1. {ஆலயத்திற்குப் போகும்போது பாடும்படி தாவீது அளித்த பாடல்} [PS] ஜனங்கள், “கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம்” என்று கூறியபோது [QBR2] நான் மிகவும் மகிழ்ந்தேன். [QBR]
2. இதோ, நாங்கள் எருசலேமின் வாசல்கள் அருகே நின்றுகொண்டிருக்கிறோம். [QBR]
3. இது புதிய எருசலேம். [QBR2] ஒரே நகரமாக இது மீண்டும் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. [QBR]
4. இங்கே இஸ்ரவேலின் கோத்திரங்கள் போவதுண்டு. [QBR2] கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பதற்கு இஸ்ரவேல் ஜனங்கள் அங்கே செல்வார்கள். [QBR2] அவை கர்த்தருக்குரிய கோத்திரங்கள் ஆகும். [QBR]
5. அங்கு அரசர்கள் ஜனங்களை நியாயந்தீர்ப்பதற்குத் தங்கள் சிங்காசனங்களை நிறுவினார்கள். [QBR2] தாவீதின் குடும்பத்து அரசர்கள் அங்குத் தங்கள் சிங்காசனங்களை அமைத்தார்கள்.
6. எருசலேமின் சமானத்திற்காக ஜெபம் செய்யுங்கள். [QBR2] “உம்மை நேசிக்கும் ஜனங்கள் அங்கு சமாதானத்தைக் காண்பார்கள் என நான் நம்புகிறேன். [QBR]
7. உங்கள் வீடுகளின் உள்ளே சமாதானம் நிலவும் என நான் நம்புகிறேன். [QBR2] உங்கள் பெரிய கட்டிடங்களில் பாதுகாப்பு இருக்கும் என நான் நம்புகிறேன்.”
8. என் சகோதரர்கள், சுற்றத்தினர் ஆகியோரின் நன்மைக்காக, [QBR2] இங்கு சமாதானம் நிலவவேண்டுமென நான் ஜெபிக்கிறேன். [QBR]
9. நமது தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தின் நன்மைக்காக, [QBR2] இந்நகரில் நன்மைகள் நிகழ வேண்டுமென நான் ஜெபம் செய்கிறேன். [PE]