1. கர்த்தாவே, நாங்கள் எந்த மகிமையையும் ஏற்றுக்கொள்வதில்லை. [QBR2] மகிமை உமக்கே உரியது. [QBR2] உமது அன்பினாலும் நாங்கள் உம்மை நம்பக்கூடும் என்பதாலும் மகிமை உமக்கே உரியது. [QBR]
2. எங்கள் தேவன் எங்கே என்று [QBR2] ஏன் தேசங்கள் ஆச்சரியப்பட வேண்டும்? [QBR]
3. தேவன் பரலோகத்தில் இருக்கிறார். [QBR2] அவர் தாம் விரும்புகின்றவற்றையெல்லாம் செய்கிறார். [QBR]
4. அத்தேசங்களின் “தெய்வங்கள்” பொன்னாலும் வெள்ளியாலும் செய்யப்பட்ட சிலைகள் மட்டுமே. [QBR2] அவை சில மனிதர்கள் செய்த சிலைகள் மட்டுமே. [QBR]
5. அச்சிலைகளுக்கு வாய் உண்டு, ஆனால் பேச இயலாது. [QBR2] அவற்றிற்குக் கண்கள் உண்டு, ஆனால் காண இயலாது. [QBR]
6. அவற்றிற்குக் காதுகளுண்டு, ஆனால் கேட்க இயலாது. [QBR2] அவற்றிற்கு மூக்குகள் உண்டு, ஆனால் முகர இயலாது. [QBR]
7. அவற்றிற்குக் கைகள் உண்டு, ஆனால் உணர இயலாது. [QBR2] அவற்றிற்குக் கால்கள் உண்டு, ஆனால் நடக்க இயலாது. [QBR2] அவற்றின் தொண்டையிலிருந்து எந்தவிதமான சத்தமும் வெளிவருவதில்லை. [QBR]
8. அச்சிலைகளைச் செய்து, [QBR2] அவற்றில் நம்பிக்கை வைக்கிற ஜனங்களும் அவற்றைப் போலாவார்கள். [QBR]
9. இஸ்ரவேலின் ஜனங்களே, கர்த்தரை நம்புங்கள்! [QBR2] கர்த்தர் அவர்களின் பெலனும், கேடகமுமானவர். [QBR]
10. ஆரோனின் குடும்பத்தாரே, கர்த்தரை நம்புங்கள்! [QBR2] கர்த்தர் அவர்களின் பெலனும் கேடகமுமானவர். [QBR]
11. கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள்! [QBR2] கர்த்தர் அவர்களின் பெலனும் கேடகமுமானவர்.
12. கர்த்தர் நம்மை நினைவுக்கூருகிறார், [QBR2] கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார். [QBR] கர்த்தர் இஸ்ரவேலை ஆசீர்வதிப்பார். [QBR2] கர்த்தர் ஆரோனின் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார். [QBR]
13. கர்த்தர் தம்மைப் பின்பற்றும் [QBR2] உயர்ந்தோரையும் தாழ்ந்தோரையும் ஆசீர்வதிப்பார். [QBR]
14. கர்த்தர் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் [QBR2] அதிகமதிகமாகக் கொடுப்பார் என்று நான் நம்புகிறேன். [QBR]
15. கர்த்தர் பரலோகத்தையும் பூமியையும் உண்டாக்கினார். [QBR2] கர்த்தர் உங்களை வரவேற்கிறார்! [QBR]
16. பரலோகம் கர்த்தருக்குச் சொந்தமானது. [QBR2] ஆனால் பூமியை ஜனங்களுக்குக் கொடுத்தார். [QBR]
17. மரித்தவர்களும், [QBR2] கல்லறைக்குச் செல்பவர்களும் கர்த்தரைத் துதிப்பதில்லை. [QBR]
18. நாம் கர்த்தரை துதிப்போம். [QBR2] இது முதல் என்றென்றைக்கும் நாம் அவரை துதிப்போம். அல்லேலூயா! கர்த்தரைத் துதிப்போம். [PE]