5. நான் தொல்லையில் உழன்றேன். எனவே உதவிக்காகக் கர்த்தரைக் கூப்பிட்டேன். கர்த்தர் எனக்குப் பதிலளித்து என்னை விடுவித்தார்.
|
6. கர்த்தர் என்னோடிருப்பதால் நான் பயப்படமாட்டேன். என்னைத் துன்புறுத்த ஜனங்கள் எதையும் செய்யமுடியாது.
|
10. பல பகைவர்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள். ஆனால் கர்த்தருடைய வல்லமையால் நான் அவர்களைத் தோற்கடிப்பேன்.
|
11. பகைவர்கள் பலர் என்னை மீண்டும் மீண்டும் சூழ்ந்துகொண்டார்கள். கர்த்தருடைய வல்லமையால் நான் அவர்களைத் தோற்கடித்தேன்.
|
12. தேனீக்களின் கூட்டத்தைப்போல பகைவர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள். ஆனால் வேகமாக எரியும் பதரைப்போல் அவர்கள் சீக்கிரமாக அழிந்துபோனார்கள். கர்த்தருடைய வல்லமையால் நான் அவர்களைத் தோற்கடித்தேன்.
|
15. நல்லோரின் வீடுகளில் வெற்றியின் கொண்டாட்டத்தை நீங்கள் கேட்கமுடியும். கர்த்தர் தமது மிகுந்த வல்லமையை மீண்டும் காட்டினார்.
|
16. கர்த்தருடைய கரங்கள் வெற்றியால் உயர்த்தப்பட்டன. கர்த்தர் தமது மிகுந்த வல்லமையை மீண்டும் காட்டினார்.
|
21. கர்த்தாவே, என் ஜெபத்திற்குப் பதிலளித்ததற்காக நான் உமக்கு நன்றிக் கூறுவேன். நீர் என்னைக் காப்பாற்றியதற்காக நான் உமக்கு நன்றிக் கூறுவேன்.
|
26. கர்த்தருடைய நாமத்தால் வருகிற மனிதனை வரவேற்றுக்கொள்ளுங்கள்" என்றார்கள். ஆசாரியர்கள், "நாங்கள் உங்களைக் கர்த்தருடைய வீட்டிற்கு வரவேற்கிறோம்!
|
27. கர்த்தரே தேவன், அவர் எங்களை ஏற்றுக்கொள்கிறார். பலிக்காக ஆட்டுக்குட்டியைக் கட்டி, பலிபீடத்தின் கொம்புகளுக்கு சுமந்து செல்லுங்கள்" என்றார்கள்.
|