித்த பாடல் } [QS]ஜனங்கள், “கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம்” என்று கூறியபோது [QE][QS2]நான் மிகவும் மகிழ்ந்தேன். [QE]
2. [QS]இதோ, நாங்கள் எருசலேமின் வாசல்கள் அருகே நின்றுகொண்டிருக்கிறோம். [QE]
3. [QS]இது புதிய எருசலேம். [QE][QS2]ஒரே நகரமாக இது மீண்டும் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. [QE]
4. [QS]இங்கே இஸ்ரவேலின் கோத்திரங்கள் போவதுண்டு. [QE][QS2]கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பதற்கு இஸ்ரவேல் ஜனங்கள் அங்கே செல்வார்கள். [QE][QS2]அவை கர்த்தருக்குரிய கோத்திரங்கள் ஆகும். [QE]
5. [QS]அங்கு அரசர்கள் ஜனங்களை நியாயந்தீர்ப்பதற்குத் தங்கள் சிங்காசனங்களை நிறுவினார்கள். [QE][QS2]தாவீதின் குடும்பத்து அரசர்கள் அங்குத் தங்கள் சிங்காசனங்களை அமைத்தார்கள். [QE][PBR]
6. [QS]எருசலேமின் சமானத்திற்காக ஜெபம் செய்யுங்கள். [QE][QS2]“உம்மை நேசிக்கும் ஜனங்கள் அங்கு சமாதானத்தைக் காண்பார்கள் என நான் நம்புகிறேன். [QE]
7. [QS]உங்கள் வீடுகளின் உள்ளே சமாதானம் நிலவும் என நான் நம்புகிறேன். [QE][QS2]உங்கள் பெரிய கட்டிடங்களில் பாதுகாப்பு இருக்கும் என நான் நம்புகிறேன்.” [QE][PBR]
8. [QS]என் சகோதரர்கள், சுற்றத்தினர் ஆகியோரின் நன்மைக்காக, [QE][QS2]இங்கு சமாதானம் நிலவவேண்டுமென நான் ஜெபிக்கிறேன். [QE]
9. [QS]நமது தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தின் நன்மைக்காக, [QE][QS2]இந்நகரில் நன்மைகள் நிகழ வேண்டுமென நான் ஜெபம் செய்கிறேன். [QE]