1. [QS]கர்த்தரே தேவன் என்பதால் அவரை மகிமைப்படுத்துங்கள். [QE][QS2]அவரது உண்மை அன்பு என்றென்றைக்கும் தொடரும்! [QE]
2. [QS]இஸ்ரவேலே, இதைக்கூறு, [QE][QS2]“அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்!” [QE]
3. [QS]ஆசாரியர்களே, இதைக் கூறுங்கள்: [QE][QS2]“அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்!” [QE]
4. [QS]கர்த்தரைத் தொழுதுகொள்கிற ஜனங்களே, இதைக் கூறுங்கள்: [QE][QS2]“அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்!” [QE][PBR]
5. [QS]நான் தொல்லையில் உழன்றேன். [QE][QS]எனவே உதவிக்காகக் கர்த்தரைக் கூப்பிட்டேன். [QE][QS2]கர்த்தர் எனக்குப் பதிலளித்து என்னை விடுவித்தார். [QE]
6. [QS]கர்த்தர் என்னோடிருப்பதால் நான் பயப்படமாட்டேன். [QE][QS2]என்னைத் துன்புறுத்த ஜனங்கள் எதையும் செய்யமுடியாது. [QE]
7. [QS]கர்த்தர் எனக்கு உதவி செய்கிறவர். [QE][QS2]என் பகைவர்கள் தோல்வியுறுவதை நான் காண்பேன். [QE]
8. [QS]ஜனங்களை நம்புவதைக் காட்டிலும் [QE][QS2]கர்த்தரை நம்புவது நல்லது. [QE]
9. [QS]உங்கள் தலைவர்களை நம்புவதைக் காட்டிலும் [QE][QS2]கர்த்தரை நம்புவது நல்லது. [QE][PBR]
10. [QS]பல பகைவர்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள், [QE][QS2]ஆனால் கர்த்தருடைய வல்லமையால் நான் அவர்களைத் தோற்கடிப்பேன். [QE]
11. [QS]பகைவர்கள் பலர் என்னை மீண்டும் மீண்டும் சூழ்ந்துகொண்டார்கள். [QE][QS2]கர்த்தருடைய வல்லமையால் நான் அவர்களைத் தோற்கடித்தேன். [QE]
12. [QS]தேனீக்களின் கூட்டத்தைப்போல பகைவர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள். [QE][QS2]ஆனால் வேகமாக எரியும் பதரைப்போல் அவர்கள் சீக்கிரமாக அழிந்துபோனார்கள். [QE][QS2]கர்த்தருடைய வல்லமையால் நான் அவர்களைத் தோற்கடித்தேன். [QE]
13. [QS]என் பகைவர்கள் என்னைத் தாக்கி அழிக்க முயன்றனர். [QE][QS2]ஆனால் கர்த்தர் எனக்கு உதவினார். [QE]
14. [QS]கர்த்தர் எனக்குப் பெலனும் வெற்றியின் பாடலுமாயிருக்கிறார். [QE][QS2]கர்த்தர் என்னைக் காப்பாற்றுகிறார்! [QE]
15. [QS]நல்லோரின் வீடுகளில் வெற்றியின் கொண்டாட்டத்தை நீங்கள் கேட்கமுடியும். [QE][QS2]கர்த்தர் தமது மிகுந்த வல்லமையை மீண்டும் காட்டினார். [QE]
16. [QS]கர்த்தருடைய கரங்கள் வெற்றியால் உயர்த்தப்பட்டன. [QE][QS2]கர்த்தர் தமது மிகுந்த வல்லமையை மீண்டும் காட்டினார். [QE][PBR]
17. [QS]நான் வாழ்வேன், மரிக்கமாட்டேன். [QE][QS2]கர்த்தர் செய்தவற்றை நான் கூறுவேன். [QE]
18. [QS]கர்த்தர் என்னைத் தண்டித்தார், [QE][QS2]ஆனால் அவர் என்னை மரிக்கவிடமாட்டார். [QE]
19. [QS]நல்ல வாயிற்கதவுகளே, எனக்காகத் திறவுங்கள், [QE][QS2]நான் உள்ளே வந்து கர்த்தரைத் தொழுதுகொள்வேன். [QE]
20. [QS]அவை கர்த்தருடைய கதவுகள், [QE][QS2]நல்லோர் மட்டுமே அவற்றின் வழியாகச் செல்ல முடியும். [QE]
21. [QS]கர்த்தாவே, என் ஜெபத்திற்குப் பதிலளித்ததற்காக நான் உமக்கு நன்றிக் கூறுவேன். [QE][QS2]நீர் என்னைக் காப்பாற்றியதற்காக நான் உமக்கு நன்றிக் கூறுவேன். [QE][PBR]
22. [QS]கட்டிடம் கட்டுவோர் வேண்டாமெனத் தள்ளிய [QE][QS2]கல்லே மூலைக்கு தலைக்கல்லாயிற்று. [QE]
23. [QS]கர்த்தரே இதைச் செய்தார், [QE][QS2]அது அற்புதமானதென நாங்கள் நினைக்கிறோம். [QE]
24. [QS]இந்நாள் கர்த்தர் செய்த நாள். [QE][QS2]இன்று நாம் களிப்போடு மகிழ்ச்சியாயிருப்போம்! [QE][PBR]
25. [QS][+ ஜனங்கள்,] “கர்த்தரைத் துதிப்போம்! [QE][QS2]கர்த்தர் நம்மைக் காப்பாற்றினார்! [QE]
26. [QS]கர்த்தருடைய நாமத்தால் வருகிற மனிதனை வரவேற்றுக்கொள்ளுங்கள்” என்றார்கள். [QE][QS2][+ ஆசாரியர்கள்,] “நாங்கள் உங்களைக் [QE][QS2]கர்த்தருடைய வீட்டிற்கு வரவேற்கிறோம்! [QE]
27. [QS]கர்த்தரே தேவன், அவர் எங்களை ஏற்றுக்கொள்கிறார். [QE][QS2]பலிக்காக ஆட்டுக்குட்டியைக் கட்டி, பலிபீடத்தின் கொம்புகளுக்கு சுமந்து செல்லுங்கள்” என்றார்கள். [QE][PBR]
28. [QS]கர்த்தாவே, நீரே என் தேவன், நான் உமக்கு நன்றிக் கூறுகிறேன். [QE][QS2]நான் உம்மைத் துதிக்கிறேன். [QE]
29. [QS]கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள். [QE][QS2]அவரது உண்மை அன்பு என்றென்றைக்கும் நிலைக்கும். [QE]