1. {#2ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல் } [QS]நான் தொல்லைகளில் சிக்குண்டிருந்தபோது, [QE][QS2]உதவிக்காக கர்த்தரைக் கூப்பிட்டேன், அவர் என்னைக் காப்பாற்றினார்! [QE]
2. [QS]கர்த்தாவே, என்னைப்பற்றிப் பொய் கூறியவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும். [QE][QS2]உண்மையில்லாதவற்றை அந்த ஜனங்கள் கூறினார்கள். [QE][PBR]
3. [QS]பொய்யரே, நீங்கள் பெறப்போவதை அறிவீர்களா? [QE][QS2]நீங்கள் அடையப்போவதை அறிவீர்களா? [QE]
4. [QS]வீரனின் கூரிய அம்புகளும், [QE][QS2]சுடும் தழலும் உன்னைத் தண்டிக்கும். [QE][PBR]
5. [QS]பொய்யர்களின் அருகே வாழ்வது மேசேக்கில் வாழ்வதைப் போன்றதும் [QE][QS2]கேதாரின் கூடாரங்களண்டையில் வாழ்வதைப் போன்றதுமாகும். [QE]
6. [QS]சமாதானத்தை வெறுக்கிற ஜனங்களோடு [QE][QS2]நான் நீண்டகாலம் வாழ்ந்திருக்கிறேன். [QE]
7. [QS]நான் சமாதானம் வேண்டும் என்றேன். [QE][QS2]ஆனால் அவர்கள் போரை விரும்புகிறார்கள். [QE]