1. இஸ்ரவேல் எகிப்தை விட்டு நீங்கினான். [QBR2] யாக்கோபு அந்நிய நாட்டை விட்டுச் சென்றான். [QBR]
2. யூதா தேவனுக்கு விஷேசமான ஜனங்களானார்கள். [QBR2] இஸ்ரவேல் அவருடைய இராஜ்யமானது. [QBR]
3. செங்கடல் இதைக்கண்டு விலகி ஓடிற்று. [QBR2] யோர்தான் நதியோ திரும்பி ஓடிப்போயிற்று. [QBR]
4. ஆட்டுக்கடாக்களைப்போல் மலைகள் நடனமாடின. [QBR2] ஆட்டுக்குட்டிகளைப் போல் மலைகள் நடனமாடின. [QBR]
5. செங்கடலே, நீ ஏன் ஓடிப்போனாய்? [QBR2] யோர்தான் நதியே, நீ ஏன் திரும்பி ஓடிப் போனாய்? [QBR]
6. மலைகளே, நீங்கள் ஏன் ஆட்டுக் கடாக்களைப்போல் நடனமாடினீர்கள்? [QBR2] மலைகளே, நீங்களும் ஏன் ஆட்டுக் குட்டிகளைப்போல் நடனமாடினீர்கள்? [QBR]
7. யாக்கோபின் தேவனும் கர்த்தருமாகிய ஆண்டவருக்கு முன்னே [QBR2] பூமி நடுங்கி அதிர்ந்தது. [QBR]
8. கன்மலையிலிருந்து தண்ணீர் பெருகி ஓடச் செய்தவர் தேவனேயாவார். [QBR2] கெட்டியான பாறையிலிருந்து நீரூற்றின் வெள்ளத்தைப் பாய்ந்தோடச் செய்தவர் தேவனேயாவார். [PE]