1. [QS]கர்த்தாவே, நாங்கள் எந்த மகிமையையும் ஏற்றுக்கொள்வதில்லை. [QE][QS2]மகிமை உமக்கே உரியது. [QE][QS2]உமது அன்பினாலும் நாங்கள் உம்மை நம்பக்கூடும் என்பதாலும் மகிமை உமக்கே உரியது. [QE]
2. [QS]எங்கள் தேவன் எங்கே என்று [QE][QS2]ஏன் தேசங்கள் ஆச்சரியப்பட வேண்டும்? [QE]
3. [QS]தேவன் பரலோகத்தில் இருக்கிறார். [QE][QS2]அவர் தாம் விரும்புகின்றவற்றையெல்லாம் செய்கிறார். [QE]
4. [QS]அத்தேசங்களின் “தெய்வங்கள்” பொன்னாலும் வெள்ளியாலும் செய்யப்பட்ட சிலைகள் மட்டுமே. [QE][QS2]அவை சில மனிதர்கள் செய்த சிலைகள் மட்டுமே. [QE]
5. [QS]அச்சிலைகளுக்கு வாய் உண்டு, ஆனால் பேச இயலாது. [QE][QS2]அவற்றிற்குக் கண்கள் உண்டு, ஆனால் காண இயலாது. [QE]
6. [QS]அவற்றிற்குக் காதுகளுண்டு, ஆனால் கேட்க இயலாது. [QE][QS2]அவற்றிற்கு மூக்குகள் உண்டு, ஆனால் முகர இயலாது. [QE]
7. [QS]அவற்றிற்குக் கைகள் உண்டு, ஆனால் உணர இயலாது. [QE][QS2]அவற்றிற்குக் கால்கள் உண்டு, ஆனால் நடக்க இயலாது. [QE][QS2]அவற்றின் தொண்டையிலிருந்து எந்தவிதமான சத்தமும் வெளிவருவதில்லை. [QE]
8. [QS]அச்சிலைகளைச் செய்து, [QE][QS2]அவற்றில் நம்பிக்கை வைக்கிற ஜனங்களும் அவற்றைப் போலாவார்கள். [QE]
9. [QS]இஸ்ரவேலின் ஜனங்களே, கர்த்தரை நம்புங்கள்! [QE][QS2]கர்த்தர் அவர்களின் பெலனும், கேடகமுமானவர். [QE]
10. [QS]ஆரோனின் குடும்பத்தாரே, கர்த்தரை நம்புங்கள்! [QE][QS2]கர்த்தர் அவர்களின் பெலனும் கேடகமுமானவர். [QE]
11. [QS]கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள்! [QE][QS2]கர்த்தர் அவர்களின் பெலனும் கேடகமுமானவர். [QE][PBR]
12. [QS]கர்த்தர் நம்மை நினைவுக்கூருகிறார், [QE][QS2]கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார். [QE][QS]கர்த்தர் இஸ்ரவேலை ஆசீர்வதிப்பார். [QE][QS2]கர்த்தர் ஆரோனின் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார். [QE]
13. [QS]கர்த்தர் தம்மைப் பின்பற்றும் [QE][QS2]உயர்ந்தோரையும் தாழ்ந்தோரையும் ஆசீர்வதிப்பார். [QE]
14. [QS]கர்த்தர் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் [QE][QS2]அதிகமதிகமாகக் கொடுப்பார் என்று நான் நம்புகிறேன். [QE]
15. [QS]கர்த்தர் பரலோகத்தையும் பூமியையும் உண்டாக்கினார். [QE][QS2]கர்த்தர் உங்களை வரவேற்கிறார்! [QE]
16. [QS]பரலோகம் கர்த்தருக்குச் சொந்தமானது. [QE][QS2]ஆனால் பூமியை ஜனங்களுக்குக் கொடுத்தார். [QE]
17. [QS]மரித்தவர்களும், [QE][QS2]கல்லறைக்குச் செல்பவர்களும் கர்த்தரைத் துதிப்பதில்லை. [QE]
18. [QS]நாம் கர்த்தரை துதிப்போம். [QE][QS2]இது முதல் என்றென்றைக்கும் நாம் அவரை துதிப்போம். [QE][PBR] [QS]அல்லேலூயா! கர்த்தரைத் துதிப்போம். [QE][PBR]